Thursday, 19 June 2014

விஜய் : அடுத்த சூப்பர்ஸ்டார் ?





தமிழ் திரையுலகில் சிவாஜி எம் ஜி யார் க்கு பின் ரஜினி கமல் என இருந்தது . பின்பு அது விஜய் , அஜித் என ஆனது . அவர்கள் அதை சீரியஸாக எடுத்துகொள்கிரர்களோ இல்லையோ , ரசிகர்கள் இதை பெரிய விவாதமாகவே எடுத்துகொல்கின்றனர் “. ஒவ்வொரு முறையும் இவர்கள் படம் தனியாக வந்தாலே மாஸ் காட்ட நினைபவர்கள் , ஒன்றாக வந்தால் ஆடும் ஆட்டத்தை கேட்கவா வேண்டும் .

இருவர் ரசிகர்களின் மனதிலும் அவரவர் நடிகரை அடுத்த சூப்பர்ஸ்டாராக நினைத்துகொள்கிரர்கள் . யார் வந்தாலும் ரஜினியின் இடத்தை பிடிக்கமுடியாது என்பது வேறு விஷயம் ஆனால் அவரை நெருகுன்கிறது யார் என்பதே இன்றைய மில்லியன் டாலர் கேள்வி .

சமிபத்தில் “குமுதம் “ பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பு ஒன்றில் விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் தெரிவு செய்துள்ளனர் . அவர் 12,80,300 ஓட்டுகள் பெற்றுள்ளார் . அடுத்ததாக அஜித் 12,17,650 ஓட்டுகள் பெற்றுள்ளார் .

சமிபத்தில் வெளிவந்த துப்பாக்கி , ஜில்லா படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது . அடுத்து வரவிருக்கும் கத்தி மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . கடைசி இரண்டுபடங்களும் விஜய் மார்கெட்டை பெருமளவில் எகிரவைத்துள்ளது . ரஜினி போலவே விஜயின் படங்கள் பூஜை போட்டதுமே விற்பனையகிவிடுகிறது . வசூல் ராஜா என விநியோசதர்களால் அழைக்கபடுகிறார் .



இதன் அடிப்படையிலும் , ரசிகர்கள் ஓட்டு போட்டும் விஜயை தெரிவு செய்துள்ளனர் .விஜய் முதலிடம் பெற்றதை முகநூலில் அவர் ரசிகர்கள் பயங்கரமாக / சந்தோஷமாக பகிர்ந்து வருகின்றனர் .


Tuesday, 17 June 2014

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 2





கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி :1 

கடந்த பகுதியில் சில முக்கிய இணைய தளங்களை பார்த்தோம் இன்றும் அதுபோல பலதளங்களை பார்ப்போம் .இன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை தெரிந்துருப்போம் . பல தளங்கள் தெரியாமல் இருக்கலாம் . இதோ உங்களுக்காக சில தளங்கள் .
கல்வி தொடர்பான தளங்கள் :




கல்வி தொடர்பான தளங்கள் :


















மேலும் தெரிந்துகொள்ள :  CLICK HERE


டிஸ்கி : இதுபோல  இன்னும் பல தளங்களை விரைவில் பார்க்கலாம் .


இதையும் படிக்கலாமே ?

Monday, 16 June 2014

வை .கோ மற்றும் வாலியின் புத்தகங்கள் இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா ?






                   தமிழகத்தில் "நடக்கும்" போராட்டங்களில் அதிக அளவில் கலந்துகொண்டவர் வை .கோ அவர்கள் . கட்சி சார்பற்று , மக்களுக்காக களத்தில் இறங்கி போராட தயங்காதவர் இவர் . ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை முதல் முல்லை பெரியார் பிரச்சனை வரை மக்களுக்காக தெருவில் இரங்கி போராடியவர் . ஆனாலும் இவரை மக்கள் தேர்தலில் ஜெய்க்க வைபதில்லை என்பது கொடுமையான விஷயம் .


                  இவரின் போராட்டத்தின் போது பல வழக்குகளை சந்தித்துள்ளார் .24/09/2007 அன்று தஞ்சையில் வை கோ பேசிய இல்லை இல்லை ஆற்றிய உரையின் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டுள்ளனர் . அந்த புத்தகத்தின் மின் பதிப்பை (E-BOOK) உங்களுக்காக வழங்குகிறேன் .






