Tuesday, 28 May 2013

அஜித் Vs ஆர்யா மற்றும் சன் டிவிஒவ்வொரு 8 மாதத்திற்குள்ளும் ஒரு படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்திற்கு செல்லவேண்டும் என்று அஜீத் முடிவு செய்துள்ளார். இந்த முடிவை அவர் மங்காத்தாவில் இருந்தே பின்பற்றி வருகிறார். மங்காத்தாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, பில்லா 2விலும் நடித்தார். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கும் படமும் முடியும் தருவாயில் உள்ளது. இதன்பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். விருதுகள் வாங்கி குவிப்பதில் ஆசை இல்லை எனவும், ரசிகர்களின் பாராட்டுகள் கிடைத்தாலே போதும் எனவும் அஜீத் கூறியுள்ளார்.

============================================================


அஜித்துக்கும், ஆர்யாவுக்கும் உக்கிரமான சண்டை
எல்லோருமே கேள்விப்பட்டிருக்கலாம். சமீபத்துல அஜித்தும், ஆர்யாவும் சண்டை போடற சீன் ஒன்றை விஷ்ணுவர்தன் எடுத்ததை. அப்போதான் நடந்தது இந்த சம்பவம்.

சம்பவம், சம்பவம்னா ஏதோ சீரியஸ் சம்பவம்னு நினைச்சு பதற்றப்பட வேண்டாம். அஜித்துக்கும், ஆர்யாவுக்கும் உக்கிரமான சண்டையை ஸ்டன்ட் மாஸ்டர் கிரியேட் பண்ணியிருக்கார். அதுல அஜித்தை, ஆர்யா அடிக்கிற மாதிரியும் சீன் இருக்காம்.

ஆனா அஜித் ரசிகர்கள் என்ன சொல்வாங்களோன்னு ஆர்யா தயங்க, “அதெல்லாம் என் ரசிகர்களை நான் சமாதானப் படுத்திக்கிறேன். நீ தயங்காம நடி. அப்பதான் சீன் நல்லா வரும்..!”ன்னு அஜித் தைரியம் கொடுத்திருக்கார்.

அதேபோல அடுத்து ஆர்யாவை அஜித் வெளுக்கிற சீன். அப்போ ஆர்யாகிட்ட அஜித், “உங்க ரசிகர்கள் இதை எப்படி எடுத்துப்பாங்க..?”ன்னு கேட்க, “அது ஒரு நாலு பேர்தான் சார்… நான் சொல்லிக்கிறேன்..!”ன்னதுல அஜித்தே சிரிச்சுட்டாராம்.

‘தல’ யையே சிரிக்க வச்ச தயாளன் ஆர்யா..!

தல யை பெருமைபடுத்திய சன்   டிவிநன்றி : Thala always amarkalam FACEBOOK PAGE

TATA DOCOMO : "கஷ்ட"மர் கேர்


கடந்த முன்று வருடங்களுக்கு முன் TATA DOCOMO PREPAID SIM வாங்கினேன் . கால் கட்டணங்கள் வினாடிக்கு அரை பைசாவும் , SMS இலவசமாகவும் இருந்ததால் அதையே பயன்படுத்தினேன் . மற்ற நிருவனகளுடன் ஒப்பிடும் போது BOOSTER PACK மிகவும் கம்மி .( வோடபோன் இல் 225 ரூபாய் உள்ளது இதில் வெறும் 52 ரூபாய் தான் ). ஏதேனும் குறை என்றால் 198 க்கு அடித்தால் உடனே சரி செய்வார்கள் , தவறாக எடுத்த பணத்தை உடனே கொடுப்பார்கள் .

ஆனால் இப்பொழுது ???

நிகழ்ச்சி 1:

CALLER TUNE நான் கேட்காமல் வைத்து விட்டு 120 ரூபாய் எடுத்தார்கள் , புகார் செய்ததும் 30 திருப்பி கொடுத்தனர் . மீதி இரண்டு நாளில் கிடைக்கும் என்றனர் . இரண்டு நாள் கழித்து கேட்டதும் மீண்டும் அதே பதில் இன்னும் இன்ரண்டே நாள் என்று . மறுபடி கேட்ட பொழுது தவறாக எடுக்கபட்ட பணம் இரண்டு நாளில் திருப்பி கிடைக்காவிட்டால் அவ்வளவுதான் . திரும்ப அளிக்க எங்களுக்கு உரிமையில்லை என சொன்னார்கள் . அரை மணிநேரம் அவர்களுடன் வாதிட்டு பணத்தை திரும்ப பெற்றேன் .
நிகழ்ச்சி 2:

