Showing posts with label திரைவிமர்சனம். Show all posts
Showing posts with label திரைவிமர்சனம். Show all posts

Friday, 6 May 2016

24 – திரைவிமர்சனம்



   

சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிப்பில், “யாவரும் நலம்” படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் , A.R.ரஹ்மான் இசையில் சூர்யா , சூர்யா , சூர்யா ,(மொத்தம் மூணு சூர்யா அதான் ) சமந்தா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம்தான் 24.

கதை :
   1990 இல் நடக்கும் கதையில் சேதுராமன் என்ற சூர்யா கால இயந்திரத்தை கண்டுபிடிக்கிறார். இதை அவரிடம் இருந்து ஆட்டையைபோட நிக்கும் அவரது அண்ணன் ஆத்ரேயா (இரண்டாவது சூர்யா ) சேது மற்றும் அவரது மனைவியை போட்டுத்தள்ளுகிறார். இந்த பிரச்சனைக்கு நடுவில் சேதுவின் குழந்தை சரண்யா பொன்வண்ணனிடம் சேர அது வளர்ந்து மணி (மூன்றாவது சூர்யா ) என்ற பெயரில் வாட்சு மெக்கானிக்காக வளர்கிறார்.

   சந்தர்பவசத்தால் டயம் மெஷின் வாட்சு சூர்யாக்கு கிடைக்க அதைவைத்து சமந்தாவை காதலிக்க வைக்கிறார். 26 வருடங்களுக்கு பின் பக்கவாதம் வந்த ஆத்ரேயா தான் குனமாகவேண்டும் என்றால் 26 வருடம் பின்னோக்கி செல்லவேண்டும் என நினைக்கிறார். சூர்யாவிடம் உள்ள கால இயதிரத்தை எப்படி கைப்பற்றினார்? கடந்தகாலம் சென்றாரா? இன்றைய சூர்யாவின் கதி என்ன / சமந்தா சூர்யா காதல் என்னவானது என்பதே மீதி கதை .



+ பாயிண்ட்ஸ் :

  • -    சூர்யா , சூர்யா , சூர்யா , படம் முழுவதும் சூர்யா மட்டுமே. மூன்று வேடத்துக்கும் அவர் காட்டும் வித்தியாசம் கலக்கல்.

  • -    வில்லன் சூர்யாவின் மிரட்டல் நடிப்பு. இறுதி காட்சியில் நக்கலாக பேசுவது.

  • -    வழக்கமான அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், இயல்பான நடிப்பில் கவர்கிறார். அதுவும் சூர்யாவிடம் தனது கடந்த காலத்தை சொல்லும் இடம் சூப்பர்.
  • -    காலம் என் காதலி – பாடல் இசை, செட்டிங் எல்லாம் அருமை.
  • -    ஒளிபதிவு கலக்கல் . டயம் பிரிஸ் காட்சிகளில் ஒளிபதிவாளரின் உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள் .
  • -    பின்னணி இசையில் இசைப்புயல் பின்னி பெடலேடுத்துளார்.
  • -    கிரிகெட் கிரவுண்டில் சூர்யா செய்யும் சேட்டை.

-    -

-பாயிண்ட்ஸ் :


  • -      படத்தின் நீளம். 2.40 மணிநேரம் ஓடுவது ரொம்ப அதிகம். எடிட்டர்   கொஞ்சம் கத்திரியை பயன்படுத்தி இருக்கலாம்.

  • -    சமந்தா –சூர்யா காதல் போர்ஷன்  ரொம்ம்ம்ப நீளம். நமக்கு தாடி முளைபதுபோல தோன்ற ஆரமித்து விடுகிறது.
  • -    தமிழ் சினிமாவின் பார்முலாபடி மூளை இல்லாத படித்த பெண்ணாக சமந்தா .
  • -    ஒரு பாடலை தவிர மற்றது எல்லாம் வேஸ்ட். அதுவும் கிளைமேக்ஸ் முன்பு வரும் பாடல் செம கொடுமை.
  • -    சூர்யா அடிகடி (மூச்சுக்கு முப்பது தடவை ) I AM WATCH machanic என சொல்வது செம போர் .
  • -    சுத்தலான திரைகதை. திரைகதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
  • -    சமந்தா குடும்ப கதை தேவையில்லாத ஒன்று. எவ்வளவு நடிகர்கள் பட்டாளம் அதில். ஆளுக்கு ஒரு டயலாக் என பிரிச்சு கொடுத்துடாங்க.(ஒரே ஒரு டயலாக்தான் )
  • -    அற்புதமான நடிகர் கிரீஸ் கர்னாட் வேஸ்ட் செய்யபட்டது கொடுமை.



