Thursday, 24 December 2015

பாலாவின் தாரை தப்பட்டை பாடல்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா ?






       இயக்குனர் பாலாவின் கைவண்ணத்தில் சசிகுமார் நடிப்பில் இளையராஜாவின் 1000 வது படம் என்ற பெருமையுடன் வந்துள்ள பாடல்கள்தான் இது. பாலா படங்களில் எப்பவுமே பாடல்கள் இனிமையாக இருக்கும். இதிலும் அப்படியே. நாட்டுபுற பாடல்களில் / இசையில் தான் எப்பவும் ராஜா தான் என்பதை இசையின் ராஜா நிருபித்துள்ளார்.


           ஆரம்ப பாடலே துல்லிசையுடன் துவங்குகிறது. கேட்க கேட்க இனிக்கும் பாடல்களாக அமைந்துள்ளது . இந்த பாடல்கள் இசை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

பாடல்களை தரவிறக்கம் செய்ய :


















Wednesday, 23 December 2015

VODAFONE TO VODAFONE ஒரு வருடத்திற்கு இலவசமாக பேச வேண்டுமா ?(SUPER OFFER)






             தொலைதொடர்பு நிறுவனங்கள் இப்போது அதிகரித்துள்ளதால் தனது வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் பல கவர்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. அதில் ஒண்டுதான் வோடபோன் அறிவித்துள்ள ஒருவருட இலவச கால் வசதி.




இதை பெற :

*  CLICK HERE  எந்த லிங்கில் செல்லவும்.


* உங்கள் பழைய வோடபோன் எண்ணை கொடுக்கவும்.



* இப்பொது உங்கள் போனுக்கு ஒரு OTP (ONE TIME PASSWORD ) வரும்.

*  OTP யை அளிக்கவும்.

* இப்போது உங்கள் நண்பர் / உறவினர் / காதலி / காதலன் / மனைவி / கணவன் /  டைம் பாஸ் பிகர்  என யாராவது ஒருவரில் எண்ணை கொடுக்கவும்.

* அப்படி கொடுக்கும் எண் வேறு நெட்வொர்க்கை சேர்ந்ததாக இருக்கவேண்டும்.

* நீங்க கொடுத்த எண் MNP மூலம் வோடபோன் நெட்வொர்க்கு மாறவேண்டும்.

* அப்படி மாறினால் அந்த எண்ணிற்கும், உங்கள் எண்ணிற்கும் இடையே செய்யப்படும் அழைப்புகள் ஒரு வருடம் முழுவதும் இலவசம்.


* மேலும் உங்களுக்கு மாதம் மாதம் 100  V/V  நிமிடங்கள் இலவசமாக கிடைக்கும்.

* இதுவே POST PAID கனேஷனாக இருந்தால் அழைப்பு இலவசம் மற்றும் மாதம் ரூபாய் 100 என மூன்று மாதங்கள் உங்கள் கணக்கில் குறைத்துகொள்ளபடும்.

* கூடவே ஒரு சாம்சங் போன் வெல்லும் வாய்ப்பும் உண்டு .


* கடைசி நாள் : டிசம்பர் 31 - 2015

Saturday, 19 December 2015

கூகுளில் 2015 இல் அதிகம் தேடபட்ட TOP-5 SMART PHONE







     மிக பெரிய தேடுபொறியான (SEARCH ENGINE) கூகிள் தான். நமது தேடல்களை நொடிபொழுதில் உலகமெங்கும் உள்ள வலைபக்கத்தில் தேடி எடுத்துதருகிறது . அப்படி அனைவரும் தேடல்களை TOP-10 என வகைபடுத்தி ஒவ்வெரு வருட இறுதியிலும் வெளியிடும். அவ்வகையில் இந்த வரும் அதிகம் தேடபட்ட SMART PHONE எவை எவை என பட்டியலிட்டுள்ளது . அவைகள் எவை என பார்க்கலாம் .


TOP- 1   யு யுரேகா


 அனைத்தி போனையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது யு யுரேகா . கடந்த ஆண்டு அதிகம் விற்பனையானதும் இதுதான் .







TOP- 2  : ஐபோன் 6எஸ் 

             கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வெளிவந்த ஐபோன் 6எஸ்  தேடலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.



TOP : 3   லெனோவோ கே3 நோட்

   மூன்றாம் இடம் லெனோவோ கே3 நோட்க்கு . இது 2GB RAM உடன் வும் 9,500 ரூபாய்க்கு கிடைகிறது.





TOP 4:  லெனோவோ ஏ7000 

               8,500 விலையில் பெரிய டிஸ்பிளே உள்ள இந்த போன் பெரிய வரவேற்பை பெற்றது .





TOP  5:  மோட்டோ ஜி

             எளிதில் உடையாத தரமான மோட்டோ ஜி ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளது .



மேலும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5  ஆறாம் இடத்தையும் , சாம்சங் கேலக்ஸி ஜெ7  ஏழாம் இடத்தையும், மோட்டோ எக்ஸ் ப்ளே  எட்டாம் இடத்தையும், மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் ஒன்பதாம் இடத்தையும், லெனோவோ ஏ6000 பத்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.