தரவிறக்கம் செய்ய : வரலாறு சந்தித்த வழக்குகள்

============================================================================


வாலியின் “நினைவு நாடாக்கள் “


             வாலிப கவிஞர் என அன்புடன் அழைக்கபட்ட மறைந்த பாடலாசிரியர் வாலி அவர்கள் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வந்தது “நினைவு நாட்கள் “ என்னும் தொடர் . தனது வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் , தான் கடந்து வந்த பாதையில் இருந்த நல்ல , கெட்ட சம்பங்கள் , தான் சந்தித்த பலதரபட்ட மனிதர்கள் , அவர்களின் குணநலன்கள் பற்றி விரிவாக , மிக அருமையான எழுத்து நடையில் எழுதியிருப்பார் வாலி அவர்கள் .

   264 பக்கங்கள் உள்ள இந்த நூல் படிக்க படிக்க இன்னும் ஆவலை தூண்டும் நூல் ஆகும் . நமக்கு தெரிந்த மனிதர்களின் வித்தியாசமான முகங்களை பற்றி வாலி விவரித்து இருப்பார் .

தரவிறக்கம் செய்ய : “நினைவு நாடாக்கள் “

இதையும் படிக்கலாமே :






முண்டாசுபட்டி : திரைவிமர்சனம்

 

அலட்சியம்






Saturday, 14 June 2014

முண்டாசுபட்டி : திரைவிமர்சனம்




இது குறும்படமாக வந்து பெரும் வரவேற்பையும் , பாராட்டையும் பெற்ற ஒரு காமெடி படம் , அதை முழுநீள படமாக எடுத்துள்ளனர் . குறும்படத்தில் இருந்த வேகம் , காமெடி இதில் இருந்ததா, இயக்குனர் ராம்குமார் வெற்றி பெற்றாரா  என பார்ப்போம் .

   கதை 1982 வருடம் நடைபெறுகிறது , போட்டோ எடுத்தாலே இறந்துவிடுவோம் என்ற மிகப்பெரிய நம்பிக்கையில் வாழும் மக்களை கொண்டது “முண்டாசுபட்டி “. இறந்தவர்களை மட்டுமே போட்டோ எடுப்பது இவர்கள் வழக்கம் . அப்படி போட்டோ எடுக்க வரும் ஹீரோ விஷ்ணு அங்கு உள்ள நந்திதாவை காதலிக்க இவர்கள் காதல் என்ன ஆனது என்பதை சைட்டிஷ் வைத்துகொண்டு காமெடியை மெயின்ஆக வைத்து கொண்டு விளையாடியுள்ளனர் .

விஷ்ணு காமெடியில் நன்றாக நடிக்க முயர்சிசெய்துளார் . நந்திதா அந்த கணங்கள் மட்டுமே பல பாஷை பேசுது . இவரின் நடிப்பில் பெரிய அளவில் சொல்ல ஒன்றும் இல்லை . படத்தில் இரண்டு துணை நடிகர்கள் தான் பெரிய அளவில் பெயர் வாங்குகிறார்கள் , பெயர் மட்டுமல்ல கைதட்டலுக்கும் இவர்கள்தான் காரணம் . ஒன்று காளி இவர் விஷ்ணுவின் நண்பராக படம் முழுவதும் வருகிறார் . இவர் அடிக்கும் பல சந்தானம் ஸ்டைல் டயலாக்க்கு செம ரெஸ்பான்ஸ் தியட்டரில்.
 மற்றவர் முனிஸ் கான் என வரும் ராமதாஸ் . இவர் வந்த பின்தான் படம் வேகம் பிடிகிறது . பல காட்சிகள் காமெடி சரவேடி . போட்டோவை பார்த்து புலம்புவது நச் . ஆனந்த ராஜ் வருகிறார் , போகிறார் .

+ பாயிண்ட்ஸ் :
·         காமெடி காட்சிகள்
·         நகைசுவை வசனங்கள்
·         கலை இயக்குனரின் உழைப்பு
·         குடும்பத்துடம் பார்ப்பது போல அமைக்கபட்ட திரைகதை
·         ஓவர் சென்டிமென்ட் போட்டு புழியாதது
·         காளி , ராமதாசின் நடிப்பு
·         நந்திதா கண் (!!!)

