Sunday, 13 March 2016

உயிர் காக்க உதவும் ஒரு ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் take care





             சமிபத்தில் நண்பரின் மகன் விபத்துக்குள்ளானார். விபத்து நடந்த இடத்திலேயே அவர் மயக்கமாகிவிட்டார். அவர் போனில் இருந்து யாருக்காவது தகவல் சொல்லலாம் என பார்த்தால் அவரது போன் பாஸ்வோர்ட் போட்டு லாக் செய்யபட்டிருந்தது. அதனால் அவர் மருத்துவமைக்கு கொண்டு செல்லபட்டு மயக்கம் தெளிந்த பின்னே தான் வீட்டுக்கு தகவல் சொல்ல முடிந்தது .




   இது போன்ற கஷ்டமான நேரத்தில் போனை வைத்திருந்தும் வேஸ்ட். இந்த பிரச்சனை எப்படி சரி செய்யலாம்னு யோசிக்கும் போது எங்கள் பள்ளி முன்னாள் மாணவர் அருண் ஒரு அற்புதமான அப்ளிகேஷனை வடிவமைத்திருந்தார். நாங்கள் என்ன மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோமோ அதைவிட அருமையாக வடிவமைத்திருந்தார்.

இன்ஸ்டால் செய்ய :




* Play store இல் Take Care -Emergency Contacts என தேடவும்.

* அல்லது இந்த லிங்கில் கிளிக் செய்யவும் .

* இன்ஸ்டால் செய்தபின்அதில் வரும் விண்டோவில் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய நான்கு போன் நம்பரை தெரிவு செய்யவும்.

* Add contacts on Lock Screen என்பதை Enable செய்யவும்.

பயன்கள் :




* ,மிக சிறிய அளவு அப்ளிகேஷன்.

* இன்டர்நெட் இணைப்பு தேவையில்லை.

* நான்கு எண்களை தெரிவு செய்யமுடியும்.

* எந்த விதமான லாக் ஸ்கீரினிலும் இது மேலேயே தெரியும்.

* வேண்டும் என்ற பொழுது enable செய்யலாம், தற்காலிகமாக disable செய்யலாம்.

* ஆபத்து காலத்தில் உங்கள் நண்பர்கள் / உறவினர்களை தொடர்புகொள்ள உதவும்.




குறிப்பு:

பயன்படுத்தி பார்த்து உங்கள் எண்ணங்களை play store இல் பதிவிட்டால் இதை செய்த மாணவனுக்கு உந்து சக்தியாக இருக்கும். உங்களின் பாராட்டு இதுபோல இன்னும் பல அல்பிகேஷன்களை உருவாக்க வழி செய்யும்.




            


No comments:

Post a Comment