Showing posts with label சமுகம். Show all posts
Showing posts with label சமுகம். Show all posts

Friday, 5 February 2016

வெற்றி உன் கையில் பகுதி : 2 (கணினி அறிவியல் 200/ 200 பெற ...)






                     இன்று நாம் பார்க்க போகும் பாடம் கணினி அறிவியல். இருக்கும் பாடங்களிலேயே மிகவும் எளிமையானது இதுதான். காரணம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மூலமே எளிதில் பாஸ் செய்துவிடலாம்.  ஆனால் 200/ 200  எடுக்க நினைபவர்களுக்கு இந்த ஒரு மதிப்பெண் வினாகள்தான் பிரச்சனையே. இந்த பாடத்தில் எப்படி தயார் செய்தால் எளிதில் மதிப்பெண் பெறலாம் என பார்ப்போம்.

·                      தயவு செய்து blue print பார்காதிர்கள். காரணம் ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தையும் சரியாக விடையளிக்கவேண்டும் என்றால் புத்தகம் முழுவதையும் படித்திருக்கவேண்டும். எனவே முக்கிய வினாக்கள் பார்ப்பது நல்லதல்ல.
·         இரண்டு பதிப்பேன், ஐந்து மதிப்பெண் வினாக்கள் மிகவும் குறைவே எனவே எளிதில் படிக்கலாம்.
·         C++ புரோகிராம் தெரிந்திருந்தால் வினாத்தாளில் கேட்கப்படும் கடைசி இரண்டு கேள்விக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

OMR : செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை.
·         75 மதிப்பெண்கள் OMR மூலவே வரவேண்டி உள்ளதால் அதை முறையாக செய்யவேண்டும்.
·         விடைகளை வட்டமிட கருப்பு / நீலம் பால்பாயின்ட் பேனாவையே உபயோகிக்க வேண்டும்.
·         பேனாவால் விடையளிப்பதால் அதை திருத்த இயலாது. எனவே கவனமாக விடையளிக்க வேண்டும்.
·         ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளை தெரிவு செய்யகூடாது.
·         வட்டத்தை முழுமையாக நிரப்பவேண்டும்.
·         வினாத்தாளில் எத்தனை கோடுகள் (dash) உள்ளன என சரியாக பார்த்து அதை OMR தாளில் சரியாக குறிப்பிடவேண்டும். காரணம் நான்கு வகையான வினாதாட்கள் வரும்.
·         தவறான விடையை அழிக்கிறேன் என நினைத்து OMR பேப்பரை கிழித்துவிடகூடாது. இதனால் மதிப்பெண் குறையும். வேறு OMR கிடைக்காது.
·         இதில் எந்த சந்தேகம் வந்தாலும் தேர்வறை கண்காணிப்பாளரை கேட்கவும்.

இரண்டு மதிப்பெண் வினாக்கள் :
·         star office இல் இருந்து 10 கேள்விகளும், C++ இல் இருந்து 15  கேள்விகளும் கேட்கப்படும்.
·         STAR OFFICE இல் பதில் எழுதுவது எளிது எனவே அதனை முதலில் பார்க்கவும்.
·         விடைகளை மிக அதிகமாக ஒருப்பக்கதிர்க்கு இழுக்காதிர்கள், அதற்காக ஒரே பக்கத்தில் ஐந்து வினாக்கான விடைகளை எழுதாதிர்கள்..

·         ஒரே கேள்விக்கான விடையை மறுமுறை எழுததிர்கள்.

ஐந்து மதிப்பெண் வினாக்கள்:
·         STAR OFFICE இல் அதிகபட்சம் 15 வினாக்களே உள்ளது, C++ இல் 10 தான் உள்ளது . எனவே எளிதாக இதனை எழுதலாம்.


·         விடைகளை பேப்பரின் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்கவும். கடைசியில் இரண்டு வரி எழுத இடம் இருக்கு என அங்கே இருந்து ஆரம்பிக்கவேண்டாம்.

·         ஐகான், டயலாக் பாக்ஸ் போட்டால் அழகாக போடவும். கடைமைக்காக போடதிர்கள்.

·         C++ புரோகிராம் எழுதினால் SYNTAX, OUTPUT முக்கியம்.

