Thursday 4 August 2016

ஒரே HEADPHONE இல் இரண்டு வெவ்வேறு பாடல்கள் கேட்க உதவும் அப்ளிகேஷன்

 

           இன்றைய நவீன உலகில் எல்லாரிடமும் மொபைல் இருக்கிறது. நாம் பொழுதுபோகாத போது அல்லது பயணம் செய்யும் போது நமக்கு பிடித்த பாட்டை கேட்போம். சில சமயம் நண்பர்களுடன் இருக்கும் போது ஒரே ஒரு ஹெட் போன் இருக்கும். ஆனால் இருவரும்ஒரே பாடலை கேட்க விரும்பாமல் இருக்கலாம். இந்த நிலையில் ஒரேஹெட் போனில் இரண்டு பக்கமும் இரண்டு வெவ்வேறு பாடல்கள் ஓடினால் எப்படி இருக்கும் ?

        இந்த பிரச்சனையை தீர்க்க உதவுகிறது ஒரு அப்ளிகேஷன். இதன் மூலம் இருவர் வெவ்வேறு பாடல்களை ஒரே ஹெட் போனில் கேட்க்கமுடியும்.

பயன்கள் :

* மிகவும் எளிதான அப்ளிகேஷன்.

* மிக குறைந்த நினைவுத்திறன் போதும்.

* தரவிறக்க எளிதானது (< 3 mb)

*இருவர் வெவ்வேறு பாடல்களை ஒரே ஹெட் போனில் கேட்க்கமுடியும்.

* பாடல்களை மாற்றுவது மிக எளிது.

* ஒரு பாடல் மற்ற பாடலை தொல்லை செய்யாது .

* இலவசமான அப்ளிகேஷன் .

இதனை தரவிறக்க :

இங்கே கிளிக் செய்யவும். அல்லது DUAL MUSIC PLAYER என PLAYSTORE இல் தேடவும்.


Saturday 28 May 2016

தயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்கள்

பின்வரும் சில புகைப்படங்களை கர்ப்பிணிகள் , இதயம் பலவினமானவர்கள் , குழந்தைகள் , என்னை போல உள்ள நல்லவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும் .
படங்களை பார்த்து ஏதாவது ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல ..


தல மன்னிச்சு ..

 அடுத்த ஆஸ்கர் ரெடி 
 இதுக்கு பா .ம .க ஒன்னும் சொல்ல மாட்டாங்களா ?
 அடுத்த CSK தலைதான் 
 ரசிகைகள் முத்தமிட்டதால் வந்த வடு ..
 5 வேடங்களில் ...
 இச கார்ட் விளம்பர துதுவராக ..

 சூர்யாவுக்கு போட்டியாக சிங்கம் 3 இல் ..
 டைடானிக் 7D இல் 
 எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ..

டிஸ்கி  : உலகெங்கும் வாழும் கோடிகணக்கான பவர் ஸ்டார் ரசிகர்கள் இதை கோவ படாமல் பார்த்து ரசிக்கும் படி வேண்டுகின்றோம் .


இதையும்  படிக்கலாமே :


நெஞ்சை தொ(சு )ட்ட கவிதை

துப்பாக்கி Vs பில்லா 2

கடந்த மாதத்தில் அதிகம் வாசிக்கபட்ட 5 பதிவுகள்

 

Friday 27 May 2016

படித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)


   நம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான நூல்கள் உங்களுக்காக இலவசமாக...


1. PHP un Tamil

   PHP கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள், கணிபொறி வல்லுனர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நூல் இது. மிக எளிய நடையில் இஸியாக புரியும் வகையில் இந்த நூல் உள்ளது .


நூலை தரவிறக்கம் செய்ய : click above ads   or CLICK HERE

2. தியாகபூமி : கல்கி 

        தமிழின் மிக சிறந்த எழுத்தாளர்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக இடம்பிடிக்கும் அருமையான எழுத்தாளர் கல்கி அவர்களின் நூல் இது. படிக்கச் படிக்க ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுத்து நடை அமைந்துள்ளது . கண்டிப்பாக படித்துபாருங்கள்.