Thursday, 17 December 2015

16 GB PENDRIVE வெறும் 79 ரூபாய்க்கு வேண்டுமா ?





             இன்றைய நிலையில் அனைவருக்கும் தேவைப்படும் முக்கிய வன்பொருள் பென் டிரைவ் ஆகும். 16GB பென் டிரைவ் சாதரணமாக ரூபாய் 300- 400 வரும். ஆனால் உங்களுக்கு அது வெறும் 79 ரூபாய்க்கு கிடைக்கும். அதிசயம் ஆனால் உண்மை. விவரத்திற்கு மேலும் படியுங்கள்.

எவ்வாறு  பெறுவது ?


* CLICK HERE   இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

* வரும் தளத்தில் உள்ள லிங்கை கிளிக்கவும் .

* ஒப்பனாகும் தளத்தில் உங்கள் மொபைல் என்னை கொடுக்கவும்.

* அடுத்த காலத்தில் உங்கள் ஊர் பின்கோட் கொடுக்கவும்.



* பின்பு SUBMIT பட்டனை அழுத்தவும்.

* இபோழுது உங்கள் போனுக்கு ஒரு SMS வரும்.

* வரும் 22-12-2015 குள் உங்களுக்கு ஒரு கோட் (CODE) வரும் . அன்று EBAY.COM என்ற தளம் சென்று அந்த கோடை பயன்படுத்தி பென் டிரைவை வெறும் 79 ரூபாய்க்கு பெறலாம்.

* கூரியர் கட்டணம் இலவசம்.


நிபந்தனைகள் :

* உங்கள் மொபைல் எண் பயன்படுத்தி இதுக்கு முன் E-BAY யில் எதுவும் வாங்கியிருக்க கூடாது.

* CASH ON DELIVERY கிடையாது .

* ஒரு மொபைல் எண்ணுக்கு ஒரு பென் டிரைவ் மட்டுமே ஆடர் போடமுடியும்.

* முதலில் வருபவருக்கு முன்னுரிமை.

* ஆபர் 20-12-15 வரை மட்டுமே . முன்கூட்டியே கூட நிறுத்தப்படலாம் . 

Tuesday, 15 December 2015

ஆயிஷா





             ஒரு கவிதை படித்து அழுகை வரலாம் , அல்லது ஒரு கதை அல்லது பாடலை கேட்டு அழுகை வரலாம் . ஆனால் ஒரு புத்தகத்தின் முன்னுரையை படித்து அழுகை வருமா ? கண்டிப்பாக வரும் . திரைப்படங்களில் சென்டிமென்ட் காட்சிகள் வந்தால் சிரிப்பை அடக்கமுடியாமல் பார்ப்பேன் . என் தங்கை திருமணமாகி கிளம்பும்போது அனைவரும் அழுவ , நான் கவலைபடாமல் தூங்கிவிட்டேன் . அப்படி பட்ட என்னை உலுக்கிய , இரவு தூக்கத்தை கெடுத்த ஒரு நூலின் முன்னுரையை தான் உங்களுடன் பகிரபோகிறேன் .


இதை எழுதியவர் யார் என தெரியவில்லை . எதோ ஒரு கிருத்துவ பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியை , அவர் இப்போது பல அறிவியல் கதைகள் எழுதுகிறார் . அவர் இப்படி எழுத தூண்டிய, காரணமான அவரது வாழ்கையை புரட்டிபோட்ட ஒரு மாணவியின் கதையை முன்னுரையாக சொல்லியுள்ளார் .
இன்றைய மதிப்பெண் உலகில் மதிப்பெண் மட்டுமே மாணவர்களின் அறிவை மற்றவர்களுக்கு பறைசாற்றுகிறது . புத்தகத்தில் , நோட்ஸில் உள்ளதை கரைத்து குடித்து தேர்வில் வாந்தி எடுபவர்களைதான் இந்த சமுதாயம் பாராட்டுகிறது . சொந்தமாக எழுத முயர்ச்சிபவர்களை முளையிலேயே கிள்ளி எறிகின்றது .


6 வகுப்பில் தமிழில் “கஷ்டபட்டு முன்னேறினார் “ என்பதை சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுத சொன்னார்கள் . ஒரு மாணவன் “என் தந்தை சொந்த தொழில் செய்து கஷ்டபட்டு முன்னேறினார் “ என எழுதியதை என் சக ஆசிரியர் தவறு போட்டார் . ஏன் என கேட்டதுக்கு புத்தகத்தில் “ஜி.டி நாயுடு கஷ்டபட்டு முன்னேறினார்” என புத்தத்தில் இருக்கு இவன் எப்படி மாத்தி எழுதலாம் என்றார். ரொம்ப நேரம் வாதிட்டும் ஒத்துக்கொள்ளவில்லை.

இன்றைய கல்விமுறையும் , சமுக பார்வையும் இப்படிதான் உள்ளது .     இதை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன் .