·         நன்றாக தெரிந்தால் மட்டுமே OUTPUT, ERROR புரோகிராமை எடுக்கவும்.
STAR OFFICE  முக்கிய வினாக்கள் தொகுப்பு டவுன்லோட் செய்ய 

C++  முக்கிய வினாக்கள் தொகுப்பு டவுன்லோட் செய்ய CLICK HERE 


முக்கியமான ஒரு மதிப்பெண் வினாத்தாட்கள் டவுன்லோட் செய்ய CLICK HERE 

video பதிவு பார்க்க :


                  
      



Saturday, 30 January 2016

வெற்றி உன் கையில் : பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான தொடர்





     இன்னும் ஒரு மாதத்தில் +2 மாணவர்களுக்கு ஆண்டு பொது தேர்வு வர உள்ளது. அதற்காக மாணவர்களும் அவர்களுக்கு துணையாக பெற்றோர்களும் கடினமாக தயாராகிக்கொண்டு இருப்பார்கள். இவர்களுக்காகத்தான் இந்த தொடர். இது அறிவுரை அல்ல கடந்த 15 வருட கல்விபணியில் கிடைத்த அனுபவங்களின் தொகுப்பு மட்டுமே. உங்கள் ஆதரவு இருந்தால் இது இன்னும் நன்றாக தொடரும்.



     முதலில் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கண்டிப்பாக நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரியில் செலவில்லாமல் சேர கண்டிப்பாக ஆண்டவன் அருள்புரிவான். இந்த சூழ்நிலையில் உங்களுடன் சில கருத்துகளை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

செய்ய கூடியவை மற்றும் கூடாதவைகள் :



  • ·         கஷ்டபட்டு படிப்பதைவிட இஷ்ட்டபட்டு படியுங்கள். சிலர் மிக குறைவான நேரமே படிப்பார்கள் ஆனால் மதிப்பெண் அதிகமாக எடுப்பார்கள். சிலர் விழுந்து விழுந்து படிப்பார்கள் ஆனால் மதிப்பெண் மிக குறைவாக இருக்கும். காரணம் மனபாடம் செய்யும் பாடம் அந்த நேரத்தில் மட்டுமே உதவும் ஆனால் புரிந்து படிக்கும் பாடம் கடைசிவரை மறக்காது தேர்வு நேரத்தில் சும்மா புரட்டிபார்த்தாலே போதும் எளிதாக தேர்வை எதிர்கொள்ளமுடியும்.

  • ·         கண்டதை படித்தவன் பண்டிதன் ஆவான்னு சொல்வாங்க அதுபோல கண்ட நேரத்தில் படிப்பது சரியல்ல. காலை நேரம் என்றால் குறைந்தது நான்கு மணிக்கு ஆரம்பிக்கலாம். மாலை நேரத்தில் 6 – 10 சரியான நேரம். இரவு பத்து மணிக்கு மேல் படிப்பது வேஸ்ட். இரவு கண்விழித்து நைட் ஸ்டெடி செய்வதெல்லாம் உடம்பை கெடுத்துகொள்ளும் வேலையாகும்.

  • ·         LKG குழந்தை போல ஒரு கேள்வி பதில் படித்ததும் எழுதிபார்காமல் இரண்டு அல்லது மூன்று கேள்வி பதில்களை சேர்த்து எழுதுவது நல்லது (அவரரவர் திறமைக்கு ஏற்ப எண்ணிக்கை மாறலாம் ). அப்போதுதான் நாம் எதை மறக்கிறோம் என கண்டறியலாம்.

  • · பாடங்களை அன்றாட நிகழ்ச்சியுடன் இணைத்து நினைவில் வைத்துகொள்ளுங்கள். உதாரணமாக கணினி அறிவியலில் SWITCH CASE PROGRAM எழுதும்போது புத்தகத்தில் 1 = ONE , 2= TWO என இருக்கும் இதை A= AJITH , V= VIJAY  என மாற்றிகொண்டால் புரோகிராமும் மறக்காது SYNTAX என்படும் புரோகிராம் எழுதும் வழிமுறையும் மறக்காது.

