Monday, 28 March 2016

திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் கவனத்திற்கு

           திருமண வாழ்கை நலமாக அமைய நல்ல மனம் எப்படி முக்கியமோ அதுபோல நல்ல மணம் கொண்ட உணவு முக்கியம் . சமையல் சரியில்லாமல் போவதுதான் குடும்பத்தில் பல பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் ஆகும் . 
                    இந்த பதிவு  திருமணமான ஆண்களுக்கும் (நிறைய வீட்டில் ஆண்கள் சமைக்கின்றார்கள் . "உங்க  வீட்டில் ? " என நீங்கள் கேட்பது என் காதில் விழவில்லை .). திருமணமாகாத பல ஆண்கள் தனியாக தங்கி வேலை பார்ப்பதால் பெரும்பாலும் அவர்களே சமைக்கின்றனர் . எனவே இது ஆண்களுக்கும் , பெண்களுக்கும் தேவையான பதிவு என எண்ணுகிறேன் .

             கிழே சில உணவு வகைகளை எப்படி செய்வது என லிங்க் கொடுத்துள்ளேன் . படித்து, செய்து சாப்பிட்டு பாருங்கள் . பின்பு ( இருந்தால் ) எப்படி இருந்தது என கமென்ட் செய்யவும் .
 டிஸ்கி : தலைப்பும் , முதல் படமும் சும்மா ஒரு இதுக்கு ......

Sunday, 27 March 2016

ANDROID மொபைல் காணாமல் போனால் எளிதில் கண்டுபிடிக்க உதவும் APPLICATION .
 


இன்று பெரும்பாலான மக்களிடம் இருக்கும் ஒன்று மொபைல். செல் இல்லாத மனிதன் அரைமனிதன் எனும் நிலை வந்துவிட்டது . அதிலும் சுமார்ட் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது . இன்னொரு பக்கம் மொபைல் திருட்டு போவது அல்லது தவற விடுவதும் அதிகமாகிறது .

இவ்வாறு திருட்டு / காணாமல் போன உங்கள் மொபைலை எளிதில் கண்டுபிடிக்க ஒரு அப்ளிகேஷன் உள்ளது . அதுதான் 360 SECURITY,

  • இதை GOOGLE PLAY STORE இல் அல்லது இங்கே கிளிக் செய்து தரவிரக்கிகொள்ளவும் .
  • இதை உங்கள் போனில் நிறுவிக்கொள்ளவும் .
  • அதில் உள்ள மெனுவில் ANTI-THEFT என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும் .
  • அதில் உங்கள் விருப்பமான கடவு சொல்லை (PASSWORD) அமைக்கவும் . இதுக்கு ANTI-THEFT CODE என பெயர்.
  • ENABLE ANTI-THEFT என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
  • உங்கள் மொபைல்லில் சிம் மாற்றபட்டால் எந்த எண்ணுக்கு SMS வரவேண்டும் என செட் செய்யவும் .( உங்கள் வீட்டு எண்ணை அல்லது நண்பர்கள் என்னை கொடுக்கவும் ).


அவ்வளவுதான் , இனி உங்கள் மொபைல் காணாமல் போய் யாராவது அதில் வேறு சிம் கார்ட் போட்டால் அந்த என்னில் இருந்து நீங்கள் செட் செய்த எண்ணிற்கு ஒரு SMS வரும் . இதன் மூலம் யார் உங்கள் போனை பயன்படுத்துகிறார்கள் என கண்டுபிடிக்கலாம் .
இதன் பயன்கள் :


·         நீங்கள் SMS மூலம் உங்கள் போனில் உள்ள தகவல்களை உடனே அழிக்கலாம் .
·         SMS மூலம் போனை லாக் செய்யலாம் .
·         GOOGLE MAP மூலம் போனின் இடத்தை கண்டுபிடிக்கலாம் .
·         போனில் அலாரத்தை உடனே செயல்படவைக்கலாம் . இதனால் எடுத்தவர்கள் அருகே இருந்தால் எளிதில் கண்டுபிடிக்கலாம் .
·         இதில் தேவையில்லாத கால் , SMS பிளாக் செய்யமுடியும் .
·         வைரஸ் எதிர்ப்பு புரகிராம் உள்ளடங்கியது .
·         தேவையில்லாத JUNK FILE, TEMP FILE ஆகியவற்றை அழிக்க வசதி உண்டு .
·         போனின் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது .குறிப்பு : நீங்களே ஏதாவது காரணத்தால் சிம் மாற்ற வேண்டி இருந்தால் ANTI-THEFTDISABLE செய்துவிட்டு மாற்றவும் . இல்லை எனில் நீங்கள் போடும் சிம்மில் இருந்தும் SMS போகும் . SMS க்கு காசும் போகும் ..
Saturday, 26 March 2016

