Saturday, 12 March 2016

காதலும் கடந்து போகும் : விமர்சனம்







         விஜய் சேதுபதி , மடோனா செபஸ்டின் மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் , சூது கவ்வும் என்னும் சூப்பர் ஹிட் கொடுத்த நலன் குமாரசாமியின் அடுத்த படைப்பு "காதலும் கடந்து போகும்". கொரியன் படத்தின் தழுவல் இது. படம் எப்படி என பாப்போம்வாங்க .




கதை :

    நண்பனுக்காக ஒரு கொலை வழக்கில் 5 வருடம் சிறை சென்று திரும்பி ஒரு பார் வைப்பதே லட்சியமாக உள்ள ஒரு மொக்க ரவுடி விஜய் சேதுபதி. விழுப்புரத்தில் உள்ள யாழினிக்கு சொந்த காலில் நேர்க்கவேண்டும் என்பது லட்சியம். சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் சேருகிறார். விதிவசத்தால் வேலை போக தங்க இடம் இன்றி சேதுபதி குடி இருக்கும் வீட்டுக்கு எதிரில் குடிவருகிறார்.

          முட்டல் மோதலுடன் தொடங்கும் நட்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வழக்கம் போல காதலாக மாறுகிறது. இவர்கள் காதலுக்கு வீட்டில் என்ன சொன்னார்கள் ? யாழினியின் லட்சியம் என்னாச்சு? சேதுபதியின் கனவு என்னாச்சு ?இடையில் வரும் வில்லன்கள்கதி என்ன என்பதுதான் கதை .



+ பாயின்ட் :

* வழக்கம் போல விஜய் சேதுபதி கலக்கல். மனுஷன் வரும் காட்சி எல்லாம் செம கைதட்டல். மாஸ் ஹீரோ படத்துக்கு கூட இவ்வளவு கைதட்டல் வருமான்னு தெரில.

* பாரில் சண்டைபோட்டு அடிவாங்கிவிட்டு அசாட்டா கண்ணாடி போட்டுகிட்டு நடந்துவரும் காட்சி செம.

* ஹீரோயின் மாத்திரை சாப்பிடார்னு தெரிஞ்சு பதறும் காட்சி காமெடி கலந்தகலக்கல் .

* சின்ன சின்ன கேரக்டர்கள் கூட அருமையாக நடித்திருப்பது . உதாரணமாக வி. சே  அசிஸ்டெண்ட்டாக வரும் நபரின் நடிப்பு.

* மடோனா செபஸ்டியன் அழகு பதுமையாக மட்டுமல்லாமல் நடிக்க தெரிந்திருப்பது .


* வி.சே. சேர்ந்து தண்ணி அடித்துவிட்டு அலம்பல் செய்யும் காட்சியில் ஹீரோயின் நடிப்பு கலக்கல் .



*நெறைய பாடல்கள் போட்டு உயிரை எடுக்காமல் விட்டது.

* வசனம் பல இடங்களில் கைதட்டலை வரவைக்கிறது. சின்ன சின்ன வார்த்தைகளில் கூட காமெடியை கலந்து அடித்துள்ளனர்.

*மானாட மயிலாட பாடல் காட்சி யில் பாடலும் ,காட்சியும் கண்ணுக்கு விருந்தாக உள்ளது.

* ஹீரோ அடிச்சா வில்லன்கள் எல்லாம் நூறு அடி உயரே பறப்பார்கள் என்ற சினிமாத்தனம் இல்லாமல் ரியல் பைட் போல சண்டை காட்சிகளை எடுத்தது .

* ஹீரோயினி தாமதமாக வருவார் என இன்டர்வியூவை தாமதமாக்க சேதுபதி செய்யும் ரகளை சிரித்து சிரித்து வயிறு வலிக்க வைக்கிறது .




- பாயின்ட் 

* கிளைமாக்ஸ் வழக்கமான சினிமா போல முடிந்தது .

* பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சில இடங்களில் வசங்கள் புரியவில்லை.

* வி.சே. பேசும் சில வசங்கள் அவரின் பழைய படங்களை நினைவு படுத்துகிறது.



மொத்தத்தில் :

குடும்பத்துடன் அனைவரும் சிரித்து மகிழ்ந்து பார்க்க கூடிய படம் இது. படம் பார்க்கும் போது போன் வந்தா எடுக்காம பார்த்தால் சின்ன சின்ன வசங்களை மிஸ் செய்யாமல் ரசிக்கலாம் .