  • ·         பழைய தேர்வு விடைத்தாள்கள் , கேள்வித்தாள்கள் அனைத்தையும் சேகரித்து அதை முழுமையாக படிக்கவும். பள்ளியில் நடந்த தேர்வு விடைத்தாள்களில் நமக்கு எந்த பதிலுக்கு ஏன் மதிப்பெண் குறைக்கபட்டது என கவனித்தாலே நிறைய பிழைகளை களையமுடியும். நல்ல மதிப்பெண் / முழுமதிபேன் எடுத்த மாணவர்களின் விடைத்தாள்களையும் பார்க்கவேண்டும். அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என உணரவேண்டும்.

  • ·         கணித பாடத்தை மனபாடம் செய்யும் ஆட்கள் இன்னும் இருகின்றார்கள். அப்படி செய்யாமல் ஒத்த கருத்துடைய மாணவர்களுடன் இணைந்து போட்டுபார்கலாம். நமக்கு தெரிந்த கணக்கை மற்ற மாணவர்களுக்கு சொல்லிகொடுக்கலாம். அவ்வாறு செய்யும் போது நாமும் படித்ததுபோல ஆச்சு, சொல்லிகொடுத்தாபோலவும் ஆச்சு, நமக்கு தோன்றாத புதிய சந்தேகங்களை மற்றவரிடம் இருந்து வரும்போது அதை எப்படி சரிசெய்யலாம் என கற்க உதவுகிறது.

  • · ஒவ்வொரு பாடத்திற்கும் எத்தனை நாள் தேவை என கணக்கிடவேண்டும். நாம் எடுக்க நினைக்கும் மதிப்பெண்ணை பெரிதாக எழுதி நமது அறையில் ஓட்டலாம்.

  • ·    நண்பர்களுடன் வீண் அரட்டை, இருசக்கரவாகனத்தில் ஊர் சுற்றுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

பெற்றோர் கவனத்திற்கு ..


  • ·         நீங்கள் முதலில் உங்கள் பிள்ளைகள் மேல் நம்பிக்கை வையுங்கள். ஆதரவான வார்த்தைகளை கூறுங்கள். பள்ளியில் தற்பொழுது நடக்கும் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்ணை காட்டி அவனை திட்டாதீர்கள். “நீ எல்லாம் எதுக்கும் லாக்கில்லை “ என சொல்லாதிர்கள். அப்படி பெயர் பெற்ற பிள்ளைகள்தான் வருங்காலத்தில் பெரிய ஆளாக வருகின்றார்கள். “உன்னால் முடியும் படிப்பா, உன்னால் முடிஞ்ச அளவு டிரை செய்” என பாசிட்டிவாக பேசுங்கள்.

  • ·         தனி அறையில், இணைய வசதியுடன் கணினி, WI-FI இணைந்த ஆண்ட்ராய்ட் போன் கொடுத்துவிட்டு பையன்படிக்கவேமாட்றான்னு சொன்னா ஆசிரியர்கள் என்ன செய்வார்கள்? மாணவனை அவன் சிந்தனை மாறாவண்ணம் பார்க்கவேண்டியது உங்கள் பொறுப்பும் கூட..

  • ·   24 மணி நேரமும் படி படி என சொல்லாதிர்கள், நம்மால் 24 மணிநேரம் ஒரே வேலையை செய்யமுடியுமா? அவன் கவனம் சிதறாவண்ணம் அவனுக்கு ரெஸ்ட் எடுக்க வழிசெயுங்கள்.

  • ·    மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை நீங்களும் உணர்ந்து அவர்களுக்கும் புரியவையுங்கள்.

  • ·         அடுத்த மாணவர்களுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாதீர்கள்.

  • · சரியான , சத்தான உணவுவகைகளை கொடுங்கள். இரண்டு மாதங்களுக்கு அசைவம், பானிபூரி , நூடுல்ஸ் போன்ற எளிதில் செரிமானம் ஆகாத உணவுவகைகளை தவிருங்கள். நிறைய பழசாறு, இளநீர் குடிக்க சொல்லுங்கள். சாதாரண தலைவலிக்கு மாத்திரைபோட சொல்லாதீர்கள்.