நூலை தரவிறக்கம் செய்ய : click above ads   or CLICK HERE

3. JAVA in Tamil


     

JAVA இன்றைய நிலையில் மிகவும் இன்றியமையாத கணினி மொழியாகும். இதனை  கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள், கணிபொறி வல்லுனர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நூல் இது. மிக எளிய நடையில் இஸியாக புரியும் வகையில் இந்த நூல் உள்ளது .



நூலை தரவிறக்கம் செய்ய : click above ads   or CLICK HERE

4. ADOBE PHOTOSHOP in Tamil

      போட்டோஷாப் இன்று மிகப்பெரிய அளவில் பயன்படுத்த படுகிறது. DTP துறையில் , பத்திரிகை துறையில் என அனைத்து துறைகளிலும் இது மிக முக்கியமாக உள்ளது. இதை கற்றுக்கொள்ள இந்த நூல் மிகவும் பயன்படும்.

 

நூலை தரவிறக்கம் செய்ய : click above ads   or CLICK HERE




Sunday 15 May 2016

பென்சில் : சினிமா விமர்சனம்




         
   
 இதையும் படித்து விடுங்கள் :

AIRTEL இலவச இன்டர்நெட் (ONLY ANDROID USERS)

  அறிமுகஇயக்குனர் மனிநாகராஜ் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ,ஸ்ரீ திவ்யா, விடிவி கணேஷ் சுஜாதா நாயுடு, ஊர்வசி மற்றும் பலர் நடித்த படம் இது. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து தற்பொழுது வெளிவந்துள்ளது.


கதை :
         பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே நிகழும் பிரச்சனைகள், செயல்பாடுகள் பற்றிய கதை. இடையே திகிலுடன் ஒரு கொலையையும் இணைத்து உள்ளார்கள். நல்ல புள்ள பிரகாஷ், எல்லா கேட்ட பழக்கமும் உள்ள “சூப்பர் ஸ்டார்” மகன் நித்தின். பெண்கள் குளிக்கும் அறையில் கேமிரா வைப்பது, பெண்களை மயக்குவது என ஜாலியா இருக்கான்.

      படத்துவக்கத்திலேயே நித்தின் யாரோ ஒருவரால் பென்சிலால் குத்தி கொல்லபடுகிறார். அவரை போன்றது யார்? தனது தீசிஸ் பேப்பரை எரித்ததால் பிரகாஷ் கொன்றாரா? தனது காதலனுடன் இருந்ததை படம்பிடித்து மிரட்டியதால் ஆசிரியர் கொன்றாரா? தன்னை பிளாக்மெயில் செய்ததால் சக மாணவி கொன்றாரா? பள்ளியில் வேலை செய்யும் ஊழியருடன் பிரச்சனை செய்ததால் அவர் கொன்றாரா? பள்ளியில் வளர்சியை தடுக்க நினைக்கும் எதிர் அணி பள்ளி நிர்வாகம் செய்ததா? அடிதடி பிரச்சனையால் குப்பத்து ஆள் செய்தாரா? என பல டுவிஸ்ட் வைத்துள்ளனர். விடை யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

+ பாயிண்ட்ஸ் :

  • திரைகதை. படம் ஆரம்பித்த உடனே கதைக்குள் செல்கிறது. ஒவ்வொரு பிரச்சனையும் ஏன் நடத்தது என அழகான பிளாஸ்பேக் மூலம் விளக்கியுள்ளார்.
  • ஜி.வி.பிரகாஷ் கொஞ்சம் நடிக்கிறார். 

  • ஸ்ரீ திவ்யா ஸ்கூல் பொண்ணு என்பதை ஜீரணிக்க கஷ்டமாதான் இருக்கு. ஆனாலும் அருமை.

  • வில்லன் நடிகர், பார்வையாலேயே கெட்டபெயர் வாங்குகிறார். நல்ல நடிப்பு.
  • வசனம் மிக அருமை. அதுவும் இறுதி காட்சியில் வரும் வசனம் ஒவ்வொன்றும் சாட்டையடி. இன்றைய கல்விமுறை , ஊடகங்கள் நிலை பற்றி அருமையா விளாசியுள்ளனர்.
  • யார் கொலையாளி என்பதை கடைசிவரை மெயின்டைன் செய்தது.
  • இவர் கொலை செய்திருப்பாரோ என எல்லார் மேலும் சந்தோகம் வரவைத்த யுக்தி அருமை.
  • பின்னணி இசை அருமை.