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 1


           இன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை தெரிந்துருப்போம் . பல தளங்கள் தெரியாமல் இருக்கலாம் . இதோ உங்களுக்காக சில தளங்கள் .கிரிகெட் பற்றி அறிய ..

www.total-cricket.com

பைனான்ஸ் தொடர்பாக அறிய...
வாழ்த்துக்கள் அனுப்ப ....


டிஸ்கி : விரைவில் இன்னும் இதுபோல பலதளங்களை பாப்போம் .

                          

Thursday, 24 March 2016

படித்து பாதுகாக்கபட வேண்டிய நூல்கள் (free download) - பகுதி 2


                சில புத்தகங்கள் பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படும், பயணம் செய்யும் போதும், தூக்கம் வராத போதுமே உதவும். சில நூல்கள் நம்மை அறிந்து கொள்ள , நாட்டை, வரலாற்றை , நமது சிந்தனை திறனை அறிந்துகொள்ள உதவும். அப்படிபட்ட நூல்கள் படித்ததுடன் தூக்கி ஏறிய முடியாது. படித்த பின் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படி பாதுகாக்க வேண்டிய சில நூல்களை பாப்போம்.

1. காரல்மார்ஸ் : கூலி , உழைப்பும்  மூலதனமும் 


             காரல்மார்க்சை அறியாத மனிதர்களே இருக்க முடியாது.  அவரின் மூலதனம் நூல் உலகம் முழுவதும் பிரபலமானது. அவரின் கருத்துகள் பல புதிய பரிமாணத்தை உழைபாளர்களிடம் உருவாக்கியது. பல புரட்சிகளுக்கு வித்திட்டது இவரின் நூல்கள் என்றால் அது மிகையல்ல.


FOR DOWNLOAD :: 
      கீழே உள்ள விளம்பரத்தை கிளிக்  செய்யவும்.


ALTERNATE DOWNLOAD LINK :      CLICK HERE

Hot Downloads

2.சுவாமி விவேகானந்தர் : பொன்மொழிகள் 

                  இளைஞ்சர்களை வழிநடத்தும் பல நல்ல கருத்துகளை சொன்ன புனிதர். சிக்காகோ சொற்பொழிவின் மூலம் வெளிநாட்டவரையும் தன்பால் இழுத்த ஆன்மிக செம்மல். இவரின் பல கருத்துகள் எந்த காலத்திலும் ஏற்றுநடக்க வேண்டிய ஒன்றாகும்.

FOR DOWNLOAD :: 
      கீழே உள்ள விளம்பரத்தை கிளிக்  செய்யவும்.


ALTERNATE DOWNLOAD LINK :      CLICK HERE

Hot Downloads
3. புதுமைபித்தன் : சிறுகதை தொகுப்பு.

              சிறுகதைகள் பலவகையில் இருந்தாலும் பலர் எழுதினாலும் அதன் மூலம் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் மிக சிலரே, அவர்களில் மிகவும் முக்கியமானவர் புதுமைபித்தன். தனக்கென தனி பாணி வகுத்துக்கொண்டு பல அருமையான சிறுகதைகள் படைத்துள்ளார். அவற்றில் சில கதைகளை தொகுத்து வந்த நூல்தான் இது.

FOR DOWNLOAD :: 
      கீழே உள்ள விளம்பரத்தை கிளிக்  செய்யவும்.

