Wednesday, 2 September 2015

புதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை






நவ கிரகங்களில் இரண்டு எங்கள் ஊர் அருகிலேயே உள்ளது . பலமுறை சென்று இருந்தாலும் ஏனோ அதைப்பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம வந்ததில்லை . சென்ற வாரம் புதன் ஸ்தலம் சென்றேன் . அதைபற்றிய பதிவே இது .


நாகை மாவட்டம் , சீர்காழி வட்டத்தில் உள்ளது திருவெண்காடு . மயிலாடுதுறையில் இருந்து 25 KM , சீர்காழியில் இருந்து 13 KM தூரமும் உள்ளது இந்த கோவில் .சுவேதாரண்யா சுவாமிகள் கோவிலுடன் இணைந்து இந்த ஸ்தலம் உள்ளது .


திருமதி வித்யாம்பாள் சன்னதியின் அருகில் உள்ளது புதன் ஸ்தலம் . மூன்று களங்கள் உள்ள ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்று .

பலன்கள் :

  • கல்வியில் மேன்மை
  • உடல்நலம்
  • குடும்ப சந்தோசம் அதிகரிப்பு
  • செல்வம் பெருக
  • தொழில் வளர்ச்சி


வழிப்பாட்டு முறைகள் :


  • அகல்விளக்கு வைத்து வழிபடலாம்
  • வில்வ இலையால் பூஜை
  • துளசி வழிபாடு



பார்க்கவேண்டியவை :

நீங்கள் எங்கு நின்று பார்த்தாலும் ரயில் உங்களை நோக்கி வருவதுபோல வரையபட்ட ஓவியம



வாயிலில் உள்ள நந்தி



சந்திர தீர்த்தம் (புதன் ஸ்தலம் எதிரே உள்ளது )



திருமதி வித்யாம்பாள் சன்னதி




ஆனந்த தாண்டவம் ஓவியம்


சுவேதார்ணய சுவாமிகள் ஆலயம்


பிரகாரம்





சகித்து கொள்ளமுடியாத விஷயம் :


புதனுக்கு அர்ச்சனை செய்ய டிக்கெட் 15 ரூபாய் என்று வாங்குகின்றனர் .ஆனால் டிக்கெட் விலை 5  மட்டுமே , மீதி 10 க்கு கொஞ்சம் வில்வ இலையை கொடுக்கின்றனர் . இந்த 10 ரூபாய் எந்த கணக்கில்வரும் , யார் யார்க்கு போகும் , இது அரசு அனுமதியுடன் நடக்கிறது என்பது அந்த புதனுக்கே வெளிச்சம் .


இதையும் படிக்கலாமே :





Monday, 31 August 2015

ஆண்ட்ராய்ட் போனின் மெம்மரியை அதிகரிக்க 5 வழிகள்






           ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் பெரிய சவால் அதன் நினைவகம்தான்(Memory). பல போன்களில் குறைவான நினைவகமே உள்ளது. இப்போது பெரும்பாலான போன்களில் 1 GB RAM உள்ளது. SD CARD இல்லாமல் தனியாகவும் போனிலேயே மெம்மரி உள்ளது. 

     இந்த அனைத்து மெம்மரிகளையும்  எப்படி சரியாக பராமரிப்பது. தேவையில்லாத கழிவுகளை மெம்மரியில் இருந்து நீக்குவது எப்படி என்றுதான் இன்று பார்க்க போகிறோம்.



1. தேவையில்லாத அப்ளிகேஷனை நீக்குதல் 

        இலவசமாக கிடைக்குதேன்னு கண்ட கண்ட அப்ளிகேஷனையும் இன்ஸ்டால் செய்ய கூடாது. அப்படி செய்தால் தேவையில்லாமல் மெம்மரி வீணாகும். அப்படி தேவையில்லாத அப்ளிகேஷனை அன்-இன்ஸ்டால் செய்தால் மெமரி அதிகரிக்கும்.