Thursday, 10 March 2016

மாப்ள சிங்கம் - சினிமா விமர்சனம்






                 விமல் , அஞ்சலி, சூரி  மற்றும் பலர் நடிப்பில் N.ராஜசேகர் இயக்கத்தில்  நேற்று இணையத்திலும் இன்று திரையரங்கிலும் வெளிவந்த படம் தான் "மாப்ள சிங்கம் ". சில வருடங்களுக்கு முன் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் செல்ல குழந்தையாக இருந்த விமல், அடுத்தடுத்து சில படங்கள் சொதப்ப தன்னை நிலை நிறுத்த காத்திருக்கும் படம் இது . வாங்க விமர்சனம் பாப்போம்.



கதை :

                     1980 களில் வந்த பலபடங்களில் உள்ள அதே கதைதான். தேர் இழுப்பது முதல் , கோவில் முதல் மரியாதையை யாருக்கு அழிப்பது என்பது வரை ராதாரவிக்கும் குறுப்புக்கும்  , முனிஸ்காந்த்க்கும்  குருப்புக்கும் பல வருடங்களாக தகராறு. ராதாரவியின் தங்கை பையன் விமல். படிக்காமல் ஊரில் கட்டை பஞ்சாயத்து செய்து காதலர்களை பிரிப்பது இவரது முக்கியவேலை. இதுக்கு துணையாக சூரி அண்ட் கோ.

               ஒரு கேஸ் விஷயமாக அறிமுகமாகும் அஞ்சலியை பார்த்ததும் காதல். அஞ்சலியின் அண்ணன் விமலின் தங்கையை காதலிக்க, விமல் காதலி ஏற்றாரா அல்லது வழக்கம் போல பிரித்தாரா, அஞ்சலி விமல் காதல் என்னாச்சு? ஊர் பகை தீர்ந்ததா? இதுதான் கதை.


+ பாயின்ட்.

* சூரியின் காமெடி. கத்தி கத்தி காமெடி பண்ணாமல் ஒரு வரி வசனத்தில் பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறார்.

* படத்தை சீரியசாக கொண்டுபோகாமல் காமெடியாக கொண்டுபோனது.

* நீண்ட நாட்களுக்கு பின் மெலிந்த அஞ்சலி .

* விமல் அறிமுக பாடல்



- பாயின்ட் 

* அஞ்சலி மெலிந்தது சரி. விமலுக்கு என்னாச்சி? ஒரு காட்சியில் சிகப்பு சட்டையில் வருவார் அப்பது விவேக் நடிச்ச "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" என்ற போஸ்டர் தான் நினைவுக்கு வருது.

* காமெடின்னு நினைத்து பல இடங்களில் வசனம் கடுப்பெத்துது.

* முனிஸ்காந்த் டயலாக் டெலிவரி கொடுமை.

* நல்ல நடிகர் ஜெயபிரகாஷை வீணடித்தது .

* பாடல்கள்.

* விமல் - அஞ்சலி காதல் வருவதும் , அவர்கள் பிரிய காரணமும் ஐந்து பைசா புரோஜனம் இல்லாதது.

* சிவகார்த்திகேயன், அனிருத் சேர்ந்து பாடிய பாடலை வீணடித்தது.

* அஞ்சலியில் கேவலாமா ஹேர் ஸ்டைல்.



கடைசியா :

    பார்த்தே ஆகவேண்டிய படம்னு சொல்லமுடியாது ரொம்ப மொக்கையான படம்னும் சொல்லமுடியாது , டிவியில் போட்டா பார்க்கலாம்.

Wednesday, 9 March 2016

ANDROID மொபைலில் இருக்க வேண்டிய சில முக்கியமான APPLICATIONS









ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்கள்  எண்ணிக்கை தினமும் உயர்ந்துகொண்டே வருகிறது . அதுபோலவே அதில் பயன்படுத்த கூடிய நிரல்கள் (அப்ளிகேஷன் ) எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது . லட்சகணக்கான அப்ளிகேஷன்களில் நமக்கு எதுதேவை என கண்டறிந்து எடுப்பதே பெரிய வேலைதான் . இந்த பதிவில் சில முக்கியமான அப்ளிகேஷன்கள் பற்றி உங்களுக்காக ...




    

      இது IPL சீசன் , கிரிகெட் ஆட்டங்களை நேரில் பார்க்கவும் , அல்லது ரன் பற்றிய விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் உதவும் அப்ளிகேஷன் இது . நிறைய அப்ளிகேஷன்கள் இதுபோல இருந்தாலும் இதில் பல விஷயங்கள் உள்ளது . ஆட்டோ ரெப்ரெஷ் , ஹைலைட் என பல உள்ளது .