ALTERNATE DOWNLOAD LINK :      CLICK HERE

Hot Downloads

4. சுகபோகானத்தா : மனசே ரிலாக்ஸ் பிளிஸ் 

                ஆனந்த விகடனில் தொடராக வந்து பலரின் பாராட்டுகளை பெற்ற இது புத்தகமாகவும் வந்து வெற்றிபெற்றது. நமது மனதை எப்படி கட்டுபாடுக்குள் வைத்து கொள்வது , அதனை அடக்கி ஆள்வது எப்படி என்பதை எளிமையாக , நகைசுவையாக சொல்லியிருப்பார்  ஆசிரியர். படித்து பாருங்கள் .

FOR DOWNLOAD :: 
      கீழே உள்ள விளம்பரத்தை கிளிக்  செய்யவும்.

ALTERNATE DOWNLOAD LINK :      CLICK HERE

Hot Downloads


Tuesday, 22 March 2016

இலவசமாக சில அருமையான நூல்கள் : பகுதி 1


          புத்தகங்கள் படிப்பது என்பது இப்போது அருகிவருகிறது. காரணம் அனைவரும் போனை நொண்டிக்கொண்டே இருப்பதால் , எனவேதான் E-Book எனப்படும் நூல் வகை இப்போது பிரபலமாக உள்ளது. பழைய நூல்கள் முதல் இன்றைய தினசரிகள் வரை இ-புக் வடிவில் வர துவங்கிவிட்டது.அப்படி உள்ள நூல்களில் அருமையான  சில நூல்களை உங்களுக்கு வழங்குகிறோம்.

1. மதன்- வந்தார்கள் வென்றார்கள் 


             ஆனந்தவிகடனில் பணிபுரியும் போது மதன் எழுதிய நூல் இது. கார்டுனிஸ்ட் ஆக இருந்தாலும் வரலாறை தன்னால் அருமையாக எழுதமுடியும் என நிருபித்தவர். வரலாறு என்பதே படிக்க போரடிக்கும் என நினைபவர்களை கூட சந்தோஷமாக படிக்க வைத்த பெருமை மதனை சேரும்.  மன்னர்களின் ஆட்சிமுறை , படையேடுபுகள் , வெறி தோல்விகள் என அனைத்தையும் விரிவாக , விளக்கமாக எழுதிய நூல் இது.தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்

                                                      அல்லது 
                                        Click here to downloadHot Downloads


2. வைரமுத்து - தண்ணிர் தேசம்
 

              கவிபேரரசு என பாராட்டப்படும் வைரமுத்து ஆனந்தவிகடனில் எழுதிய தொடர் இது. புதினத்தை கவிதை வடிவில் எழுதிருப்பார். அப்போது மிகவும் பிரபலமாக பேசபட்ட தொடர் இது. காதலன், காதலி இருவரும் ஒரு படகில் பயணம் செய்யும் போது நிகழும் சம்பவங்களே கதை. "காத்திருந்தால் தண்ணிரை கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிகட்டி ஆகும்வரை காத்திருந்தால்" என்ற அருமையான வரி இதில்தான் வரும்.
தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்

                                                      அல்லது 
                                        Click here to downloadHot Downloads

3. வடிவேல்- வெடி வெடி வடிவேலு 


              இதுவும் ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்தான். வடிவேலு புகழின் உச்சியில் இருந்தபோது அவரின் வாழ்கை சம்பவங்களின் தொகுப்பை அவரே எழுதிய தொடர் இது. சினிமாவுக்கு எப்படி வந்தார், என்ன என்ன பிரச்சனைகளை எதிர்கொண்டார், எப்படி சமாளித்தார் என்பதை நகைசுவையுடன் சொல்லியிருப்பார்.
தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்

                                                      அல்லது 
                                        Click here to downloadHot Downloads

4. சுஜாதா : பேப்பர் வார் 

         அமரர் சுஜாதா எழுதிய கட்டுரை இது. அறிவியலை சாமான்ய மனிதரும் புரியும் வகையில் எழுதிய மிக சில எழுத்தாளர்களில் ஐவரும் ஒருவர். அறிவியல் மட்டும்  இன்றி புராணகதை, சமுக கதைகள் , கவிதைகள், வெண்பாக்கள், பாசுரம் என இவர் எழுதாத துறையே இல்லை எனலாம்.தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்

                                                      அல்லது 
                                        Click here to downloadHot Downloads