வழி  :  Settings -> Applications manager 

2. Cache மெமரியை அழித்தல் 

நாம் அடிகடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் மற்றும் இணைய பயன்பாட்டால் போனில் கேஷ் மெம்மரி அதிகரிக்கும். இது போனின் வேகத்தை வெகுவாக குறைக்கும். எனவே அடிகடி இதை அழிக்கவேண்டும். இதை அழிக்க பல அப்ளிகேஷன்கள் உண்டு. அதையும் பயன்படுத்தலாம்.

வழி : Settings >Applications manager இல் அப்ளிகேஷனை தெரிவு செய்து அழிக்கலாம்.

3. போட்டோ , வீடியோகளை ONLINE BACKUP எடுத்தல்.

      நாம் எடுக்கும் அனைத்து போட்டோ மற்றும் வீடியோகளை நமது கூகிள்  அக்கொண்டில் நேரடியாக ஏறுவது போல அமைக்கலாம். இதனால் நமது போட்டோகள் பத்திரமாகவும், கணினியில் எளிதில் பார்க்கும் வண்ணமும் இருக்கும். இதுக்கு நெட் கனைஷன் அவசியம் தேவை.

4. தேவையில்லாத கோப்புகளை அழித்தல் .

         தேவையில்லாத போட்டோ , வீடியோ, கோப்புகள் போன்றவற்றை உடனடியாக அழிக்க வேண்டும். போனை குப்பை தொட்டிபோல வைத்துகொல்லாமல் பேங்க் லாக்கர் போல வைத்துகொள்ள வேண்டும்.


5. கோப்புகள் மற்றும் அப்ளிகேஷன்களை SD CARD க்கு மாற்றுதல்.

       நாம் இன்ஸ்டால் செய்யும் அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் போன் மெமரியிலே பதியும். எனவே அப்ளிகேஷன்களை SD CARD க்கு மாற்றவேண்டும். நாம் எடுக்கும் போட்டோ, வீடியோ போன்றவை நேரடியாக SD CARD இல் பதியுமாறு மாற்றவேண்டும். இப்படி மாற்ற பல அப்ளிகேஷன்கள் கிடைகிறது. நாமும் சாதரணமாகவே மாற்றமுடியும்.




இதையும் படிக்கலாமே :

உங்கள் smart phone மூலம் டிவி, ரேடியோவை இயக்குவது எப்படி ?





Tuesday, 25 August 2015

உங்கள் smart phone மூலம் டிவி, ரேடியோவை இயக்குவது எப்படி ?







               ஆண்ட்ராய்ட் போன் வந்த பின் பல வசதியான விஷயங்கள் வந்துவிட்டது. உலகமே நம் கைக்குள் வந்துவிட்ட நிலைதான் இப்போது . வீட்டில் டிவி, ரேடியோ போன்றவற்றை இயக்க ரிமோட் பயன்படுத்துவோம். இனி அதற்க்கு பதில் உங்கள் போனையே பயன்படுத்தலாம். வாருங்கள் எப்படி என்று பார்ப்போம்.

      இதற்க்கு தேவை IR blasters வசதியுள்ள ஒருஆண்ட்ராய்ட் போன் மட்டுமே. அது என்ன IR blasters என்கின்றிர்களா ?


IR blasters: 


        Infra Red என்பதன் சுருக்கமே IR . முன்பு போனில் இருந்து அடுத்த போனுக்கு கோப்புகளை மாற்ற இன்ப்ரா ரெட் வசதியே பெரும்பாலும் பயன்படுத்தபட்டது. உங்கள் டிவி ரிமோட்டில் சிகப்பு வண்ண விளக்கு பார்த்திருப்பிர்கள். அதில் இருந்து வரும் ஒளியை பெற்றுக்கொள்ள டிவியில் ஒருபல்பு இருக்கும். இப்போது நமது போனில் IR blasters மூலம் நாம் அந்த சிக்னலை டிவிக்கு அனுப்பபோகிறோம்.

ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்:

Friday, 21 August 2015

LIVE TV பார்க்க மிக சிறந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்.