2.     LADOOO



        இது மற்ற அப்ப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்ய உதவும் . இதில் முக்கியவசதி நீங்கள் தரவிறக்கம் செய்யும் அப்ளிகேஷங்களுக்கு உங்களுக்கு இது பணம் தரும் . குறைந்தது 10 ரூபாய் வந்ததும் நீங்கள் உங்கள் என்னிருக்கு ரீ-சார்ஜ்  செய்துகொள்ளமுடியும் . அப்ளிகேஷனும் தரவிரக்கியது போல ஆச்சு , பணமும் சம்பாதித்தது போல ஆச்சு .

இதுக்கான ரெபரல் கோடு : 1686961149


 


3.    APPSAVER


       இது நீங்கள் உங்கள் போனில் வைத்திருக்கும் அனைத்து அப்ளிகேஷனையும் பேக்கப் எடுத்துவைத்துகொள்ளும் . தேவையில்லை என அழித்த அப்ளிகேஷனை மீண்டும் இன்ஸ்டால் செய்ய நீங்கள் GOOGLE PLAY செல்ல வேண்டாம் . இதில் இருந்தே எடுத்துக்கொள்ளலாம் .

 
4.     
INDIA AGAINST  SPAM


நீங்கள் உங்கள் போனை DND யில் பதிவு செய்திருந்தால் (தேவையில்லாத கால் , SMS வேண்டாம் என்று ) அப்படி செய்த பின்பும் ஏதேனும் என்னில் இருந்து விளம்பரங்கள் வந்தால் அந்த என்னை பற்றி புகார் செய்ய உதவும் அப்ளிகேஷன் இது . தொந்தரவு தரும் அழைப்புகளை நிறுத்த உதவும் அருமையான அப்ளிகேஷன் இது .

 


ஏற்கனவே பலருக்கு தெரிந்த அப்ளிகேஷன் இது . பல மொழிகளில் வெளிவரும் தினசரி பத்திர்க்கைகளை படிக்க உதவும் அப்ளிகேஷன் இது . இப்பொது புதிதாக E-BOOKS என்னும் சேவையை அறிமுகபடுத்தி உள்ளனர் . முதல் முறை நீங்கள் வாங்கும் புத்தகம் 1 ரூபாய்க்கு அளிக்கப்படும் . இங்கு பல இ புக் கிடைகிறது . உங்கள் போன் பேலன்சில் இருந்தே பணம் அளிக்கும் வசதியும் உண்டு .

 
குறிப்பு : இவையனைத்தும் GOOGLE PLAY STORE இல் இலவசமாக கிடைக்கும் .



Monday, 7 March 2016

30 $ மதிப்புள்ள PC Cleaner Pro 2016 இலவசமாக









நாம் அன்றாடம் கணினியை தொடர்ந்து பயன்படுத்துவதால் கணினியில் தேவையில்லாத கோப்புகளும், தற்காலிக நினைவகங்களும் தோன்றும். இதனால் நமது கணினியின் செயல் வேகம் குறையும். இவற்றை சுத்தம் செய்தால் நமது கணினி வேகமாகவும், பாதுகாப்பாகவும் செயல்படும். இதை செய்ய உதவும் மென்பொருள்தான் PC Cleaner Pro 2016.


இதன் மதிப்பு சுமார் 30$  ஆகும். ஆனால் உங்களுக்காக இதை இலவசமாக வழங்குகிறோம். இந்த பதிவின் இறுதியில் உள்ள கீ யை பயன்படுத்தி பணத்தை மிச்சபடுத்துங்கள்.


பயன்கள் :

* உங்கள் கணினி 300% வரை வேகமாக செயல்பட உதவும்.

* ஹார்ட் டிஸ்க் மெம்மரியை அதிகரிக்க உதவும்.

* இணையத்தில் பாதுகாப்பாகவும், வேகமாகவும் உலவ உதவும்.

* தேவையில்லாத கோப்புகளை கண்டறியலாம்.

* temp. பைகளை அழிக்க உதவுகிறது .

* கணினியின் வேகத்தை குறைக்கும் கோப்புகளை கண்டறிந்து அழிக்க முடியும்.

*  Temporary Internet Files அழிப்பதன் மூலம் இணையத்தை வேகமாக பயன்படுத்தலாம்.




