Thursday 26 June 2014

விஜய் , அஜித் , சூர்யா- Face book இல் படும்பாடு

விஜய் , சூர்யா , அஜித் முவரும்  இப்போது facebook இல் அதிகம் ஒட்டப்படும் நடிகர்கள் . அவர்களை கிண்டல் செய்து பல புகைப்படங்கள் வருகின்றது . அவற்றில் சில உங்களுக்காக ... இவையனைத்தும் ஜாலிக்காக மட்டுமே , யாரும் கமெண்டில் இந்த அப்பாவியை காய்ச்சி எடுக்கவேண்டாம் .














டிஸ்கி : மூவர் ரசிகர்களையும் திருப்தி படுத்திவிட்டேன் என நினைக்கிறன் .

டிஸ்கி  : இது பழைய பதிவை கொஞ்சம் பட்டி டிங்கரின்க் பார்த்தது .

இதையும் படிக்கலாமே ?

Tuesday 24 June 2014

ரசித்து சிரிக்கலாம் வாங்க




நீங்கள் பார்த்து  சிரித்து மகிழ , முகநூலில் நான் ரசித்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . நீங்களும் ரசியுங்கள் 


அப்பனை போல பிள்ளை !!!






ரொம்ப புத்திசாலி (நம்ம தீவிரவாதி சதீஷ் போல )






அட அட சரியா சொல்லிடான் 




ஹீ.... ஹீ ...



கரெக்ட் 





சோக கீதம்  ...



டேய் !! யாருடா(டி ) நீ ???






இப்படியும் நடக்கும்




வருங்கால இந்தியன்



திருட்டை தடுக்க புது ஐடியா



இதுதான் உண்மை நிலை




ரொம்ப ஸ்ட்ராங்கா படிக்காலாம் 



பயம் மாறாது



அனுபவம்




இதையும் படிக்கலாமே ?

Thursday 19 June 2014

விஜய் : அடுத்த சூப்பர்ஸ்டார் ?





தமிழ் திரையுலகில் சிவாஜி எம் ஜி யார் க்கு பின் ரஜினி கமல் என இருந்தது . பின்பு அது விஜய் , அஜித் என ஆனது . அவர்கள் அதை சீரியஸாக எடுத்துகொள்கிரர்களோ இல்லையோ , ரசிகர்கள் இதை பெரிய விவாதமாகவே எடுத்துகொல்கின்றனர் “. ஒவ்வொரு முறையும் இவர்கள் படம் தனியாக வந்தாலே மாஸ் காட்ட நினைபவர்கள் , ஒன்றாக வந்தால் ஆடும் ஆட்டத்தை கேட்கவா வேண்டும் .

இருவர் ரசிகர்களின் மனதிலும் அவரவர் நடிகரை அடுத்த சூப்பர்ஸ்டாராக நினைத்துகொள்கிரர்கள் . யார் வந்தாலும் ரஜினியின் இடத்தை பிடிக்கமுடியாது என்பது வேறு விஷயம் ஆனால் அவரை நெருகுன்கிறது யார் என்பதே இன்றைய மில்லியன் டாலர் கேள்வி .

சமிபத்தில் “குமுதம் “ பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பு ஒன்றில் விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் தெரிவு செய்துள்ளனர் . அவர் 12,80,300 ஓட்டுகள் பெற்றுள்ளார் . அடுத்ததாக அஜித் 12,17,650 ஓட்டுகள் பெற்றுள்ளார் .

சமிபத்தில் வெளிவந்த துப்பாக்கி , ஜில்லா படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது . அடுத்து வரவிருக்கும் கத்தி மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . கடைசி இரண்டுபடங்களும் விஜய் மார்கெட்டை பெருமளவில் எகிரவைத்துள்ளது . ரஜினி போலவே விஜயின் படங்கள் பூஜை போட்டதுமே விற்பனையகிவிடுகிறது . வசூல் ராஜா என விநியோசதர்களால் அழைக்கபடுகிறார் .



இதன் அடிப்படையிலும் , ரசிகர்கள் ஓட்டு போட்டும் விஜயை தெரிவு செய்துள்ளனர் .விஜய் முதலிடம் பெற்றதை முகநூலில் அவர் ரசிகர்கள் பயங்கரமாக / சந்தோஷமாக பகிர்ந்து வருகின்றனர் .


Tuesday 17 June 2014

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 2





கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி :1 

கடந்த பகுதியில் சில முக்கிய இணைய தளங்களை பார்த்தோம் இன்றும் அதுபோல பலதளங்களை பார்ப்போம் .இன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை தெரிந்துருப்போம் . பல தளங்கள் தெரியாமல் இருக்கலாம் . இதோ உங்களுக்காக சில தளங்கள் .
கல்வி தொடர்பான தளங்கள் :




கல்வி தொடர்பான தளங்கள் :


















மேலும் தெரிந்துகொள்ள :  CLICK HERE


டிஸ்கி : இதுபோல  இன்னும் பல தளங்களை விரைவில் பார்க்கலாம் .


இதையும் படிக்கலாமே ?

Monday 16 June 2014

வை .கோ மற்றும் வாலியின் புத்தகங்கள் இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா ?






                   தமிழகத்தில் "நடக்கும்" போராட்டங்களில் அதிக அளவில் கலந்துகொண்டவர் வை .கோ அவர்கள் . கட்சி சார்பற்று , மக்களுக்காக களத்தில் இறங்கி போராட தயங்காதவர் இவர் . ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை முதல் முல்லை பெரியார் பிரச்சனை வரை மக்களுக்காக தெருவில் இரங்கி போராடியவர் . ஆனாலும் இவரை மக்கள் தேர்தலில் ஜெய்க்க வைபதில்லை என்பது கொடுமையான விஷயம் .