  •  இது பொதுவான கருத்துகளே ஆகும். அடுத்த பகுதியில் இருந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வரு பாடத்திற்கும் எப்படி தயாராக வேண்டும் என அனுபவமிக்க ஆசிரியர்களின் கருத்துகளும் , மதிப்பெண் அதிகம் பெற உதவும் முக்கிய குறிப்புகளும் இடம் பெரும்.


டிஸ்கி : இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகள் எனக்கு தேவை. இங்கேயே உங்கள் கருத்துகளை பதியலாம் அல்லது உங்கள் கருத்துகளை rrajja.mlr@gmail.com மின் அஞ்சலுக்கும் அனுப்பலாம்.



Wednesday, 2 September 2015

புதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை






நவ கிரகங்களில் இரண்டு எங்கள் ஊர் அருகிலேயே உள்ளது . பலமுறை சென்று இருந்தாலும் ஏனோ அதைப்பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம வந்ததில்லை . சென்ற வாரம் புதன் ஸ்தலம் சென்றேன் . அதைபற்றிய பதிவே இது .


நாகை மாவட்டம் , சீர்காழி வட்டத்தில் உள்ளது திருவெண்காடு . மயிலாடுதுறையில் இருந்து 25 KM , சீர்காழியில் இருந்து 13 KM தூரமும் உள்ளது இந்த கோவில் .சுவேதாரண்யா சுவாமிகள் கோவிலுடன் இணைந்து இந்த ஸ்தலம் உள்ளது .


திருமதி வித்யாம்பாள் சன்னதியின் அருகில் உள்ளது புதன் ஸ்தலம் . மூன்று களங்கள் உள்ள ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்று .

பலன்கள் :

  • கல்வியில் மேன்மை
  • உடல்நலம்
  • குடும்ப சந்தோசம் அதிகரிப்பு
  • செல்வம் பெருக
  • தொழில் வளர்ச்சி


வழிப்பாட்டு முறைகள் :


  • அகல்விளக்கு வைத்து வழிபடலாம்
  • வில்வ இலையால் பூஜை
  • துளசி வழிபாடு



பார்க்கவேண்டியவை :

நீங்கள் எங்கு நின்று பார்த்தாலும் ரயில் உங்களை நோக்கி வருவதுபோல வரையபட்ட ஓவியம



வாயிலில் உள்ள நந்தி



சந்திர தீர்த்தம் (புதன் ஸ்தலம் எதிரே உள்ளது )



திருமதி வித்யாம்பாள் சன்னதி




ஆனந்த தாண்டவம் ஓவியம்


சுவேதார்ணய சுவாமிகள் ஆலயம்


பிரகாரம்





சகித்து கொள்ளமுடியாத விஷயம் :


புதனுக்கு அர்ச்சனை செய்ய டிக்கெட் 15 ரூபாய் என்று வாங்குகின்றனர் .ஆனால் டிக்கெட் விலை 5  மட்டுமே , மீதி 10 க்கு கொஞ்சம் வில்வ இலையை கொடுக்கின்றனர் . இந்த 10 ரூபாய் எந்த கணக்கில்வரும் , யார் யார்க்கு போகும் , இது அரசு அனுமதியுடன் நடக்கிறது என்பது அந்த புதனுக்கே வெளிச்சம் .


இதையும் படிக்கலாமே :





Saturday, 1 August 2015

தொலைதொடர்பு துறையா ? கள்ள தொடர்பு துறையா ?





           சமிபத்தில் வோடபோன் கம்பெனியில் இருந்து ஒரு SMS வந்தது . அதில் " என் பெயர் நிஷா , எண்கள் வீட்டில் யாரும் இல்லை , என்னிடம் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். உடனே கால் செய்யவும். கட்டணம் ரூபாய் 9 / நி." என இருந்தது . 

            நம்ம ஊரில் ஊர் மேயும் ஆட்கள், விபசாரம் செய்பவர்கள், அறிபெடுத்து அலையும் ஆட்கள் , வீனாபோனதுகள், பிஞ்சில் பழுத்ததுகள் போன்றவைதான் இதுபோல யாரும் இல்ல கால் பண்ணி என்னவேனாலும் பேசுன்னு சொல்லும். ஆனால் ஒரு தொலைதொடர்பு துறை வைத்து நடத்தும் கம்பெனி இவ்வளவு கேவலமாக எப்படி நடப்பார்கள் என தெரியவில்லை. இதுக்கு கிராமத்தில் "மாமா" வேலை பார்ப்பது என்று சொல்வார்கள். இவர்கள் தொலைதொடர்பு துறை நடத்துகின்றார்களா ? இல்லை கள்ளதொடர்புதுரை நடத்துரானுங்களா ?

