Tuesday 11 June 2013

வாங்க கூகுளை ஆட்டி வைக்கலாம்.






இனைய உலகின் முடிசூடாமன்னன் கூகுள். அது நமக்கு பல வசதிகளை தருகிறது. அதில் சில விஷயங்கள் சும்மா நம்மை மகிழ்விக்க செய்யுமாறு வடிவமைத்துள்ளது. அது போல சில விஷயங்களை இன்று பார்ப்போம்.

இவை அனைத்திற்க்கும் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் உலவியில்(Browser) www.google.com என டைப் செய்யவும். அதில் வரும் Search Text Box இல் உங்களுக்கு வேண்டியதை டைப் செய்து I’am Feeling Lucky என்ற பட்டனை கிளிக் செய்யவும். சிறிது  நேரம் காத்திருந்து பாருங்கள் என்ன நடக்குதுனு.

  1. Google Gravity:

இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள அனைத்து ஏழுத்துகளும் கீழே விழுந்துவிடும்.

  1. Epic Google:

இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள அனைத்து ஏழுத்துகளும் உங்கள் திரையின் அளவுக்கு பெரிதாக மாறிகொண்டே வரும்.

  1. Google Sphere:

இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள அனைத்து ஏழுத்துகளும் Search Text Box ஐ சுற்றி சுற்றி வரும்.

  1. Google Hacker:

இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள தகவல்கள் யாரோ ஒருவரால் மற்றவர்கள் புரிந்து கொள்ளமுடியாதபடி மாற்றி அமைக்கபட்டதுபோல் மாறிவிடும்.

  1. Annoying Google:

கூகுள் என்ற வார்த்தைக்கு பதில் Annoying Google என வரும் இன்னும் சில மாற்றங்களும் வரும்.

  1. Google Loco:

இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள கூகுள் லோகோ(LOGO) ஜாலியாக நடனமாடும்.





Wednesday 5 June 2013

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..






பதிவு திருட்டு என்பது இப்பொழுது சகஜமாகிவிட்டது. நாம் கஷ்ட்டபட்டு , மூளையை கசக்கி( இருக்குறவங்க..) எழுதும் பதிவுகளை கஷ்டபடாமல் காப்பி அடித்து அவர்கள் தளத்தில் பயன் படுத்தி கொள்கின்றனர்.  இது போல உள்ள திருட்டை தடுக்க சில வழிகள்.


1) முதலில் உங்கள் Account ல் நுழையுங்கள்.

2) Dashboard = > design க்குள் செல்லுங்கள்.

3) Add gedgetAdd HTML/Javascript  செலக்ட் பன்னுங்க.

4) அதில் கீழ் வருபவதை copy பன்னி paste பன்னவும்.

ஐயா.. சாமி இது கஷ்டப்பட்டு நான் எழுதிய பதிவு, எனவே தயவு செய்து இதை திருடாதீர்கள்.

அல்லது

இதுலாம் ஒரு பதிவுனு திருட வந்து இருக்கியே உன்ன நினைத்தால் சிரிப்பு வருது.

அல்லது

அறிவுகெட்டவர்கள், வீணாபோனவர்கள், விளங்காதவ்ர்கள், உருப்படதாவர்கள், (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை போட்டுகொள்ளவும்) மட்டும் இந்த பதிவை காப்பி எடுக்கலாம்.

அல்லது

இது மலையாள ஷகிலா(சாரி) சாமியாரிடம் மந்திரிச்சு உருவாக்கிய வளைதலம். இதில் இருந்து பதிவை திருடுபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள்.



        5) இதை Add பன்னி save செய்யவும்.



இதையும் மீறி யாராவது உங்கள் பதிவை திருடினால்

நீங்கள் பதிவே எழுதாதிர்கள், அப்புறம் எப்படி திருடுவார்கள் பார்போம்.