கிழே அந்த ஆசிரியை எழுதிய முன்னுரையை இணைத்துள்ளேன் .சாதாரண ஆசிரியரை எப்படி அறிவியல் நூல்கள் எழுதும் எழுத்தாளராக ஒரு மாணவி மாற்றினார் , ஆனால் அந்த மாணவியின் நிலை இப்போது என்ன ? என்ற கேள்விகளுக்கு பதில் இந்த முன்னுரையில் உள்ளது . தரவிறக்கி படித்து பாருங்கள் . மொபைலில் படிப்பவர்கள் எப்படியாவது தரவிறக்கி பிடிக்க முயற்சி செயுங்கள் . கண்டிப்பாக உங்கள் கண்ணில் கண்ணீர் வரும் . இதை படித்த பின் கண்டிப்பாக ஆசிரியர்கள் மனதில் மாணவர்கள் பற்றிய எண்ணத்தில் மாற்றம் வரும் .












Sunday, 29 November 2015

இலவசமாக 100 ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்யவேண்டுமா ?







                 இலவசமாக ரீ சார்ஜ் செய்ய பலதளங்கள் உதவி செய்கிறது. இன்று நாம் பார்க்க போவது கொஞ்சம் வித்தியாசமானது. இது ஒரு ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன். வாட்ஸ்அப் போல மற்றவர்களுடன் அரட்டை அடிக்க உதவும் அப்ளிகேஷன் இது. இதன் மூலம் நாம் இலவசமாக ரீ சார்ஜ் செய்துகொள்ள முடியும்.

நன்மைகள் :

வாட்ஸ் அப்  போலவே அரட்டை அடிக்கலாம்.

படங்கள், வீடியோக்கள் பகிரலாம்.

குருப் சாட் செய்யலாம்.

இந்த அப்ளிகேஷன் இல்லாத போனுக்கு கூட SMS அனுப்பலாம் .

இணைந்த உடனே உங்கள் கணக்கில் 51  ரூபாய் ஏறும் .

இலவசமாக ரீ சார்ஜ் செய்ய :

உங்கள் கணக்கில் குறைந்தபட்சம் 100 வந்தால் மட்டுமே நீங்கள் ரீ சார்ஜ் செய்ய இயலும். ஒருமுறை மட்டுமே  குறைந்த பட்சம் 100 வேண்டும். மற்றமுறை எவ்வளவு இருந்தாலும் ரீ சார்ஜ் செய்யமுடியும்.

உங்கள் நண்பர்கள், உறவினர்களை இதில் இணைத்தால் ஒருவருக்கு 25 ரூபாய் என உங்கள் கணக்கில் ஏறும் . குறைந்தது இரண்டு நபர்களை இணைத்தாலே நீங்கள் 100 ரூபாயை அடைந்து விடுவீர்கள்.

இந்த அப்ளிகேஷனில் உள்ள INVITE FRIENDS என்ற ஆப்ஷன் மூலம் வாட்ஸ் அப், SMS, FACEBOOK, TWITTER என எதன்மூலமும் நண்பர்களை அழைக்கமுடியும்.



அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய :

CLICK HERE

Tuesday, 3 November 2015

ஒரே போனில் இரண்டு WHATSAPP பயன்படுத்துவது எப்படி ? மிக எளிய வழி








       இன்றைய ஆண்ட்ராய்ட் உலகில் மிகபெரும்பாலனவர்கள் பயன்படுத்தும் ஒரு அப்ளிகேஷன் WHATSAPP தான் . SMS என்ற ஒன்றை மறக்கடிக்க செய்த பெருமை WHATSAPP யே  சாரும். அரட்டை அடிக்க மட்டுமின்றி போட்டோ , வீடியோகளை அனுப்பவும் இது பயன்படுகிறது. 

           நம்மில் சிலர் சொந்த உபோயகத்திர்க்கு ஒரு எண்ணும், மற்றவர்களுக்கு ஒன்றும் என இரண்டு நம்பர் வைத்திருப்பார்கள். அதுபோல WHATSAPP  இரண்டு இருந்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். உங்களுக்காகவே வந்துள்ளது GBWHATSAPP.


பயன்கள் :

  • சிறிய அளவுள்ள பைல் .
  • நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் WHATSAPP ஐ  அழிக்க தேவையில்லை.
  • இரண்டும் தனித்தனியாக பயன்படுத்தலாம்.
  • வெறும் 20 MB தான் .
  • லாஸ்ட் சீன்  ஆப்ஷனை மறக்கும் வசதி .
  • கால் செய்யும் வசதி .



எவ்வாறு INSTALL செய்வது ?


  • டவுன்லோட்  செய்ய இங்கே அழுத்தவும்.

  • டபுள் கிளிக் செய்து INSTALL செய்யவும்

  • போன் நம்பர் வெரிபிகேஷன் செய்யவும்.
  • உங்கள் பழைய WHATSAPP  போலவே இதையும் பயன்படுத்தவும்.