Sunday, 19 July 2015

பதிவர்கள் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழி





      பொழுதுபோக்காக இணையத்தில் நாம் எழுதிவந்தாலும் பலரின் முக்கிய நோக்கம் இந்த எழுத்தின் மூலம் ஏதாவது பணம் ஈட்ட முடியுமா என்பதே. விளம்பரம் மூலம் அதிக  சம்பாதிக்க உதவுவது ஆட்சென்ஸ் ஆகும். ஆனால் தமிழுக்கு அது கிடைபதில்லை. ஆங்கில வெப் சைட் துவங்கினாலும் ஆயிரத்துஎட்டு கண்டிஷன்கள். எனவே பலருக்கு அது கிடைபதில்லை.

                          அதுபோன்ற பதிவர்களுக்கு வரபிரசாதமாக வந்துள்ளது இந்த தளம். இந்த தளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் சந்தோஷமடைகிறேன்.REVENUEHITS.COM என்ற தளம்தான் அது.

நன்மைகள் :

1. உடனடியாக உங்கள் தளத்துக்கு விளம்பர அனுமதி 

2.  எளிதான வகையில் நீங்களே விமபரன் மாதிரியை தேர்வு செய்யலாம்.

3. தினமும் எவ்வளவு சம்பாதித்து உள்ளீர்கள் என அறியலாம்.

4. எத்தனை தளத்தை வேண்டுமானாலும் இணைத்து கொள்ளலாம்.

5. நீங்கள் உங்கள் நண்பர்களை இணைப்பதன் மூலமும் சம்பாதிக்கலாம்.

6. paybal, wire , payoneer மூலம் பணத்தை பெறலாம்.

7 . குறைந்த பட்ச பணம் எடுப்பு தொகை 20 $  மட்டுமே .

மேலும் படிக்க:  

பதிவர்கள் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழி

Friday, 17 July 2015

மன நிறைவு தரும் ரமலான் நோன்பு





இது ரமலான் மாதம். அரபு மாதக் கணக்கின்படி ஒன்பதாவது மாதம் இது.


ரமலான் என்ற அரபுச் சொல்லுக்கு, கரித்தல், சுட்டெரித்தல், சாம்பலாக்குதல் என்று வெவ்வேறு பொருள்களுண்டு. மனிதர்களின் பாவங்களைப் போக்கும் புனிதமான இம்மாதம் உண்மையிலேயே பொருத்தமான பெயரைத்தான் பெற்றிருக்கிறது.



ரமலான் மாதம் முழுவதும்  விடியற்காலை முதல் மாலை வரை சுமார் பதினான்கு மணி நேரம் உண்ணாமலும், பருகாமலும் இருப்பது என்பது உண்மையிலேயே உயர்வுக்குரிய ஒன்றுதான்.



நோன்பு எனப்படும் இப்பசித்திருத்தலின் வழியே ஐம்புலன் அடக்கமும், மனஅடக்கமும் பெற வழி வகுக்கின்றது. இதுவே பின்னர் இறையச்சமாய் கருக்கொண்டு, நிறையச்சமாய் உருக்கொள்கிறது.



‘இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த வர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. (இதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறுவீர்கள்’ என்று திருமறையில் (2:183) இறைவன் கூறுகின்றான்.



இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு, ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. நோன்பு நோற்பது பருவம் அடைந்த முஸ்லிமான ஒவ்வோர் ஆண் மற்றும் பெண் மீதும் கட்டாயக் கடமையாகும். நோயாளி, பயணி ஆகியோர் மட்டுமே நோன்பைக் கைவிட அனுமதியுண்டு. ஆனால் வேறு நாட்களில் அந்த நோன்பை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.



நோன்பின் நோக்கம் பசி மட்டும்தானா என்றால் அதுமட்டுமல்ல. பசியை உணர்ந்து, ஐம்புலன் ஆசை களைத் துறந்து, தர்ம கரங்களைத் திறந்து, இறையச்சம் இதயமெங்கும் நிறைந்து வாழும் வாழ்க்கையே ரமலானிய வாழ்க்கை.



‘எத்தனையோ பேர் நோன்பு நோற்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பசியைத் தவிர வேறொன்றும் இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்ததில் இருந்தே நோன்பின் உண்மை நிலையை நாம் நன்கு எடை போட்டுக் கொள்ள முடியும்.



‘அஸ் ஸவ்மு ஜுன்னத்துன்’ அதாவது ‘நோன்பு–அது ஒரு கேடயம்’ என்பார்கள். 



ஆம், சைத்தானிய அம்புகளில் இருந்து நிச்சயம் நோன்பு ஒருவனைப் பாதுகாக்கிறது. தீய பார்வை, தீய பேச்சு, தீய சிந்தனை, தீய செயல்பாடுகள் என அனைத்திலும் இருந்தும் இக்கேடயம் ஒருவனைப் பாதுகாக்கிறது. 



ரமலானுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இந்த மாதத்தில்தான் இறை வசனங்களைக் கொண்ட திருக்குர்ஆன் இறங்கத் தொடங்கியது.




‘ரமலான் மாதம் எத்தகையது என்றால் அந்த மாதத்தில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், நேர்வழியில் தெளிவான அறிவுரைகள் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. எனவே  இனி உங்களில் எவர் இம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்’ என்று திருமறை (2:185) தெரிவிக்கிறது.


ஒரு சமூகத்திற்கு வேத நூல் வெகு முக்கியமான ஒன்று. அந்நூல் இந்த மகத்தான மாதத்தில்தான் அருளப்பட்டது என்றால் இந்த மாதத்தின் மகிமைதான் என்ன! இதற்கு முன்னர் வாழ்ந்த இறைத்தூதர்களுக்கும் இதே மாதத்தில்தான் அவரவர்களுக்கான வேதச்சுவடிகள் வழங்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.



இந்த மாதத்தின் கண்ணியத்தைக் காக்கும் விதமாகத்தான் ‘இந்த மாதத்தை வணக்க வழிபாடுகளால் வளப்படுத்துங்கள்’ என்று வள்ளல் நபியவர்கள் கூறினார்கள்.



‘நீதியுள்ள தலைவன், அநீதி இழைக்கப்பட்டவன், நோன்பு நோற்றிருப்பவன் இம்மூவரின் பிரார்த்தனைகளும் இறைவனிடம் மறுக்கப்படுவதில்லை’ (நூல்: திர்மிதி) என்பது நாம் அவசியம் அறிய வேண்டிய நபிமொழி. 



இதன் வழியே நோன்பின் மாண்பை நன்கு உணர முடிகிற தல்லவா? ஒரு நோன்பாளியின் பிரார்த்தனை ஒருபோதும் மறுக்கப்படுவதில்லை என்கிறபோது அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க : 

மன நிறைவு தரும் ரமலான் நோன்பு

Wednesday, 15 July 2015

சிவாஜிராவ் முதல் சிவாஜி வரை FREE E-BOOK





ரஜினி , இது ஒரு மந்திர வார்த்தை . இதை உச்சரிக்காத தமிழனே இருக்க முடியாது . குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஸ்டையில் மன்னன . சாதாரண பேருந்து நடத்துனராக துவங்கி , துணை நடிகராக மாறி , பின் வில்லனாக நடித்து அதில் பெயர் பெற்று பின்பு உலகம் போற்றும் சூப்பர் ஸ்டார் ஆனவர் . மொழியே புரியாத ஜப்பானில் கூட இவருக்கு ரசிகர்கள் உண்டு என்பதே இவர் சிறப்பு .

இவரை பற்றி பல புத்தகங்கள் வந்துள்ளது ஆனால் இந்த புத்தகம் கொஞ்சம் வித்தியசமானது . அவரி பற்றி யாருக்கும் தெரியாத பல தகவல்கள் இதில் உள்ளது . அவரின் ஆரம்பகால வாழ்கை முதல் இப்போ உள்ளது வரை விரிவாக அலசபட்டு உள்ளது


உங்களுக்குகாக சில வரிகள் :


ரஜினி என்றால் இருட்டு , மஞ்சள் , மங்கலன் என பொருள் .


ரஜினிகாந்த் என்றால் இரவின் நாயகன் என பொருள்


ஆரம்பகால விலாசம் : புதுபேட்டை கார்டன்
இப்போ              : போயஸ் கார்டன்



ஆரம்பல்கால வீட்டு வடக்கை : 115


ரஜினியின் 100 வது படம் ராகவேந்திரர் . இது ரஜினி விரும்பி கேட்டதால் எடுக்கபட்டது .


கமல் , ரஜினி நட்பு ஆழமாக ஆரம்பித்தது நினைத்தாலே இனிக்கும் படம் எடுக்கும் போதுதான் .



ரஜினியின் மானசீக குரூ பாலசந்தர்





டிஸ்கி : இந்த புத்தகத்தை DOWNLOAD செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் rrajja.mlr@gmail.com க்கு  Mail பண்ணவும். .E-Book  விரைவில் அனுப்பப்படும் .

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு 

Tuesday, 14 July 2015

காமராஜர் – வாழ்வும் அரசியலும்



காமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம்.

             கர்மவீரர், ஏழைகளின் தெய்வம், மதிய உணவு தந்த மக்கள் நாயகன், கறுப்பு காந்தி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட நம் மண்ணின் மைந்தர் காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவரின் அரசியல் பிரவேசம் மற்றும் அதன் விளைவுகளையும் அலசுகிறது இந்த நூல்.