-    பாயிண்ட்ஸ்:

  •  இவ்வளவு கேவலமாக நடக்கும் ஒரு மாணவனை பள்ளி எப்படி இவ்வளவு நாள் வைத்துகொள்கிறது . பள்ளிக்குள் / வகுப்பில் செல் வைத்திருப்பதை பிரின்சிபால் சகஜமாக எடுத்துகொள்வது எப்படி ?
  • ISO சான்றிதழ் வழங்க ஆய்வுக்கு வரும் போது இவ்வளவும் நடக்குது ஆனா ஒரு சத்தம் கூட இல்லை எப்படி ?
  • பாடல்கள் ரொம்ப சுமார்.
  • எதிரி பள்ளியில் பிரச்சனை செய்ய வேறு பள்ளி ஓனரே நேரில் வருவது நடக்கும் காரியமா?
  • மாணவர்களின் சேட்டையை இன்னும் அதிகமாக்கி கலகலப்பாக கொண்டு சென்றிக்கலாம்.


மொத்தத்தில் :

ஒரு நல்ல கிரைம் திரிலரை அனுபவிக்க நினைபவர்கள் போகலாம். ஆனால் முடிவை யாரிடமும் கேட்காமல் போகணும்.


Saturday 14 May 2016

AIRTEL இலவச இன்டர்நெட் (ONLY ANDROID USERS)





நாம எல்லாரிடமும் இன்று ஆண்ட்ராய்ட் போன் உள்ளது. ஆனால் இண்டர்ட்பேக் போட்டே ஏழையாய் போகிறோம். இனி அந்த கவலை இல்லை. AIRTEL பயன்படுத்தும் அனைவரும் இனி இன்டர்நெட்டை இலவசமாக பெறலாம்.

தேவை :

  • ஆண்ட்ராய்ட் போன் 

  • AIRTEL SIM

  • முக்கியமானது அந்த சிம்மில் 0 BALANCE இருக்கவேண்டும்.

எவ்வாறு பயன்படுத்துவது ?

முதலில் DROIDVPN என்ற அப்ளிகேஷனை இங்கே அல்லது GOOGLE PLAYSTORE இல் தரவிறக்கவும்.



அதில் உங்களுக்கு ஒரு கணக்கை உருவாக்கவும்.


உங்கள் USER NAME/ PASSWORD கொடுத்து உள்ளே செல்லவும் :


I TRUST THIS APPLICATION என்பதை தெரிவு செய்யவும்.


CONNECTION PROTOCOL என்பதில் TCP யை தெரிவு செய்யவும்.


அடுத்து HTTP HEADERS என்பதை கிளிக் செய்யவும்.


அதில் கீழே உள்ளவாறு டைப் செய்யவும்.



Host:one.airtel.in
X-Online-Host:one.airtel.in


அடுத்து  free server 6 The Netherlands  என்பதை தெரிவு செய்யவும்.



கீழே உள்ள connect பட்டனை கிளிக் செய்யவும்.


குறிப்பு :

  • free server 6 The Netherlands மட்டுமே இப்போது வேலை செய்கிறது.

  • கண்டிப்பாக உங்கள் சீம்மில் ஜீரோ தொகை இருக்கவேண்டும். இல்லை என்றால் உங்கள் மெயின் பேலன்சில் இருந்து பணம் போகும்.
           Host:one.airtel.in
           X-Online-Host:one.airtel.in     இதை அப்படியே டைப் செய்ய வேண்டும். 
        ஒரே  லயனாக அடிக்க கூடாது.

  • நான் பயன்படுத்தி வருகிறேன். தமிழ் நாட்டில் இது வேலை செய்கிறது.

Friday 6 May 2016

24 – திரைவிமர்சனம்



   

சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிப்பில், “யாவரும் நலம்” படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் , A.R.ரஹ்மான் இசையில் சூர்யா , சூர்யா , சூர்யா ,(மொத்தம் மூணு சூர்யா அதான் ) சமந்தா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம்தான் 24.