            இன்று ஆண்ட்ராய்ட்  போன் வைத்திருப்பவர்கள்தான் அதிகம். மிக குறைந்த விலையில் பல தரமான போன்கள்  கிடைபதால் பலர் அதை விரும்பி வாங்குகின்றனர். அப்படி வாங்கும் போனில் பல அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வோம். அதில் பெரும்பாலானவை பொழுதுபோக்கு சம்பந்தபட்டதாகவே இருக்கும். 



    இப்போது வீட்டில் சீரியல் பார்க்கும் ஆட்கள் அதிகமாக உள்ளதால் நம்மால் அந்த நேரத்தில் செய்திகள் பார்க்க முடியாது. இதுபோன்ற கஷ்டத்தை போக்க சில நேரலை டிவி அப்ளிகேஷன்கள் உள்ளன. அவறை பற்றி பாப்போம்.

Sunday, 9 August 2015

தல 56 மற்றும் புலி : சினிமா ...சினிமா

WWW.KINGRAJA.CO.NR


         புலி படம் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்கு இன்னொரு சிறப்பாக ஆண்ட்ராய்டு, விண்டோஸ் , மற்றும் ஐஓஎஸ் என அனைத்து தொழில்நுட்பங்களிலும் விளையாடும் கேம் உருவாக்கப்பட உள்ளது. ஏற்கனவே ‘கத்தி’ படத்திற்கு ஆண்ட்ராய்டு கேம் ரிலீஸ் செய்த ஸ்கைடௌ ஸ்டூடியோஸ் தான் ‘புலி படத்திற்கான கேமையும் உருவாக்கி வருகிறார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக படத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்ட்ரேடர்ஜி கேம் எனப்படும் , ஒரு கிராமம், போர் கருவிகள் உருவாக்கம், மற்றும் போர் களம் அமைத்தல் என உருவாக்கப்பட  உள்ளது புலி கேம்.

          இவ்வளவு நாளாக ரேஸ் அல்லது சண்டை கேமாக ஒவ்வொரு லெவலாக முன்னேறி வித்யாசமான பின்னணி என மட்டுமே இந்தியாவில் படங்களை அடிப்படையாகக் கொண்ட கேம்கள் உருவாக்கப்பட்டன. ‘கத்தி’, கப்பர் என இதில் பல கேம்கள் அடக்கம். இப்போது இந்தியப் படங்களில் முதல் முறையாக அரசர் கால கதையையும் உள்ளடக்கிய ‘புலி’ படத்தின் கேம் போர்களம் அமைத்தல் அதில் ஹீரோவாக விஜய் அரசனாக செயல்படுதல் என விளையாட்டு சுவாரஸ்யம் நிறைந்த கேமாக உருவாக உள்ளது. இதற்கான டீஸரும் விரைவில் வெளியிட உள்ளனர்

WWW.KINGRAJA.CO.NR

          சினிமா பிரபலங்கள் பலருக்கும் அஜித்தைப் பிடிக்கும், ஆனால் அஜித்தின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் யார் தெரியுமா?. அஜித் தற்போது சிவா இயக்கத்தில் தல-56 படத்தில் நடித்து வருகிறார்.
            ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், அஸ்வின் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இவரின் இசையை அஜித் கேட்டுள்ளார்.இசை மட்டுமின்றி அனிருத் பணியாற்றும் முறையும் அஜித்திற்கு மிகவும் பிடித்து போயுள்ளது.
            எனவே தல-57 படத்திற்கும் அனிருத்தையே இசையமைப்பாளராக்க அஜித் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.இதற்கு முன் அஜித்தின் குட் மியூசிக் லிஸ்டில் எப்போதும்யுவன் இருப்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் இப்போது அனிருத்தும் இணைந்துவிட்டார். 

நன்றி : விகடன் 

Friday, 7 August 2015

ANDROID மொபைலில் பேட்டரியை பாதுகாக்க ஒரு சிறந்த APPLICATION.





