Saturday 12 March 2016

காதலும் கடந்து போகும் : விமர்சனம்







         விஜய் சேதுபதி , மடோனா செபஸ்டின் மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் , சூது கவ்வும் என்னும் சூப்பர் ஹிட் கொடுத்த நலன் குமாரசாமியின் அடுத்த படைப்பு "காதலும் கடந்து போகும்". கொரியன் படத்தின் தழுவல் இது. படம் எப்படி என பாப்போம்வாங்க .




கதை :

    நண்பனுக்காக ஒரு கொலை வழக்கில் 5 வருடம் சிறை சென்று திரும்பி ஒரு பார் வைப்பதே லட்சியமாக உள்ள ஒரு மொக்க ரவுடி விஜய் சேதுபதி. விழுப்புரத்தில் உள்ள யாழினிக்கு சொந்த காலில் நேர்க்கவேண்டும் என்பது லட்சியம். சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் சேருகிறார். விதிவசத்தால் வேலை போக தங்க இடம் இன்றி சேதுபதி குடி இருக்கும் வீட்டுக்கு எதிரில் குடிவருகிறார்.

          முட்டல் மோதலுடன் தொடங்கும் நட்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வழக்கம் போல காதலாக மாறுகிறது. இவர்கள் காதலுக்கு வீட்டில் என்ன சொன்னார்கள் ? யாழினியின் லட்சியம் என்னாச்சு? சேதுபதியின் கனவு என்னாச்சு ?இடையில் வரும் வில்லன்கள்கதி என்ன என்பதுதான் கதை .



+ பாயின்ட் :

* வழக்கம் போல விஜய் சேதுபதி கலக்கல். மனுஷன் வரும் காட்சி எல்லாம் செம கைதட்டல். மாஸ் ஹீரோ படத்துக்கு கூட இவ்வளவு கைதட்டல் வருமான்னு தெரில.

* பாரில் சண்டைபோட்டு அடிவாங்கிவிட்டு அசாட்டா கண்ணாடி போட்டுகிட்டு நடந்துவரும் காட்சி செம.

* ஹீரோயின் மாத்திரை சாப்பிடார்னு தெரிஞ்சு பதறும் காட்சி காமெடி கலந்தகலக்கல் .

* சின்ன சின்ன கேரக்டர்கள் கூட அருமையாக நடித்திருப்பது . உதாரணமாக வி. சே  அசிஸ்டெண்ட்டாக வரும் நபரின் நடிப்பு.

* மடோனா செபஸ்டியன் அழகு பதுமையாக மட்டுமல்லாமல் நடிக்க தெரிந்திருப்பது .


* வி.சே. சேர்ந்து தண்ணி அடித்துவிட்டு அலம்பல் செய்யும் காட்சியில் ஹீரோயின் நடிப்பு கலக்கல் .



*நெறைய பாடல்கள் போட்டு உயிரை எடுக்காமல் விட்டது.

* வசனம் பல இடங்களில் கைதட்டலை வரவைக்கிறது. சின்ன சின்ன வார்த்தைகளில் கூட காமெடியை கலந்து அடித்துள்ளனர்.

*மானாட மயிலாட பாடல் காட்சி யில் பாடலும் ,காட்சியும் கண்ணுக்கு விருந்தாக உள்ளது.

* ஹீரோ அடிச்சா வில்லன்கள் எல்லாம் நூறு அடி உயரே பறப்பார்கள் என்ற சினிமாத்தனம் இல்லாமல் ரியல் பைட் போல சண்டை காட்சிகளை எடுத்தது .

* ஹீரோயினி தாமதமாக வருவார் என இன்டர்வியூவை தாமதமாக்க சேதுபதி செய்யும் ரகளை சிரித்து சிரித்து வயிறு வலிக்க வைக்கிறது .




- பாயின்ட் 

* கிளைமாக்ஸ் வழக்கமான சினிமா போல முடிந்தது .

* பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சில இடங்களில் வசங்கள் புரியவில்லை.

* வி.சே. பேசும் சில வசங்கள் அவரின் பழைய படங்களை நினைவு படுத்துகிறது.



மொத்தத்தில் :

குடும்பத்துடன் அனைவரும் சிரித்து மகிழ்ந்து பார்க்க கூடிய படம் இது. படம் பார்க்கும் போது போன் வந்தா எடுக்காம பார்த்தால் சின்ன சின்ன வசங்களை மிஸ் செய்யாமல் ரசிக்கலாம் .


No comments:

Post a Comment