தரவிறக்கம் செய்ய :  FOR DOWNLOAD

KEY:

Serial Keys
===========








குறிப்பு : மேலே உள்ள விளம்பரங்களை கிளிக் செய்தால் KEY கிடைக்கும்.

Friday, 4 March 2016

உங்கள் வங்கி இருப்பை MISSED CALL மூலம் தெரிந்துகொள்வது எப்படி ?








          இன்று அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். நமது வங்கி இருப்பை ஒவ்வொரு முறையும் வங்கி சென்று அல்லது ATM பயன்படுத்தி தெரிந்துகொள்வதில் பல சிரமங்கள் உள்ளது. உங்கள் மொபைல் மூலமே உங்கள் வங்கி இருப்பை அறிந்துகொள்ள முடியும். எவ்வாறு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

குறிப்பு : இதை பயன்படுத்த உங்கள் மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்து இருக்கவேண்டும்.



====================================================================
State Bank of India:

பதிவு செய்ய :

type ‘REG Account number’ in message box and send to 9223488888.

இருப்பை அறிய :

by giving miss call on 9223488888 or send SMS ‘BAL”

===================================================================

Punjab National bank:


இருப்பை அறிய :

by giving miss call to number 18001802222 and 01202490000.


Bank of India

miss call through your register number on 009015135135.

================================================

Bank of Baroda


 call at number 09223011311,

Canara Bank

 by giving miss call to 09289292892

==============================================

Central Bank
by Give  miss call to  09222250000.


=======================================================================

Axis bank
by giving miss call on 09225892258.

========================================

HDFC Bank :

By call at 18002703333 and they will SMS you account balance details instantly.
or call at 18002703355 to know your mini statement. To know balance details by SMS, type “BAL” and send it to 5676712. To get mini statement, type “TXN” and send it to5676712.

========================================================================

IDBI Bank
IDBI bank account holder will give a missed call to 09212993399 or SMS “BAL” to 9212993399

======================================================================

ICICI Bank

 To know your ICICI bank account balance call at 02230256767

======================================================================

Kotak Mahindra Bank

You can use the number 18002740110 to get your account balance.

===========================================


Syndicate Bank\:

 to register your mobile number :
, type “SREG ” and send it to 09241442255.

 you can get account balance details by just giving miss call to: 09241442255 or 08067006979.

======================================================================

Indian Bank

Type BALAVL and send to 9444394443

======================================================

City Bank :

Citi Bank Balance inquiry – BAL last 4 digits of your debit card number and send to 52484 Or 9880752484



FOR MARE INFORMATION VISIT : 

  WWW.RAJATRICKS.IN

Wednesday, 24 February 2016

Rs 2400 மதிப்புள்ள Folder Lock 7.6.0 இலவசமாக ..









             நாம் அன்றாடம் பலவகையான கோப்புகளை கையாளவேண்டியுள்ளது. சில கோப்புகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் அவற்றை மற்றவர்கள் பார்க்காமல் மறைக்கவேண்டி இருக்கும். இதுபோன்ற கோப்புகளை மறைக்க பல மென்பொருட்கள் உள்ளது. அவற்றில் தலைசிறந்தது Folder Lock 7.6.0.

        இந்த மென்பொருளின் விலை 39.99$ இந்திய மதிப்பில் குறைந்த பட்சம் 2400 ரூபாய் ஆகும். இதை உங்களுக்கு இலவசமாக வழங்குவதில் ராஜபாட்டை சந்தோஷபடுகிறது .


பயன்கள் :


* உங்கள் கோப்புகளை ரகசியமாக வைக்கமுடியும்.

* மற்றவர்கள் கண்ணில் படாதவாறு மறைக்கலாம்.

* வேண்டும்ன்றால் மற்றும் மற்றவர்கள் பார்வைக்கு தெரியுமாறு மாற்றலாம்.

*பாஸ்வேர்ட் மூலம் யாரும் அணுகாமல் தடுக்கலாம்.

* கோப்புகளை யாரும் ரெகவர் செய்யாவண்ணம் அழிக்கும் வசதி உண்டு .

* வங்கி கணக்கு, கிரடிட் கார்ட் எண்களை சேமிக்கலாம்.


தரவிறக்கம் செய்ய :


Setup file

Reg.key

Friday, 5 February 2016

வெற்றி உன் கையில் பகுதி : 2 (கணினி அறிவியல் 200/ 200 பெற ...)






