Saturday 19 March 2016

இலவசமாக website வேண்டுமா ?


                அனைவருக்கும் சொந்தமாக ஒரு இணையபக்கம் வைத்துகொள்ள ஆசையாக இருக்கும். பிளாகர் தளம் அதுக்கு உதவி செய்தாலும் இதில் சில கஷ்டங்கள் உள்ளன. எனவே அழகான, வசதியான தளத்தை உருவாக்க பலருக்கு ஆசை இருக்கும் அவர்களுக்காகத்தான் இந்த பதிவு. உங்களுக்கு இணையதளம் வடிவமைக்க உதவும் சில இலவச தளங்களை பாப்போம்.





WIX 

          மிக எளிமையான வெப்சைட் உருவாக்கித்தரும் இணையதளம் இது. பயன்படுத்த மிகவும் எளிது . இதில் நிறைய TEMPLATES உள்ளதால் நமது பக்கங்களை பலவித வண்ணங்களில், வடிவங்களில் விரும்பியவாரு வடிவமைக்க முடியும். மிக எளிதில் வெப்சைட்களை உருவாக உகந்த தளம் இது.


TO REGISTER CLICK HERE





IMCREATOR

        


     இந்த தளமும் இலவசமாக இணைய தளம் உருவாக்க உதவுகின்றது. இதில் தினமும் புதுபுது TEMPLATES அறிமுகம் செய்யபடுவதால் உங்களுக்கு பிடித்த டிசைன்களை எப்போதுவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும்.


TO REGISTER CLICK HERE 





SITEBUILDER




             புதிதாக வந்த தளம் இது . இதில் DRAG & DROP வசதி இருப்பதால் உங்கள் தளத்தை வடிவமைப்பது  மிக மிக எளிது. ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களை உருவாக்கும் போது இலவச டொமைன் கிடைக்கவும் வாய்ப்புண்டு. இதில் பலவகையான டிசைன்   உள்ளதால் உங்கள் விருப்பபடி தெரிவு செய்யலாம்.

TO REGISTER CLICK HERE 





WEEBLY

           



           மிகவும் பிரபலமான இலவச இணையதளம் உருவாக்கித்தரும் தளம் இது. பல தங்கள் இந்த தளத்தின் மூலமே உருவாக்கபட்டுள்ளது. இதில் பக்கங்கள் உருவாக்குவது மிக எளிது. உங்கள் சொந்த டொமைன் நேமை இதில் பயன்படுத்தமுடியும். கஸ்டமர்கேர்ரை  தொடர்பு கொள்வது மிக எளிது. அவர்கள் பல உதவிகள் செய்வார்கள் .

TO REGISTER CLICK HERE  

WEBS

              WEEBLY போலவே மிகவும் பிரபலமான தளம் இது. அதில் உள்ள அனைத்து வசதிகளும் இதிலும் உண்டு. உங்கள் விருப்பபடி டிசைன்களை பலவகையான பிரிவுகளில் இருந்து தெரிவு செய்துகொள்ள முடியும். டிசைன்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றிகொள்ளலாம். DRAG & DROP முறை இதிலும் உண்டு என்பதால் மிகப்பெரிய புரோகிராம் திறமை தேவையில்லை. யார் வேண்டுமானாலும் டிசைன் செய்யமுடியும்.

Hot Downloads
TO REGISTER CLICK HERE  


No comments:

Post a Comment