         இதுபோலவே சில கேள்விகள் கேட்கின்றார்கள் , சரியான பதில் சொன்னால் கார், பைக், தங்கம் , லட்ச ரூபாய் வெல்லலாம் என SMS  வருது. ஆனால் இதுவரை ஒருத்தன் கூட ஜெய்ததாக SMS  வரவில்லை. எத்தனை பேர் கலந்துகொண்டனர், யார் செய்தவர் என்ற விவரம் இதுவரை வந்ததில்லை .

         இவர்கள் கேட்கும் கேள்விகளும் "ரொம்ப, ரொம்ப கஷ்டமான " கேள்வியா இருக்கும். 

உதாரணம் :  2 + 3 = ?

ஒரு நாணயத்துக்கு எத்தனை பக்கம் ?

தல என அழைக்கப்படும் நடிகர் யார்?

மாறி படத்தின் ஹீரோ யார் ?

தஞ்சை பெரியகோவில் எங்கே உள்ளது ?


இந்த கேள்விக்கெல்லாம் L.K.G குழந்தையே பதில் சொல்லும். இதுக்கு லட்சகணக்கில் பரிசாம். இந்த பதிலை சொல்ல ஒரு SMS  5 ரூபாயாம் . 

என்னுடைய கேள்வி என்னானா ?

1.  இதுபோல கேள்வி கேட்டு பதில் வாங்க இவர்களுக்கு சட்டபடி உரிமை உண்டா /

2. இது சூதாட்டம் கணக்கில் சேராதா ?

3.  போட்டியில் பங்குபெற்றவர்களுக்கு வெற்றி பெற்றவர்கள் பற்றிய விவரம் ஏன் தரபடுவதில்லை ?

4. ஆபாசமாக பேச தூண்டுவது சட்டபடி தவறல்லவா ?

5 TRAI இதை கவனிக்காமல்  என்னத்தை கிழித்துக்கொண்டு உள்ளது .

இதுபோல தொல்லைகள் , டென்ஷன்கள் வேண்டாம் என்றால் உங்கள் போனில் இருந்து "START DND " என டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். ( எல்லா நெட்வொர்க்கும் இது பொதுவானது )

Monday, 6 January 2014

எது மதசார்பின்மை ?





தேர்தல் வரும் சமயம் அரசியல்வாதிகளால் அதிகமாக உபயோகிக்கப்படும் வார்த்தை “மதசார்பின்மை “. இவர்கள் முழுமனதுடன் தன இதை சொல்கிறார்களா ? இல்லை அரசியல் நாடகமா என மக்களுக்கே தெரியும் . உண்மையில் எது மதசார்பின்மை , இவர்கள் சொல்லும் வாதங்கள் சரியா என பார்க்கலாம் வாங்க .

எனது கேள்விகள் :
1.       தனது கட்சி அல்லது இயக்கத்து பெயரில் சாதி / மத பெயரை இணைத்து கொண்ட இயக்கம் / கட்சி எப்படி மதசார்ப்பற்ற கட்சியாகும் .

உதாரணம் : இந்து மக்கள் முன்னணி , முஸ்லிம் முனேற்ற கழகம்

2.       ஒரு மதத்தின் பண்டிக்கைக்கு வாழ்த்து சொல்லுவது தவறு என சொல்லிவிட்டு மற்ற மத பந்திக்கு சாரி பண்டிக்கைக்கு முந்துவது (வாழ்த்து சொல்ல ) எப்படி மத சார்பின்மை யாகும் ?

உதாரணம் : திபாவளி, கிருஷ்ண ஜெயந்திக்கு “விடுமுறை தின “ சிறப்பு நிகழ்சி என போடும் கலைஞ்சர் டிவி மற்ற மத பண்டிக்கைக்கு அந்த பண்டிகை பெயரில் சிறப்பு நிகழ்சி போடுவது .


மேலும் படிக்க :

எது மதசார்பின்மை ?