கதை :
   1990 இல் நடக்கும் கதையில் சேதுராமன் என்ற சூர்யா கால இயந்திரத்தை கண்டுபிடிக்கிறார். இதை அவரிடம் இருந்து ஆட்டையைபோட நிக்கும் அவரது அண்ணன் ஆத்ரேயா (இரண்டாவது சூர்யா ) சேது மற்றும் அவரது மனைவியை போட்டுத்தள்ளுகிறார். இந்த பிரச்சனைக்கு நடுவில் சேதுவின் குழந்தை சரண்யா பொன்வண்ணனிடம் சேர அது வளர்ந்து மணி (மூன்றாவது சூர்யா ) என்ற பெயரில் வாட்சு மெக்கானிக்காக வளர்கிறார்.

   சந்தர்பவசத்தால் டயம் மெஷின் வாட்சு சூர்யாக்கு கிடைக்க அதைவைத்து சமந்தாவை காதலிக்க வைக்கிறார். 26 வருடங்களுக்கு பின் பக்கவாதம் வந்த ஆத்ரேயா தான் குனமாகவேண்டும் என்றால் 26 வருடம் பின்னோக்கி செல்லவேண்டும் என நினைக்கிறார். சூர்யாவிடம் உள்ள கால இயதிரத்தை எப்படி கைப்பற்றினார்? கடந்தகாலம் சென்றாரா? இன்றைய சூர்யாவின் கதி என்ன / சமந்தா சூர்யா காதல் என்னவானது என்பதே மீதி கதை .



+ பாயிண்ட்ஸ் :

  • -    சூர்யா , சூர்யா , சூர்யா , படம் முழுவதும் சூர்யா மட்டுமே. மூன்று வேடத்துக்கும் அவர் காட்டும் வித்தியாசம் கலக்கல்.

  • -    வில்லன் சூர்யாவின் மிரட்டல் நடிப்பு. இறுதி காட்சியில் நக்கலாக பேசுவது.

  • -    வழக்கமான அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், இயல்பான நடிப்பில் கவர்கிறார். அதுவும் சூர்யாவிடம் தனது கடந்த காலத்தை சொல்லும் இடம் சூப்பர்.
  • -    காலம் என் காதலி – பாடல் இசை, செட்டிங் எல்லாம் அருமை.
  • -    ஒளிபதிவு கலக்கல் . டயம் பிரிஸ் காட்சிகளில் ஒளிபதிவாளரின் உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள் .
  • -    பின்னணி இசையில் இசைப்புயல் பின்னி பெடலேடுத்துளார்.
  • -    கிரிகெட் கிரவுண்டில் சூர்யா செய்யும் சேட்டை.

-    -

-பாயிண்ட்ஸ் :


  • -      படத்தின் நீளம். 2.40 மணிநேரம் ஓடுவது ரொம்ப அதிகம். எடிட்டர்   கொஞ்சம் கத்திரியை பயன்படுத்தி இருக்கலாம்.

  • -    சமந்தா –சூர்யா காதல் போர்ஷன்  ரொம்ம்ம்ப நீளம். நமக்கு தாடி முளைபதுபோல தோன்ற ஆரமித்து விடுகிறது.
  • -    தமிழ் சினிமாவின் பார்முலாபடி மூளை இல்லாத படித்த பெண்ணாக சமந்தா .
  • -    ஒரு பாடலை தவிர மற்றது எல்லாம் வேஸ்ட். அதுவும் கிளைமேக்ஸ் முன்பு வரும் பாடல் செம கொடுமை.
  • -    சூர்யா அடிகடி (மூச்சுக்கு முப்பது தடவை ) I AM WATCH machanic என சொல்வது செம போர் .
  • -    சுத்தலான திரைகதை. திரைகதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
  • -    சமந்தா குடும்ப கதை தேவையில்லாத ஒன்று. எவ்வளவு நடிகர்கள் பட்டாளம் அதில். ஆளுக்கு ஒரு டயலாக் என பிரிச்சு கொடுத்துடாங்க.(ஒரே ஒரு டயலாக்தான் )
  • -    அற்புதமான நடிகர் கிரீஸ் கர்னாட் வேஸ்ட் செய்யபட்டது கொடுமை.