                  பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அவரை எந்த இடத்திலும் குறை சொல்லமுடியாது மற்றும் பலருக்கும் தெரியாத விஷயத்தைச் சேர்ப்பது. இந்த நூலிலும் பல விஷயங்கள் ஏற்கெனவே பல பத்திரிகைகளிலும், பல பேச்சாளர்கள் பேச்சிலும், முகநூலிலும் வந்த சில செய்திகள் வந்துள்ளன. இதைத் தவிர்த்துப் பார்த்தால் காமராஜரைப் பற்றி எளிதில் அறிந்துகொள்ள பல விஷயங்கள் இதில் உள்ளன.
                       காமராஜரின் பாட்டி அவருக்கு வைத்த பெயர் “காமாட்சி”. அவர் அம்மா வைத்த பெயர் “ராஜா”. இந்த இரண்டும் இணைந்து வந்ததுதான் “காமராஜர்” என்பது புதுத் தகவல். இதுபோல பல சிறு சிறு தகவல்கள் இந்த நூல் முழுவதும் பரவிக்கிடக்கிறது.

தெரியுமா உங்களுக்கு?
காமராஜரின் சாதிக்காரர்களுக்கு இவரின் அரசியல் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. (அடுத்த சாதிக்கு ஆதரவாக இருந்தால் யாருக்கு பிடிக்கும்?)
நீதிக் கட்சி இவரை ஒருமுறை கடத்திச் சென்றனர். இவருக்கு ஆதரவாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரல்கொடுத்ததும் பயந்துபோய் விட்டுவிட்டனர்.

மேலும் படிக்க :  

காமராஜர் – வாழ்வும் அரசியலும்

Friday, 10 July 2015

பாகுபலி - சினிமா விமர்சனம்




               நீண்டகால தயாரிப்பாகவும், இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கபட்டதுமான ,தமிழ் தெலுங்கு என பலமொழில் ஒரே நேரத்தில் வெளியான படம்தான் பாகுபலி. தொடர் வெற்றிகளை குவித்துவரும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தின் அடுத்த பிரமாண்ட வெற்றிபடைப்பி இது.

கதை :


    சகோதர யுத்தம்தான் முக்கியகளம் . மகிழ்மதி என்ற நாட்டை ஆளும் ரானாவுக்கும் அதன் உண்மையான அரசனான ஆனால் குழந்தையிலேயே ஆதிவாசிகளிடம் வளரும் பிரபாஸ்க்கும் இடையில் நடப்பதுதான் கதை. இடையில் தமனாவின் காதல் , போர் என செல்கின்றது. முழுகதையும் யாராலும் சொல்ல முடியாது சொல்ல முடியாது  காரணம் படமே பாதிதான்.

+ பாயிண்ட்ஸ் :

பிரமாண்டம் , பிரமாண்டம், பிரமாண்டம். ஆரம்ப காட்சியில் வரும் அருவிகள் ஆகட்டும் இறுதியில் நடக்கும் போர்கால காட்சிகளாகட்டும் எதிலும் பிரமாண்டம்.


மேலும் படிக்க : CLICK HERE

Monday, 6 July 2015

3000 ரூபாய் மதிப்புள்ள Foxit Advance PDF Editor மென்பொருள் இலவசமாக வேண்டுமா ?







                   நமது கணினியில் பலவகையான கோப்புகளை நாம் பயன்படுத்தினாலும் அதிகம் பயன்படுத்தப்படும் கோப்புவகை PDF ஆகும். இதை பயன்படுத்த, அனுப்பு , பிரிந்த எடுக்க எளிதான வகையில் இருப்பதால் இணையத்தில் பலர் இதையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதில் உள்ள ஒரு குறை அந்த கோப்புகளை நாம் எடிட் (மாற்றம் ) செய்ய முடியாது என்பதே ஆகும். அந்த குறையை போக்க பயன்படுவதுதான் pdf editors.

         இணையத்தில் பலவகையான எடிட்ர்கள் கிடைகின்றன. ஆனால் அவை சோதனை முயற்சி (trail version) மட்டுமே கிடைக்கும். முழுமையான மென்பொருள் வேண்டும் என்றால் பணம் கட்டிதான் வாங்கவேண்டும். இந்த பதிவில் ரூபாய் 3000  மதிப்புள்ள மென்பொருளை எப்படி இலவசமாக பெறுவது என்று பாப்போம்.


 Foxit Advance PDF Editor :

        உங்கள் கோப்புகளை மிக எளிதில் எடிட்செய்ய இது உதவுகின்றது. மற்ற எடிடர்களை விட மிக வேகமாக , எளிதாக , பயன்படுத்த மிகவும் எளிதாக உள்ளது. MS-WORD இல் உள்ளது போல இதிலும் find & replace ஆப்ஷன் உள்ளது அதனால் எளிதில் மாற்றம் செய்யமுடியும்.