எப்பொழுதும் சார்ஜில் இருப்பதால் இனி என் ஆண்ட்ராட் போனை லேன்ட் லைன் போன் என அழைக்கலாம் என இருக்கிறேன் :

-- பாதிக்கபட்ட ஒருவன் --

ANDROID MOBILE வைத்திருக்கும் அனைவரும் சந்திக்கும் ஒரே பிரச்சனை அதன் பேட்டரி லைப் தான் . யானைக்கு தீனி போடுவது போல எப்பொழுதும் சார்ஜில் இருக்கவேண்டும் . காரணம் இந்த வகை போன்களில் பின்புலத்தில் (BACKGROUND RUNNING APPLICATIONS) பல நிரல்கள் ஓடிக்கொண்டு இருக்கும் . இது போன்று தேவையில்லாத APPLICATION களை நிறுத்தி பாட்டரி லைபை அதிகரிக்கும் ஒரு APPLICATION பற்றிதான் நாம் பார்க்க போகிறோம் .

DU BATTERY SAVER

இது உங்கள் போனில் உள்ள சார்ஜை குறைவாக செலவழிக்க உதவுகின்றது. உங்கள் போனில் எப்போது சார்ஜ் குறைகின்றதோ அப்போது இதன் மூலம் உங்கள் பேட்டரி திறனை அதிகபடுத்தி நீண்ட நேரம் பயன்படுத்தலாம்.

பயன்கள் :

  • Intelligent mode switching.  : நமது விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிகொள்ளலாம் .
  • Battery level. இன்னும் எவ்வளவு பேட்டரி உள்ளது , எவ்வளவு நேரம் தாங்கும் என்று அறியலாம்.
  • Time schedule. குறிபிட்ட நேரத்திற்கு பின் MODE மாறும்மாறு வைக்கமுடியும் .
  • Auto clear apps. போனில் பின்னணியில் செயல்படும் தேவையில்லாத அப்ளிகேஷன்களை நிறுத்த/தடுக்க உதவும்.
  • Set an auto clear schedule : இதன் மூலம் குறிபிட்ட கால இடைவெளியில் தேவையில்லாத அப்ளிகேஷனை நெருத்தமுடியும்.
  • உங்கள் போனின் 70% பாட்டரி லைப்பை அதிகரிக்கும்.


தரவிறக்கம் செய்ய :




Sunday, 2 August 2015

ப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் android application








                          நாம் அதிகமாக நமது போனில் உள்ள போட்டோ, படங்கள் , மற்ற அப்ப்ளிகேஷன்களை மற்றவர்களுடன் பகிர பயன்படுத்துவது ப்ளூடூத் தான் . இது வசதியான ஒன்றாக இருந்தாலும் வேகம் குறைவுதான் . இந்த கஷ்டத்தை போக்க ஒரு அருமையான ஆண்ட்ராயட் அப்ளிகேஷன் உள்ளது . அதை பற்றிதான் பார்க்கபோகிறோம் .

ANY SHARE :

அந்த அருமையான அப்ளிகேஷன் பெயர் ANY SHARE . இதை உங்கள் போனிலும் , உங்கள் கோப்புகளை யாருக்கு மாற்ற வேண்டுமோ அவர் போனிலும் நிறுவ வேண்டும் .இப்போது இருவரும் தங்கள் கோப்புகளை மிக எளிதில் மாற்றிகொள்ளலாம் .




நன்மைகள் :

* WI-FI மூலம் கோப்புகள் மாறுவதால் விரைவாக மாறும் .

* சாதரணாமாக ப்ளூடூத் மூலம் அனுப்புவதைவிட 60 மடங்கு வேகத்தில் அனுப்பலாம் .

* SEND- RECEIVE வசதிகள்

* பயன்படுத்த எளிதானது

* மிக விரைவானது

* மெமரி கார்ட்  மற்றும் போன் மெமரியில் இருந்து கோப்புகளை அனுப்பலாம் .

* ஒரே நேரத்தில் பல கோப்புகளை அனுப்பலாம் .

* பெரிய அளவுள்ள கோப்புகளை எளிதாக மாற்றலாம் . படங்களை
   (MOVIES)அனுப்புவது எளிது .




இதை தரவிறக்கம் செய்ய : for download - link -1


இதை தரவிறக்கம் செய்ய : for download - link -2



இதை தரவிறக்கம் செய்ய : for download - link -3



இதையும் படிக்கலாமே ?