பாயிண்ட்ஸ் :

·         பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்
·         படத்தின் நீளம் .
·         முதல் பாதியில் ஆரம்பம் .



கடைசியாக :


     ரொம்ப எதிர்பார்க்காம போனா கண்டிப்பா சிரித்துவிட்டு வரலாம் . குடும்பத்துடன் பார்க்கலாம் .

Tuesday, 10 June 2014

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 1









இன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை தெரிந்துருப்போம் . பல தளங்கள் தெரியாமல் இருக்கலாம் . இதோ உங்களுக்காக சில தளங்கள் .



கிரிகெட் பற்றி அறிய ..














மேலும் படிக்க :

                                  

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 1






  இதையும் படிக்கலாமே :

அலட்சியம்

 

ஓவியன் 

Tuesday, 27 May 2014

வைரமுத்துவின் கவிதைகள் அவர் குரலில் ...(FREE DOWNLOAD MP3)




          கவிதைகளை பிடிக்காதவர்களே இருக்கமுடியாது . அதுவும் வைரமுத்து கவிதை என்றால் கேட்கவே வேண்டாம் . அனைவருக்கும் பிடிக்கும் வகையில் , அனைவரும் ரசிக்கும் வகையில் எளிய நடையில் கவிதை எழுவதில் வல்லவர் நமது கவி பேரரசு வைரமுத்து அவர்கள் . அவர் பல கவிதை நூல்கள் எழுதியுள்ளார் . அவை விற்பனையில் சாதனை படைத்துள்ளது . அவரின் பாடல்கள் பல தேசிய விருதுகள் பெற்றுள்ளது .


       அவரின் கவிதையை படித்து ரசிப்பதே தனி சுகம், அதுவே அவர் குரலில் கேட்டால் எப்படி இருக்கும் ?. ஆம் உங்களுக்காக அவர் தனது குரலில் தன கவிதைகளை உங்களுக்காக படித்து இல்லையில்லை பாடி காட்டுகிறார் . அவரின் கம்பிர குரலில் அந்த அழகிய கவிதைகளை உங்கள் செவிவழி சுவைக்க வாருங்கள் . இதோ உங்களுக்காக .....






· 

               For download  : Click Here

Wednesday, 14 May 2014

ON-LINE இல் பொருட்கள் வாங்க சிறந்த தளங்கள்








               இப்போது பலர் ஆன் லையனில் பொருட்கள் வாங்குவதை விருப்பமாக கொண்டுள்ளனர் . காரணம் அலைச்சல் மிச்சம் , பலவகையான பொருகளை பார்த்துவான்கலாம் . நாம் விரும்பும் நேரத்தில் ஆடர் செய்யலாம் . பணத்தை செலுத்த பலவழிகள் உள்ளது என பல நன்மைகள் உள்ளது . எனவே ஆன் லையில் பொருட்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது . அப்படி வாங்க பலதளங்கள் உள்ளது அவற்றில் சிலவற்றை பார்ப்போம் .


AMAZON.IN


                  இப்போது மிகவும் பிரபலமாகிவரும் தளம் இது . இதில் இல்லாத பொருட்களே இல்லை என்னும் அளவுக்கு அனைத்துவகை பொருட்களும் கிடைகிறது .

நன்மைகள் :
  
  •    CASH ON DELIVERY (COD) வசதி இதில் உண்டு . நீங்கள் விரும்பிய பொருளை பெற்ற பின் பணத்தை கொடுத்தால் போதும் . இதனால் பணத்தை கட்டி ஏமாறும் கஷ்டம் இல்லை .
  • எப்பொழுது வேண்டுமானாலும் ஆடரை கேன்சல் செய்யலாம் . உங்களுக்கு பார்சல் கையில் வந்த பின்பு வேண்டாம் என கூட திருப்பி அனுப்பலாம் .
  • பார்சல் இப்போது எந்த இடத்தில் உள்ளது என அறிந்துகொள்ளும் வசதி .
  • SMS, E-MAIL மூலம் உங்கள் பொருள் இப்போது எங்கு உள்ளது என தகவல் வரும் .
  • 24 மணி நேர கஷ்டமர் கேர் உதவி .

இந்த தளம் செல்ல :   AMAZON.IN




மேலும் படிக்க : 

ON-LINE இல் பொருட்கள் வாங்க சிறந்த தளங்கள்