Showing posts with label TATA DOCOMO. Show all posts
Showing posts with label TATA DOCOMO. Show all posts

Friday, 25 October 2013

மொபைல் போன் பயன்படுத்தும் அனைவரும் அறிய வேண்டிய தகவல்



நீங்கள் மொபைல் போன் பயன்படுத்துகின்றிர்களா ? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்குதான் .

மேலும் படிக்க : CLICK HERE



TRY TO READ:



Tuesday, 28 May 2013

TATA DOCOMO : "கஷ்ட"மர் கேர்






கடந்த முன்று வருடங்களுக்கு முன் TATA DOCOMO PREPAID SIM வாங்கினேன் . கால் கட்டணங்கள் வினாடிக்கு அரை பைசாவும் , SMS இலவசமாகவும் இருந்ததால் அதையே பயன்படுத்தினேன் . மற்ற நிருவனகளுடன் ஒப்பிடும் போது BOOSTER PACK மிகவும் கம்மி .( வோடபோன் இல் 225 ரூபாய் உள்ளது இதில் வெறும் 52 ரூபாய் தான் ). ஏதேனும் குறை என்றால் 198 க்கு அடித்தால் உடனே சரி செய்வார்கள் , தவறாக எடுத்த பணத்தை உடனே கொடுப்பார்கள் .

ஆனால் இப்பொழுது ???

நிகழ்ச்சி 1:

CALLER TUNE நான் கேட்காமல் வைத்து விட்டு 120 ரூபாய் எடுத்தார்கள் , புகார் செய்ததும் 30 திருப்பி கொடுத்தனர் . மீதி இரண்டு நாளில் கிடைக்கும் என்றனர் . இரண்டு நாள் கழித்து கேட்டதும் மீண்டும் அதே பதில் இன்னும் இன்ரண்டே நாள் என்று . மறுபடி கேட்ட பொழுது தவறாக எடுக்கபட்ட பணம் இரண்டு நாளில் திருப்பி கிடைக்காவிட்டால் அவ்வளவுதான் . திரும்ப அளிக்க எங்களுக்கு உரிமையில்லை என சொன்னார்கள் . அரை மணிநேரம் அவர்களுடன் வாதிட்டு பணத்தை திரும்ப பெற்றேன் .




நிகழ்ச்சி 2:

கடந்த மாதம் தினம் ஒரு ஜோக் என சொல்லி 10 ரூபாய் எடுத்தனர் . புகார் செய்த போது நீங்கள் SMS முலம் ACTIVATE செய்து உள்ளிர்கள் . இது உங்கள் தவறு என்றனர் . நான் SMS செய்யவில்லை என வாதடியபின் பணத்தை திருப்பி அளித்தனர் .
அடுத்தநாள் தினம் ஒரு ஆபர் என சொல்லி 30 ரூபாய் எடுத்தனர் . மீண்டும் புகார் செய்ய நீங்கள் GPRS பயன்படுத்தி உள்ளிர்கள் என சொன்னார்கள் . என் மொபில் பேசிக் மாடல் அதில் அந்த வசதி இல்லை என்றதும் சரி என சொல்லி 20 ரூபாய் திருப்பி தந்தார்கள் . மீதி 10 எங்கே என்றதுக்கு ஒருவருக்கு மாதத்திற்கு 30 மட்டுமே திருப்பி அளிக்க முடியும் என்றால்கள் .

இது என்ன கதை எடுப்பது எவ்வளவு வேண்டுமானாலும் ஆனால் கொடுப்பது முப்பதுதானாம் . ஒருவாரம் தொடர்ந்து வாதாடினேன் .
விளைவுகள் :

  1. முன்று வருடமாக இலவசமாக இருந்த SMS பைசாவாக மாற்ற பட்டது .
  2. கால் கட்டணம் 1.2 / S  என மாறியது ( BOOSTER போட்டும் )
  3. எந்த BOOSTER போட்டாலும் பணம் போகுமே தவிர அதன் பலன்கள் கிடைக்காது .

சில கேள்விகள் :

  1. எனக்கு ஒரு BOOSTER APLICABLE ஆகாது என்றால் எப்படி பணத்தை மட்டும் எடுத்து கொண்டு இது உங்களுக்கு கிடையாது என சொல்லலாம் ?
  2. ஒரு BOOSTER போடும் போது முன்பு உள்ள BOOSTER தானாகவே செயல் இழந்து விடும் . இதுதானே அனைத்து நிறுவனங்களின் நடைமுறை .
  3. வாடிக்கையாளரின் பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் எடுப்போம் ஆனால் மாதம் 30 மட்டுமே திருப்பு தருவோம் என்பது பகல் கொள்ளை அல்லவா ?
  4. தவறாக ACTIVATE செய்யபட்ட சர்வீசும் 24 ம்ணி நேரத்திர்க்குள் 155223 என்ற எண்ணின் மூலம் DEACTIVATE செய்யபட்டால் முழு பணமும் திருப்பி தரப்பட வேண்டும் என்பது TRAI விதிமுறை . அதை எப்படி மீறுகின்றனர் ?
  5. ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு ஒருதடவைதான் 198 சேவையை பயன்படுத்தலாமா ?( DOCOMO CUSTOMER TRY பண்ணிபாருங்க இரண்டால் தடவை முயற்சி செய்தால் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி பிஸியாக உள்ளார் என வரும் )
  6. வாடிக்களையாலரை கேட்காமல் எப்படி SMS மூலம் ஒரு சேவையை அவர்களே ACTIVATE செய்யலாம் . SMS படிக்க தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் ?

என்ன தீர்வு ?

நண்பர்களே இதுக்கு என்ன தீர்வு ? இதை முடிந்த அளவு FACEBOOK இல் SHARE  செய்யுங்கள் . உங்கள் கருத்தையும் சொல்லுங்கள் . இதுபோல உங்களுக்கு எதாவது நேர்ந்துள்ளதா ?