கடந்த மாதம் தினம் ஒரு ஜோக் என சொல்லி 10 ரூபாய் எடுத்தனர் . புகார் செய்த போது நீங்கள் SMS முலம் ACTIVATE செய்து உள்ளிர்கள் . இது உங்கள் தவறு என்றனர் . நான் SMS செய்யவில்லை என வாதடியபின் பணத்தை திருப்பி அளித்தனர் .
அடுத்தநாள் தினம் ஒரு ஆபர் என சொல்லி 30 ரூபாய் எடுத்தனர் . மீண்டும் புகார் செய்ய நீங்கள் GPRS பயன்படுத்தி உள்ளிர்கள் என சொன்னார்கள் . என் மொபில் பேசிக் மாடல் அதில் அந்த வசதி இல்லை என்றதும் சரி என சொல்லி 20 ரூபாய் திருப்பி தந்தார்கள் . மீதி 10 எங்கே என்றதுக்கு ஒருவருக்கு மாதத்திற்கு 30 மட்டுமே திருப்பி அளிக்க முடியும் என்றால்கள் .

இது என்ன கதை எடுப்பது எவ்வளவு வேண்டுமானாலும் ஆனால் கொடுப்பது முப்பதுதானாம் . ஒருவாரம் தொடர்ந்து வாதாடினேன் .
விளைவுகள் :

 1. முன்று வருடமாக இலவசமாக இருந்த SMS பைசாவாக மாற்ற பட்டது .
 2. கால் கட்டணம் 1.2 / S  என மாறியது ( BOOSTER போட்டும் )
 3. எந்த BOOSTER போட்டாலும் பணம் போகுமே தவிர அதன் பலன்கள் கிடைக்காது .

சில கேள்விகள் :

 1. எனக்கு ஒரு BOOSTER APLICABLE ஆகாது என்றால் எப்படி பணத்தை மட்டும் எடுத்து கொண்டு இது உங்களுக்கு கிடையாது என சொல்லலாம் ?
 2. ஒரு BOOSTER போடும் போது முன்பு உள்ள BOOSTER தானாகவே செயல் இழந்து விடும் . இதுதானே அனைத்து நிறுவனங்களின் நடைமுறை .
 3. வாடிக்கையாளரின் பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் எடுப்போம் ஆனால் மாதம் 30 மட்டுமே திருப்பு தருவோம் என்பது பகல் கொள்ளை அல்லவா ?
 4. தவறாக ACTIVATE செய்யபட்ட சர்வீசும் 24 ம்ணி நேரத்திர்க்குள் 155223 என்ற எண்ணின் மூலம் DEACTIVATE செய்யபட்டால் முழு பணமும் திருப்பி தரப்பட வேண்டும் என்பது TRAI விதிமுறை . அதை எப்படி மீறுகின்றனர் ?
 5. ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு ஒருதடவைதான் 198 சேவையை பயன்படுத்தலாமா ?( DOCOMO CUSTOMER TRY பண்ணிபாருங்க இரண்டால் தடவை முயற்சி செய்தால் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி பிஸியாக உள்ளார் என வரும் )
 6. வாடிக்களையாலரை கேட்காமல் எப்படி SMS மூலம் ஒரு சேவையை அவர்களே ACTIVATE செய்யலாம் . SMS படிக்க தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் ?

என்ன தீர்வு ?

நண்பர்களே இதுக்கு என்ன தீர்வு ? இதை முடிந்த அளவு FACEBOOK இல் SHARE  செய்யுங்கள் . உங்கள் கருத்தையும் சொல்லுங்கள் . இதுபோல உங்களுக்கு எதாவது நேர்ந்துள்ளதா ?


Sunday, 26 May 2013

ANDROID MOBILE இல் இருக்க வேண்டிய 2 முக்கியமான APPLICATIONS.


 


இன்று இந்தியாவில் அதிகம் விற்பனையாவது ANDROID MOBILE தான் . அதில் பயன்படுத்த GOOGLE தனது PLAY STORE இல்  நிறைய FREE APPLICATIONS தருகிறது . அதில் மிகவும் முக்கியமான , கண்டிப்பாக நமது போனில் வைத்து இருக்க வேண்டிய இரண்டு  அப்ளிகேஷன்களை பற்றிதான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம் . இவை கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் .ஆன்ரோயிட் தொலைபேசிகளுக்கான அசத்தலான Back Up அப்ளிகேஷன்.