மொத்தத்தில் :
தமிழில் சயின்ஸ் பிக்ஷன் படங்கள் வர வேண்டும் என விரும்புபவர்கள் பார்க்கலாம். மற்றவர்கள் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் போனால் கொஞ்சம் சந்தோஷப்படலாம்.

Saturday, 30 April 2016

மனிதன் - திரைவிமர்சனம்





          ரெட்ஜெயின்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து கதாநாயகனாக "நடித்து " இருக்கும் படம் இது. இவருடன் ஜோடியாக ஹன்சிகா , பிரகாஷ்ராஜ், ராதாரவி, விவேக் என ஒரு நட்சதிரபட்டாலமே நடித்துள்ளது. இசை சந்தோஷ் நாராயணன். இயக்கம் அஹமது. இவர் ஏற்கனவே என்றென்றும் புன்னகை என்ற படத்தை இயக்கியவர்.

கதை :

             சாதாரண மொக்க வக்கீலாக உள்ள உதயநிதி தனது முறை பெண் ஹன்சிகா மேல் காதல் கொள்கிறார். ஏதாவது பெயர் சொல்லும் அளவு ஒரு கேசில் செய்துவிட்டுதான் திருமணம் என இருக்கிறார். ஆனால் அவருக்கு அமைவது எல்லாம் காங்கிரஸ் போல மொக்க கேஸ்தான். இந்த சமயத்தில் கார் ஏற்றி பிளாட்பாரத்தில் இருந்தவர்களை கொன்ற வழக்கில் ஆஜராகிறார்.

         இவருக்கு எதிராக ஆஜராவது இந்தியாவில் பிரபல வழக்கறிஞ்சர் பிரகாஷ்ராஜ். அவருடன் மோதி உதயநிதி ஜெய்தாரா? உதயநிதி-ஹன்சிகா காதல் என்னானது ? வழக்கின் தீர்ப்பு பாதிக்கபட்டவர்க்கு சாதகமாக வந்ததா இல்லை வழக்கம் போல சல்மான்கான் தீர்ப்பு போல வந்ததா என்பதை திரையரங்கில் பாருங்கள்.




+ பாயிண்ட் :



முதல் முதலா உதயநிதி நடித்துள்ளார். மொக்க வக்கீலாக வரும்போதும் தனது வழக்கில் ஜெய்க்க வேண்டும் என்ற வெறியுடன் அலையும்போதும் நல்லநடிப்பு.

வழக்கம் போல பிரகாஷ்ராஜ் தான் ஒரு நடிப்பு களஞ்சியம் என காட்டுகிறார். கோர்ட்டில் வாதாடும்போதும், உதயநிதியை நக்கலாக பார்க்கும்போதும், வேகமாக பேசிவிட்டு உடனே கூல் ஆவதும் செம நடிப்பு.

ராதாரவி நடிப்பும் அருமை. நல்ல நடிகர் வாயை கொஞ்சம் அடக்கினால் இன்னும் ஒரு ரவுண்ட் வரலாம்.

வழக்கம் போல விவேக் & கோ இதிலும் உள்ளனர். சில இடங்களில் காமெடி ஒர்கவுட் ஆகிறது. ஆனாலும் விவேக்கை முன்பு ரசித்த அளவு இப்போது ரசிக்கமுடியவில்லை.

வசனங்கள் பட்டையை கிளப்புது. கோர்ட் சீனில் பிரகாஷ்ராஜ், உதயநிதி, ராதாரவி பேசும்காட்சிகள் கைதட்டலை அள்ளுகிறது.