HOW TO INSTALL:

1. முதலில்  Foxit Advance PDF Editor  இந்த லிங்கில் சென்று RAR
    பைலை   டவுன்லோட் செய்யவும்.

2 . RAR பைலை EXTRACT செய்யவும்.

3 . SETUP என்ற போல்டரில் உள்ள  Foxit Advance PDF Editor .EXE  என்ற பைலை டபுள் கிளிக் செய்யவும்.

4. இன்ஸ்டால் செய்த பின் இணைய இணைப்பை துண்டிக்கவும். உங்கள் ஆண்டிவைரஸ் எச்சரிக்கை செய்தால் அதையும் அணைக்கவும்.(இதில் எந்த வைரசும் இல்லை , நானும் இதைதான் பயன்படுத்துகிறேன் )

5. CRACK FOLDER இல் உள்ள CRACK.EXE என்ற பைலை டபுள் கிளிக் செய்யவும்.
  ஒருவேளை நீங்கள் இந்த பைலை C :\ அல்லாமால் வேறு பகுதியில் இன்ஸ்டால் செய்திருந்தால் CRACK செய்யும் போது அந்த பகுதியை தெரிவு செய்யவும்.


               அவ்வளவுதான் , இப்போது உங்கள்  Foxit Advance PDF Editor  முழுமையான மென்பொருளாக மாறியிருக்கும். போன்படுத்து பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் .




Saturday, 4 July 2015

உங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா ?



இன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , நாம் நல்ல பெயர் எடுக்கும் வகையிலும் குழந்தைகளை வளர்ப்பது என்பது இந்தியாவில் இருந்துஊழலை ஒழிப்பதற்கு சமம் . குழந்தைகளிடம் நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதுதான் இந்த பதிவின் சாராம்சம் .


1. குழந்தையை கண்டிப்பாக அடுத்த குழந்தையுடன் ஒப்பிடாதிர்கள் . குழந்தை உங்களை அடுத்த பெற்றோருடன் ஒப்பிட்டால் பொறுத்து கொள்விர்களா ?



2. குழந்தைகளுடன் பேச , விளையாட நேரம் ஒதுக்குங்கள் . டிவி சிரியல் முக்கியமல்ல , எத்தனை நாள் கழித்து பார்த்தாலும் சிரியல் புரியும் . பெற்றவர்கள் தன்னிடம் பேச வேண்டும் என என்னும் குழ்\குழந்தைகள் அதிகம் .

3. குழந்தைகள் சொல்வதை கேளுன்க்கள் . அது சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகாய இருந்தாலும் கேளுங்கள் . அப்போதுதான் குழந்தை நன்றாக பேச வரும் . கூச்சம் போகும் .

4. பாராட்டுங்கள் . அது சின்னதாக ஏதாவது நல்ல விஷயம் செய்தாலும் பாராட்டுங்கள் . 



5. ஏதாவது தவறாக செய்தால் மென்மையாக கண்டியுங்கள் . அடித்துதான் ஒரு குழந்தையை நல்லவனாகக் முடியும் என்பது தவறு .

6. அடம்பிடிப்பதை கண்டியுங்கள் . அது கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து கெடுக்காதிர்கள் . ஏன் வாங்கி தரவில்லை என்பதை புரியவைக்க முயற்ச்சி செய்யுங்கள் .

7. பெண் குழந்தைகள் உடை விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள் . எத்தனை வயதானாலும் உங்களுக்கு அவள் குழந்தைதான் ஆனால் மற்றவர்கள் பார்வையில் ?



8. மற்றவர்களிடம் மரியாதையாக பேச கற்று கொடுங்கள் . முதலில் நாம் மரியாதையாக பேச வேண்டும் . நாம் மனைவியை வாடி என்றால் குழந்தையும் வாடி என்றுதான் சொல்லும் .

9. குழந்தை முன் சண்டை போடாதிர்கள் . அது அதன் மனதில் காயத்தை ஏற்படுத்தும் .

10. அடுத்த குழந்தையை பற்றி தவறான எண்ணம் நம் குழந்தை மனதில் புகுதாதிர்கள் .



11. அடுத்தவர்களுக்கு கொடுத்து உண்ணும் பழக்கத்தை கற்றுகொடுங்கள் . இன்றய நிலையில் நெறைய குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்கள்  சொல்லும் தவறான வார்த்தை " யாருக்கும் கொடுக்காம நீ மட்டும் சாப்பிடு " என்பதுதான்



எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து உள்ளேன் . உங்கள் கருத்தை சொல்லுங்கள் .

மாடல் : R.S.சரண்

இது ஒரு மீள் பதிவு


படித்து விட்டிர்களா ?

இலவசமாக RE-CHARGE செய்ய புதிய இரண்டு அப்ளிகேஷன்கள்...