மொத்தத்தில் :
தமிழில் சயின்ஸ் பிக்ஷன் படங்கள் வர வேண்டும் என விரும்புபவர்கள் பார்க்கலாம். மற்றவர்கள் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் போனால் கொஞ்சம் சந்தோஷப்படலாம்.

Saturday 30 April 2016

மனிதன் - திரைவிமர்சனம்





          ரெட்ஜெயின்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து கதாநாயகனாக "நடித்து " இருக்கும் படம் இது. இவருடன் ஜோடியாக ஹன்சிகா , பிரகாஷ்ராஜ், ராதாரவி, விவேக் என ஒரு நட்சதிரபட்டாலமே நடித்துள்ளது. இசை சந்தோஷ் நாராயணன். இயக்கம் அஹமது. இவர் ஏற்கனவே என்றென்றும் புன்னகை என்ற படத்தை இயக்கியவர்.

கதை :

             சாதாரண மொக்க வக்கீலாக உள்ள உதயநிதி தனது முறை பெண் ஹன்சிகா மேல் காதல் கொள்கிறார். ஏதாவது பெயர் சொல்லும் அளவு ஒரு கேசில் செய்துவிட்டுதான் திருமணம் என இருக்கிறார். ஆனால் அவருக்கு அமைவது எல்லாம் காங்கிரஸ் போல மொக்க கேஸ்தான். இந்த சமயத்தில் கார் ஏற்றி பிளாட்பாரத்தில் இருந்தவர்களை கொன்ற வழக்கில் ஆஜராகிறார்.

         இவருக்கு எதிராக ஆஜராவது இந்தியாவில் பிரபல வழக்கறிஞ்சர் பிரகாஷ்ராஜ். அவருடன் மோதி உதயநிதி ஜெய்தாரா? உதயநிதி-ஹன்சிகா காதல் என்னானது ? வழக்கின் தீர்ப்பு பாதிக்கபட்டவர்க்கு சாதகமாக வந்ததா இல்லை வழக்கம் போல சல்மான்கான் தீர்ப்பு போல வந்ததா என்பதை திரையரங்கில் பாருங்கள்.




+ பாயிண்ட் :



முதல் முதலா உதயநிதி நடித்துள்ளார். மொக்க வக்கீலாக வரும்போதும் தனது வழக்கில் ஜெய்க்க வேண்டும் என்ற வெறியுடன் அலையும்போதும் நல்லநடிப்பு.

வழக்கம் போல பிரகாஷ்ராஜ் தான் ஒரு நடிப்பு களஞ்சியம் என காட்டுகிறார். கோர்ட்டில் வாதாடும்போதும், உதயநிதியை நக்கலாக பார்க்கும்போதும், வேகமாக பேசிவிட்டு உடனே கூல் ஆவதும் செம நடிப்பு.

ராதாரவி நடிப்பும் அருமை. நல்ல நடிகர் வாயை கொஞ்சம் அடக்கினால் இன்னும் ஒரு ரவுண்ட் வரலாம்.

வழக்கம் போல விவேக் & கோ இதிலும் உள்ளனர். சில இடங்களில் காமெடி ஒர்கவுட் ஆகிறது. ஆனாலும் விவேக்கை முன்பு ரசித்த அளவு இப்போது ரசிக்கமுடியவில்லை.

வசனங்கள் பட்டையை கிளப்புது. கோர்ட் சீனில் பிரகாஷ்ராஜ், உதயநிதி, ராதாரவி பேசும்காட்சிகள் கைதட்டலை அள்ளுகிறது.

ஹன்சிகா வழக்கமான சினிமா ஹிரோயினுக்கு உள்ள எல்லா குணத்துடனும் வந்துபோகிறார்.

இயக்குனர் அஹமத் தனது திறமையை முழுவதும் பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியையும் ,திரைக்கதையையும் தெளிவாக அமைத்துள்ளார்.




ஒளிபதிவு அருமை.

-பாயின்ட்ஸ் :

பாடல்கள் சுமார்தான். சந்தோஷ் நாராயணன் ஏமாற்றிவிட்டார் என்றே சொல்லலாம். ஆனால் மனுஷன் பின்னணி இசையில் கொடியை நாட்டிவிட்டார்.

