Sunday, 26 January 2014

ஆயிஷா

ஒரு கவிதை படித்து அழுகை வரலாம் , அல்லது ஒரு கதை அல்லது பாடலை கேட்டு அழுகை வரலாம் . ஆனால் ஒரு புத்தகத்தின் முன்னுரையை படித்து அழுகை வருமா ? கண்டிப்பாக வரும் . திரைப்படங்களில் சென்டிமென்ட் காட்சிகள் வந்தால் சிரிப்பை அடக்கமுடியாமல் பார்ப்பேன் . என் தங்கை திருமணமாகி கிளம்பும்போது அனைவரும் அழுவ , நான் கவலைபடாமல் தூங்கிவிட்டேன் . அப்படி பட்ட என்னை உலுக்கிய , இரவு தூக்கத்தை கெடுத்த ஒரு நூலின் முன்னுரையை தான் உங்களுடன் பகிரபோகிறேன் .


இதை எழுதியவர் யார் என தெரியவில்லை . எதோ ஒரு கிருத்துவ பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியை , அவர் இப்போது பல அறிவியல் கதைகள் எழுதுகிறார் . அவர் இப்படி எழுத தூண்டிய, காரணமான அவரது வாழ்கையை புரட்டிபோட்ட ஒரு மாணவியின் கதையை முன்னுரையாக சொல்லியுள்ளார் .


மேலும் படிக்க , அந்த புத்தகத்தை தரவிறக்கம் செய்ய : CLICK HEREFriday, 24 January 2014

10 வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாள் தொகுப்புஉங்கள் குழந்தைகள் அல்லது உங்கள் நண்பர்கள் , உறவினர்கள் குழந்தைகள் பத்தாம் வகுப்பு படிக்கின்றனரா ? அவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க சில கேள்வித்தாள் தொகுப்புகள் இங்கே. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாள் தொகுப்பை தரவிறக்கம் செய்யவேண்டுமா ?கேள்விதாள்களை தரவிறக்க :  FOR DOWNLOAD :


Monday, 20 January 2014

+2 மாணவர்களுக்கு MATHS & CHEMISTRY கேள்வித்தாள்கள் தொகுப்பு


அன்பான மாணவர்களே உங்களுக்கு பயனுள்ள CHEMISTRY & MATHS கேள்வித்தாள் தொகுப்பு வேண்டுமா ? கிழே உள்ள லின்க்கில் சென்று பார்க்கவும் . தரவிறக்கி அதிக மதிப்பெண் பெற வாழ்த்துக்கள் .

FOR MATHS & CHEMISTRY QUESTIONS

Saturday, 11 January 2014

ராஜீவ் கொலையும் தமிழர்கள் மீதான பழியும்செப்டம்பரில் நடந்த பதிவர் சந்திப்பின் போது இந்த புத்தகத்தை வாங்கினேன் . இதை பற்றி எழுதலாம் என பலமுறை நினைத்தும் முடியவில்லை .இபோதுதான் நேரம் கிடைத்தது .வாருங்கள் பதிவுக்குள் போகலாம் .
1991 MAY 21 அன்று ராஜீவ் கொல்லபட்ட பின் தமிழகத்தில் நடந்த , அந்த கொலை தொடர்பாக CBI மற்றும் இதர இலாக்காக்கள் விசாரித்த முறையில் இருந்த குறைகளை , தவறான நடைமுறைகளை பட்டியலிடுகிறது இந்த புத்தகம் .இதன் ஆசிரியர் கேட்கும் பல கேள்விகளுக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை . அல்லது சொல்ல முடியவில்லை .ஒரு மர்ம நாவலை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பல சஸ்பென்ஸ் இந்த ராஜீவ் கொலையில் உள்ளது . இன்றுவரை இதற்க்கு சரியான பதில் இல்லை . அதில் சில கேள்விகள் இதோ ...  • ·         குண்டு வெடிப்பு நடந்த பொதுகூட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடக்டர் இல்லையே ஏன் ?
  • ·         ராஜீவுடன் எப்போதும் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் கூட அந்த குண்டு வெடிப்பில் பலியாகவில்லையே எப்படி ?
  • ·         டெல்லி செல்வதாக சொல்லிவிட்டு சென்ற சுப்பிரமணியசாமி ஏன் போகாமல் சென்னையில் தங்கினார் ?
  • ·         ராஜீவ் கொல்லபட்டதும் காணாமல் போன வாழப்பாடியார்  30 நிமிடம் கழித்தே சம்பவ இடத்திற்கு வந்தார் . அதுவரை அவர் எங்கே சென்றார் ?
  • ·         ராஜேந்திர ஜெயின் என்பவர் ஜெயின் கமிஷன் முன் வாக்குமூலம் வழக்க வேண்டிய நாளுக்கு முதல் நாள் கொல்லபட்டது எப்படி ? ஏன் ?
மேலும் படிக்க :

ராஜீவ் கொலையும் தமிழர்கள் மீதான பழியும்
 

Monday, 6 January 2014

எது மதசார்பின்மை ?

தேர்தல் வரும் சமயம் அரசியல்வாதிகளால் அதிகமாக உபயோகிக்கப்படும் வார்த்தை “மதசார்பின்மை “. இவர்கள் முழுமனதுடன் தன இதை சொல்கிறார்களா ? இல்லை அரசியல் நாடகமா என மக்களுக்கே தெரியும் . உண்மையில் எது மதசார்பின்மை , இவர்கள் சொல்லும் வாதங்கள் சரியா என பார்க்கலாம் வாங்க .

எனது கேள்விகள் :
1.       தனது கட்சி அல்லது இயக்கத்து பெயரில் சாதி / மத பெயரை இணைத்து கொண்ட இயக்கம் / கட்சி எப்படி மதசார்ப்பற்ற கட்சியாகும் .

உதாரணம் : இந்து மக்கள் முன்னணி , முஸ்லிம் முனேற்ற கழகம்

2.       ஒரு மதத்தின் பண்டிக்கைக்கு வாழ்த்து சொல்லுவது தவறு என சொல்லிவிட்டு மற்ற மத பந்திக்கு சாரி பண்டிக்கைக்கு முந்துவது (வாழ்த்து சொல்ல ) எப்படி மத சார்பின்மை யாகும் ?

உதாரணம் : திபாவளி, கிருஷ்ண ஜெயந்திக்கு “விடுமுறை தின “ சிறப்பு நிகழ்சி என போடும் கலைஞ்சர் டிவி மற்ற மத பண்டிக்கைக்கு அந்த பண்டிகை பெயரில் சிறப்பு நிகழ்சி போடுவது .


மேலும் படிக்க :

எது மதசார்பின்மை ?

Friday, 3 January 2014

மாணவர்களுக்காக ... பகுதி 1பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்கு தேவையான பயனுள்ள வினாதாள்களின் தொகுப்பு வழங்க படுகிறது . உங்கள் பிள்ளைகள் அல்லது உறவினர்கள் , நண்பர்கள் யாராவது பன்னிரெண்டாம் வகுப்பு படித்தால் அவர்களுக்கு இந்த பதிவை சுட்டிகாட்டுங்கள் .

இனி அடிக்கடி இதுபோல பல பதிவுகள் உங்களுக்காக வரும் . உங்கள் ஆதரவை அளிக்க வேண்டுகிறேன் .கணினி அறிவியியல் - COMPUTER SCIENCE


ENGLISH & BIOLOGYENGLISH & PHYSICS


CHEMISTRY COLLECTIONS