இதன்மூலம் ஆன்ரோயிட் தொலைபேசியில் உள்ள 

SMS, Contacts, 

Call Logs, 

 Calendar, 
 
Application 

போன்றவற்றை இலகுவாக Back up எடுத்துக்கொள்ளலாம்

FOR DOWNLOAD :========================================================================

ஆன்ரோயிட் மொபைலில் பயன்படுத்த  மிகவும் உபயோகமான அப்ளிகேஷன் : JuiceDefender
ஆன்ரோயிட் தொலைபேசிகளில் பேட்டரி பாவனையின் நேரத்தை அதிகரிப்பதற்கான அப்ளிகேஷன் இது. தேவையற்ற நேரத்தில் பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கும் ஏனைய அப்ளிகேஷன்களை தற்காலிகமாக நிறுத்திவைப்பதன் மூலம் பேட்டரி பாவனைக்காலத்தை அதிகரிக்கிறது..


FOR DOWNLOAD :

https://play.google.com/store/apps/details?id=com.latedroid.juicedefender&feature


இதையும் படிக்கலாமே :

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?

 

தயவுசெய்து இதை படிக்காதீங்க .. 

 

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

 

Wednesday, 22 May 2013

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .இன்று அனைவர் கையிலும் மொபைல் உள்ளது . மொபைல் வாங்குவதை  விட  கஷ்டமான காரியம் அதுக்கு தீனி (RECHARGE) போடுவது . மாதா மாதாம் SMS BOOSTER, RATE CUTTEER வேறு போடவேண்டும் . GPRS பயன்படுத்த தனி  BOOSTER போடவேண்டும் . உங்கள் கஷ்டத்தில் கொஞ்சம் பங்க்கு போட்டு கொள்ள வந்துள்ளது சில இணைய தளங்கள் . இதில் நீங்கள் இலவசமாக RECHARGE செய்து கொள்ளலாம் .

 1. YBOX

இதில் இணைந்த உடன் உங்கள் கணக்கில் ஒரு தொகை ஏறும . இதில் இணைவது மிகவும் எளிது .

நன்மைகள் :

·        இலவசமாக SMS அனுப்பலாம் .

·        உங்கள் நண்பர்களை இணைப்பதன் மூலம் உங்கள் கணக்கில் 1 ரூபாய் சேர்த்து கொள்ளலாம் .

·        10 ரூபாய் சேர்ந்ததும் உங்கள் மொபைல் க்கு RECHARGE செய்து கொள்ளலாம் .

இதில் இணைய : http://www.ypox.com


 1. ULTOO

வெகு விரைவில் பிரபலமான தளம் இது . இந்த தளத்தில் இணைந்த உடன் ஒரு ரூபாயும் , உங்கள் இ மெயில் சரியானது என நிருப்பித்தால் 2 ரூபாயும் கிடைக்கும் .

நன்மைகள் :

  • இலவசமாக SMS அனுப்பலாம் .

  • நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு SMSக்கும் உங்கள் கணக்கில் இரண்டு பைசா வரவு வைக்க படும் .

  • உங்கள் நண்பர்களை இணைக்கலாம்

  • தினமும் LOGIN BONUS ஆக பத்து பைசா வழங்கபடுகிறது .

இதில் இணைய : http://www.ultoo.com 1. AMULYAM

மிக நீண்ட வருடமாக உள்ள நம்பிக்கையான தளம் . இதுவரை ஒரு கோடிக்கு மேலான ரூபாயை இலவசமாக வழங்கி உள்ளது .

நன்மைகள் :

·        இதில் உள்ள விளையாட்டுகளை விளையாட்டால் உங்கள் கணக்கில் பணம் ஏறும .

·        இவர்கள் அனுப்பும் இ மெயிலை படிப்பதம் முலமும் பணம் சம்பாதிக்கலாம் .

·        உங்கள் நண்பர்கள் இணைவதன் முலமும் சம்பாதிக்கலாம் .

·        அவ்வாறு இணைந்த நண்பர்கள் ஏதேனும் OFFER FULFILL செய்தாலும் உங்களுக்கும் கமிஷன் கிடைக்கும் .

·        நீங்களே விளையாட்டினை உருவான்க்கலாம் . அது தெரிவு செய்ய பட்டால் பணம் உண்டு .

இதில் இணைய : http://www.amulyam.in இதையும் படிக்கலாமே :