ஒரு சாதாரண வக்கீல் பெரிய வக்கிலை மடக்கி ஜெய்பது எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் .

எதிர்பார்க்க கூடிய முடிவு ஆனாலும் நல்ல முடிவு.




மொத்தத்தில் :

குடும்பத்துடன் பார்க்க சிறந்த கோடைகால சிறப்பு திரைப்படம் இந்த மனிதன்.

Thursday 21 April 2016

Honor Holly 2 Plus (16 GB ROM- 2 GB RAM)





       Key Features of Honor Holly 2 Plus

  • 4000 mAh Battery with Smart Power 3.0
  • Dual Sim World Phone - Supports 2G, 3G, 4G and CDMA
  • 13 MP Primary + 5 MP Secondary Camera, with Wide Angle Selfie
  • 2 GB RAM + 16 GB Internal Memory (Expandable Storage Capacity of 128 GB)
  • 1.3 GHz Quad core Processor MTK MT6753P
  • 5 inch HD IPS Display
  • Dual Sim (LTE + LTE)


                     Specifications of Honor Holly 2 Plus (Gold, 16 GB)

GENERAL FEATURES
Brand Honor
Handset Color Gold
Form Bar
SIM Size Micro SIM
Call Features Loudspeaker
Model Name Holly 2 Plus
Touch Screen Yes
SIM Type Dual Sim, LTE + LTE, (Dual Standby)
In the Box Handset, Charger (5V/2A), Data Cable, Warranty Card, User Manual








Camera
Video Recording Yes, 1280 x 720
Flash LED
Secondary Camera Features Fixed Focus, HD Video Recording
HD Recording HD
Rear Camera Yes, 13 MP
Front Facing Camera Yes, 5 MP
Primary Camera Features Auto Focus



Multimedia
Video Player Yes, Supports MP4, 3GP, H.264, H.263, DivX, XviD, MKV, HD
Music Player Yes, Supports MP3, WAV, OGG, MID, AMR, AAC, AAC+
FM Yes



Internet & Connectivity
Network Type 4G, 3G, 2G, CDMA
Audio Jack 3.5 mm
Preinstalled Browser Android
Bluetooth Yes, v4, Supported Profiles (LE)
Navigation Technology A-GPS, GLONASS, with Google Maps
Internet Features Email
Wifi Yes, 802.11 b/g/n
GPRS Yes, Class 12
USB Connectivity Yes, micro USB, v2, Not OTG Compatible
Tethering USB, Wi-fi Hotspot



Other Features
Sensors G-Sensor, Proximity Sensor, Light Sensor
Call Memory Yes
Supported Languages Supports 4 Languages: Simplified Chinese, Traditional Chinese, US English, Hindi
Important Apps Android Native
Additional Features Wi-Fi Direct, Standby Time (4G): 720 hrs, Calendar, Notes, Themes, Calculator, Flashlight, Video Backup, Weather, Clock, Sound Recorder, Reverse Charging



Display
Resolution HD, 1280 x 720 Pixels
Other Display Features Full Touch Screen Supporting 5-point Multi-touch
Type IPS LCD
Size 5 inch
Color 16 M



Dimensions
Weight 160 g
Size 71.8x143.1x9.7 mm



Warranty
Warranty Summary 1 year manufacturer warranty for Phone and 6 months warranty accessories.
Battery
Talk Time 18 hrs (2G)
Removable Battery No
Type Li-Polymer, 4000 mAh



Memory and Storage
Expandable Memory microSD, upto 128 GB
Memory 2 GB RAM, 16 GB ROM
Internal 16 GB




Platform
Operating Freq GSM - 900, 1800, 1900; UMTS - 900, 2100; 4G LTE (FDD) - Band 1 (1900), Band 3 (1800), LTE (TDD) - Band 38, Band 39, Band 40 (2300); CDMA BC0: 800M
OS Android v5.1 (Lollipop)
Graphics Huawei EMUI 3.1 LITE
Processor 1.3 GHz + Cortex-A53 MTK MT6735P, Quad Core