ஹன்சிகா வழக்கமான சினிமா ஹிரோயினுக்கு உள்ள எல்லா குணத்துடனும் வந்துபோகிறார்.

இயக்குனர் அஹமத் தனது திறமையை முழுவதும் பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியையும் ,திரைக்கதையையும் தெளிவாக அமைத்துள்ளார்.




ஒளிபதிவு அருமை.

-பாயின்ட்ஸ் :

பாடல்கள் சுமார்தான். சந்தோஷ் நாராயணன் ஏமாற்றிவிட்டார் என்றே சொல்லலாம். ஆனால் மனுஷன் பின்னணி இசையில் கொடியை நாட்டிவிட்டார்.

ஒரு சாதாரண வக்கீல் பெரிய வக்கிலை மடக்கி ஜெய்பது எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் .

எதிர்பார்க்க கூடிய முடிவு ஆனாலும் நல்ல முடிவு.




மொத்தத்தில் :

குடும்பத்துடன் பார்க்க சிறந்த கோடைகால சிறப்பு திரைப்படம் இந்த மனிதன்.

Sunday, 17 January 2016

கதகளி : சினிமா விமர்சனம்








 விஷால் , கேத்ரின் , இமான், மதுசூதனன் மற்றும் பலர் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவந்தபடம் கதகளி . இசை ஆதி, ஒளிபதிவு பாலசுப்ரமணியன்.கடலூர் பகுதியில் நடப்பதுபோல அமைக்கப்பட்ட கதைகளம் இது.


கதை :

கடலூரில் மீனவ தலைவனாகவும், ரவுடியாகவும் இருப்பவர் தம்பா (மதுசூதனன் ). அவருக்கு துணையாக இரண்டு மச்சான்கள். இவர்களால் நான்கு வருடத்துக்கு முன்பு பாதிக்கபட்டு அதன் பின் வெளிநாடு சென்று திரும்பும் விஷாலுக்கும், விஷாலின் காதலிக்கும் திருமணம் செய்ய முடிவுசெய்யபடுகிறது . இந்நிலையில் தம்பா கொலை செய்யப்பட பழி விஷால் மேல் விழுகிறது. 

கொலையை செய்து யார் என தனது நண்பர்கள் துணையுடன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. கொலையை செய்ய காரணமானவர்கள் யாராக இருக்கலாம் என இயக்குனர் சிலரை அடையாளம் காட்ட அனைவர்மீதும் நமது சந்தேகம் ஓடுகிறது. முடிவு எதிர்பாராத ஒன்று.


+ பாயிண்ட் 

* கொலையாளி யார் என விஷால் தேட தேட நாமும் சேர்ந்து தேடவைக்கும் திரைகதை .

* கிளைமாக்ஸ் சண்டையில் கூட பாட்டை போட்டு கொள்ளும் சினிமாவில் பாடல்களை குறைத்தது .

* கருணாஸ் காமெடி

* சண்டைகாட்சிகளை வளவளவென இழுக்காதது .

* கிளைமாக்ஸ் டுவிஸ்ட் எதிர்பாராத ஒன்று.


- பாயிண்ட் .

* விஷாலின் பிளாஷ்பேக் டம்மியாக உள்ளது. நல்ல வலுவான காரணம் இல்லாம போனதால் வில்லன் மேல் பெரியகோவம் வரவில்லை.

* கேத்ரினக்கு விஷால் மேல் வரும் காதல் காட்சிகள் ரொம்ப போர் .

* பின்னணி இசை பரவாயில்லை ரகம்தான்.

* பாதிக்கு மேல் கதை இழுவையாக செல்வது. விஷால் அண்ணன் எங்கேபோவது என தெரியாமல் முழிப்பது போல கதையும் முழிக்குது.

*பாடல்கள் .

மொத்ததில் ...

பொழுதுபோகல என்றால் பார்க்கலாம். தமிழ் புத்தாண்டுக்கு டிவியில் போட நிறைய வாய்ப்புள்ளது .


இதையும் படிக்கலாமே :

ரஜினி முருகன் - சினிமா விமர்சனம்


Junior Training Officer in TN Govt.( 329 posts)