                     இன்று நாம் பார்க்க போகும் பாடம் கணினி அறிவியல். இருக்கும் பாடங்களிலேயே மிகவும் எளிமையானது இதுதான். காரணம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மூலமே எளிதில் பாஸ் செய்துவிடலாம்.  ஆனால் 200/ 200  எடுக்க நினைபவர்களுக்கு இந்த ஒரு மதிப்பெண் வினாகள்தான் பிரச்சனையே. இந்த பாடத்தில் எப்படி தயார் செய்தால் எளிதில் மதிப்பெண் பெறலாம் என பார்ப்போம்.

·                      தயவு செய்து blue print பார்காதிர்கள். காரணம் ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தையும் சரியாக விடையளிக்கவேண்டும் என்றால் புத்தகம் முழுவதையும் படித்திருக்கவேண்டும். எனவே முக்கிய வினாக்கள் பார்ப்பது நல்லதல்ல.
·         இரண்டு பதிப்பேன், ஐந்து மதிப்பெண் வினாக்கள் மிகவும் குறைவே எனவே எளிதில் படிக்கலாம்.
·         C++ புரோகிராம் தெரிந்திருந்தால் வினாத்தாளில் கேட்கப்படும் கடைசி இரண்டு கேள்விக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

OMR : செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை.
·         75 மதிப்பெண்கள் OMR மூலவே வரவேண்டி உள்ளதால் அதை முறையாக செய்யவேண்டும்.
·         விடைகளை வட்டமிட கருப்பு / நீலம் பால்பாயின்ட் பேனாவையே உபயோகிக்க வேண்டும்.
·         பேனாவால் விடையளிப்பதால் அதை திருத்த இயலாது. எனவே கவனமாக விடையளிக்க வேண்டும்.
·         ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளை தெரிவு செய்யகூடாது.
·         வட்டத்தை முழுமையாக நிரப்பவேண்டும்.
·         வினாத்தாளில் எத்தனை கோடுகள் (dash) உள்ளன என சரியாக பார்த்து அதை OMR தாளில் சரியாக குறிப்பிடவேண்டும். காரணம் நான்கு வகையான வினாதாட்கள் வரும்.
·         தவறான விடையை அழிக்கிறேன் என நினைத்து OMR பேப்பரை கிழித்துவிடகூடாது. இதனால் மதிப்பெண் குறையும். வேறு OMR கிடைக்காது.
·         இதில் எந்த சந்தேகம் வந்தாலும் தேர்வறை கண்காணிப்பாளரை கேட்கவும்.

இரண்டு மதிப்பெண் வினாக்கள் :
·         star office இல் இருந்து 10 கேள்விகளும், C++ இல் இருந்து 15  கேள்விகளும் கேட்கப்படும்.
·         STAR OFFICE இல் பதில் எழுதுவது எளிது எனவே அதனை முதலில் பார்க்கவும்.
·         விடைகளை மிக அதிகமாக ஒருப்பக்கதிர்க்கு இழுக்காதிர்கள், அதற்காக ஒரே பக்கத்தில் ஐந்து வினாக்கான விடைகளை எழுதாதிர்கள்..

·         ஒரே கேள்விக்கான விடையை மறுமுறை எழுததிர்கள்.

ஐந்து மதிப்பெண் வினாக்கள்:
·         STAR OFFICE இல் அதிகபட்சம் 15 வினாக்களே உள்ளது, C++ இல் 10 தான் உள்ளது . எனவே எளிதாக இதனை எழுதலாம்.


·         விடைகளை பேப்பரின் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்கவும். கடைசியில் இரண்டு வரி எழுத இடம் இருக்கு என அங்கே இருந்து ஆரம்பிக்கவேண்டாம்.

·         ஐகான், டயலாக் பாக்ஸ் போட்டால் அழகாக போடவும். கடைமைக்காக போடதிர்கள்.

·         C++ புரோகிராம் எழுதினால் SYNTAX, OUTPUT முக்கியம்.

·         நன்றாக தெரிந்தால் மட்டுமே OUTPUT, ERROR புரோகிராமை எடுக்கவும்.
STAR OFFICE  முக்கிய வினாக்கள் தொகுப்பு டவுன்லோட் செய்ய 

C++  முக்கிய வினாக்கள் தொகுப்பு டவுன்லோட் செய்ய CLICK HERE 


முக்கியமான ஒரு மதிப்பெண் வினாத்தாட்கள் டவுன்லோட் செய்ய CLICK HERE 

video பதிவு பார்க்க :