                  இவரின் போராட்டத்தின் போது பல வழக்குகளை சந்தித்துள்ளார் .24/09/2007 அன்று தஞ்சையில் வை கோ பேசிய இல்லை இல்லை ஆற்றிய உரையின் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டுள்ளனர் . அந்த புத்தகத்தின் மின் பதிப்பை (E-BOOK) உங்களுக்காக வழங்குகிறேன் .






தரவிறக்கம் செய்ய : வரலாறு சந்தித்த வழக்குகள்

============================================================================


வாலியின் “நினைவு நாடாக்கள் “


             வாலிப கவிஞர் என அன்புடன் அழைக்கபட்ட மறைந்த பாடலாசிரியர் வாலி அவர்கள் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வந்தது “நினைவு நாட்கள் “ என்னும் தொடர் . தனது வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் , தான் கடந்து வந்த பாதையில் இருந்த நல்ல , கெட்ட சம்பங்கள் , தான் சந்தித்த பலதரபட்ட மனிதர்கள் , அவர்களின் குணநலன்கள் பற்றி விரிவாக , மிக அருமையான எழுத்து நடையில் எழுதியிருப்பார் வாலி அவர்கள் .

   264 பக்கங்கள் உள்ள இந்த நூல் படிக்க படிக்க இன்னும் ஆவலை தூண்டும் நூல் ஆகும் . நமக்கு தெரிந்த மனிதர்களின் வித்தியாசமான முகங்களை பற்றி வாலி விவரித்து இருப்பார் .

தரவிறக்கம் செய்ய : “நினைவு நாடாக்கள் “

இதையும் படிக்கலாமே :






முண்டாசுபட்டி : திரைவிமர்சனம்

 

அலட்சியம்






Saturday 14 June 2014

முண்டாசுபட்டி : திரைவிமர்சனம்




இது குறும்படமாக வந்து பெரும் வரவேற்பையும் , பாராட்டையும் பெற்ற ஒரு காமெடி படம் , அதை முழுநீள படமாக எடுத்துள்ளனர் . குறும்படத்தில் இருந்த வேகம் , காமெடி இதில் இருந்ததா, இயக்குனர் ராம்குமார் வெற்றி பெற்றாரா  என பார்ப்போம் .

   கதை 1982 வருடம் நடைபெறுகிறது , போட்டோ எடுத்தாலே இறந்துவிடுவோம் என்ற மிகப்பெரிய நம்பிக்கையில் வாழும் மக்களை கொண்டது “முண்டாசுபட்டி “. இறந்தவர்களை மட்டுமே போட்டோ எடுப்பது இவர்கள் வழக்கம் . அப்படி போட்டோ எடுக்க வரும் ஹீரோ விஷ்ணு அங்கு உள்ள நந்திதாவை காதலிக்க இவர்கள் காதல் என்ன ஆனது என்பதை சைட்டிஷ் வைத்துகொண்டு காமெடியை மெயின்ஆக வைத்து கொண்டு விளையாடியுள்ளனர் .

விஷ்ணு காமெடியில் நன்றாக நடிக்க முயர்சிசெய்துளார் . நந்திதா அந்த கணங்கள் மட்டுமே பல பாஷை பேசுது . இவரின் நடிப்பில் பெரிய அளவில் சொல்ல ஒன்றும் இல்லை . படத்தில் இரண்டு துணை நடிகர்கள் தான் பெரிய அளவில் பெயர் வாங்குகிறார்கள் , பெயர் மட்டுமல்ல கைதட்டலுக்கும் இவர்கள்தான் காரணம் . ஒன்று காளி இவர் விஷ்ணுவின் நண்பராக படம் முழுவதும் வருகிறார் . இவர் அடிக்கும் பல சந்தானம் ஸ்டைல் டயலாக்க்கு செம ரெஸ்பான்ஸ் தியட்டரில்.
 மற்றவர் முனிஸ் கான் என வரும் ராமதாஸ் . இவர் வந்த பின்தான் படம் வேகம் பிடிகிறது . பல காட்சிகள் காமெடி சரவேடி . போட்டோவை பார்த்து புலம்புவது நச் . ஆனந்த ராஜ் வருகிறார் , போகிறார் .

+ பாயிண்ட்ஸ் :
·         காமெடி காட்சிகள்
·         நகைசுவை வசனங்கள்
·         கலை இயக்குனரின் உழைப்பு
·         குடும்பத்துடம் பார்ப்பது போல அமைக்கபட்ட திரைகதை
·         ஓவர் சென்டிமென்ட் போட்டு புழியாதது
·         காளி , ராமதாசின் நடிப்பு
·         நந்திதா கண் (!!!)

பாயிண்ட்ஸ் :

·         பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்
·         படத்தின் நீளம் .
·         முதல் பாதியில் ஆரம்பம் .



கடைசியாக :


     ரொம்ப எதிர்பார்க்காம போனா கண்டிப்பா சிரித்துவிட்டு வரலாம் . குடும்பத்துடன் பார்க்கலாம் .

Tuesday 10 June 2014

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 1









இன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை தெரிந்துருப்போம் . பல தளங்கள் தெரியாமல் இருக்கலாம் . இதோ உங்களுக்காக சில தளங்கள் .



கிரிகெட் பற்றி அறிய ..














மேலும் படிக்க :

                                  

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 1






  இதையும் படிக்கலாமே :

அலட்சியம்

 

ஓவியன்