கடந்த முன்று வருடங்களுக்கு முன் TATA DOCOMO PREPAID SIM வாங்கினேன் . கால் கட்டணங்கள்
வினாடிக்கு அரை பைசாவும் , SMS இலவசமாகவும் இருந்ததால் அதையே பயன்படுத்தினேன் . மற்ற நிருவனகளுடன் ஒப்பிடும்
போது BOOSTER PACK மிகவும் கம்மி .( வோடபோன்
இல் 225 ரூபாய் உள்ளது இதில் வெறும் 52 ரூபாய் தான் ). ஏதேனும் குறை என்றால் 198
க்கு அடித்தால் உடனே சரி செய்வார்கள் , தவறாக எடுத்த பணத்தை உடனே கொடுப்பார்கள் .
ஆனால் இப்பொழுது ???
நிகழ்ச்சி 1:
CALLER TUNE நான் கேட்காமல் வைத்து விட்டு 120
ரூபாய் எடுத்தார்கள் , புகார் செய்ததும் 30 திருப்பி கொடுத்தனர் . மீதி இரண்டு
நாளில் கிடைக்கும் என்றனர் . இரண்டு நாள் கழித்து கேட்டதும் மீண்டும் அதே பதில்
இன்னும் இன்ரண்டே நாள் என்று . மறுபடி கேட்ட பொழுது “தவறாக
எடுக்கபட்ட பணம் இரண்டு நாளில் திருப்பி கிடைக்காவிட்டால் அவ்வளவுதான் . திரும்ப
அளிக்க எங்களுக்கு உரிமையில்லை “ என சொன்னார்கள் . அரை மணிநேரம் அவர்களுடன் வாதிட்டு
பணத்தை திரும்ப பெற்றேன் .
நிகழ்ச்சி 2:
கடந்த மாதம் தினம் ஒரு ஜோக் என
சொல்லி 10 ரூபாய் எடுத்தனர் . புகார் செய்த போது நீங்கள் SMS முலம் ACTIVATE செய்து உள்ளிர்கள் . இது உங்கள்
தவறு என்றனர் . நான் SMS
செய்யவில்லை
என வாதடியபின் பணத்தை திருப்பி அளித்தனர் .
அடுத்தநாள் “தினம் ஒரு ஆபர் “ என சொல்லி 30 ரூபாய் எடுத்தனர் . மீண்டும் புகார்
செய்ய “நீங்கள் GPRS பயன்படுத்தி உள்ளிர்கள் “ என சொன்னார்கள் . என்
மொபில் பேசிக் மாடல் அதில் அந்த வசதி இல்லை என்றதும் சரி என சொல்லி 20 ரூபாய்
திருப்பி தந்தார்கள் . மீதி 10 எங்கே என்றதுக்கு ஒருவருக்கு மாதத்திற்கு 30
மட்டுமே திருப்பி அளிக்க முடியும் என்றால்கள் .
இது என்ன கதை எடுப்பது எவ்வளவு வேண்டுமானாலும் ஆனால் கொடுப்பது முப்பதுதானாம்
. ஒருவாரம் தொடர்ந்து வாதாடினேன் .
விளைவுகள் :
- முன்று வருடமாக இலவசமாக இருந்த SMS பைசாவாக மாற்ற பட்டது .
- கால் கட்டணம் 1.2 / S என மாறியது ( BOOSTER போட்டும் )
- எந்த BOOSTER போட்டாலும் பணம் போகுமே தவிர அதன் பலன்கள் கிடைக்காது .
சில கேள்விகள் :
- எனக்கு ஒரு BOOSTER APLICABLE ஆகாது என்றால் எப்படி பணத்தை மட்டும் எடுத்து கொண்டு இது உங்களுக்கு கிடையாது என சொல்லலாம் ?
- ஒரு BOOSTER போடும் போது முன்பு உள்ள BOOSTER தானாகவே செயல் இழந்து விடும் . இதுதானே அனைத்து நிறுவனங்களின் நடைமுறை .
- வாடிக்கையாளரின் பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் எடுப்போம் ஆனால் மாதம் 30 மட்டுமே திருப்பு தருவோம் என்பது பகல் கொள்ளை அல்லவா ?
- தவறாக ACTIVATE செய்யபட்ட சர்வீசும் 24 ம்ணி நேரத்திர்க்குள் 155223 என்ற எண்ணின் மூலம் DEACTIVATE செய்யபட்டால் முழு பணமும் திருப்பி தரப்பட வேண்டும் என்பது TRAI விதிமுறை . அதை எப்படி மீறுகின்றனர் ?
- ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு ஒருதடவைதான் 198 சேவையை பயன்படுத்தலாமா ?( DOCOMO CUSTOMER TRY பண்ணிபாருங்க இரண்டால் தடவை முயற்சி செய்தால் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி பிஸியாக உள்ளார் என வரும் )
- வாடிக்களையாலரை கேட்காமல் எப்படி SMS மூலம் ஒரு சேவையை அவர்களே ACTIVATE செய்யலாம் . SMS படிக்க தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் ?
என்ன தீர்வு ?
நண்பர்களே
இதுக்கு என்ன தீர்வு ? இதை முடிந்த அளவு FACEBOOK இல் SHARE செய்யுங்கள் . உங்கள் கருத்தையும் சொல்லுங்கள் .
இதுபோல உங்களுக்கு எதாவது நேர்ந்துள்ளதா ?


