Sunday, 27 March 2016

ANDROID மொபைல் காணாமல் போனால் எளிதில் கண்டுபிடிக்க உதவும் APPLICATION .




 


இன்று பெரும்பாலான மக்களிடம் இருக்கும் ஒன்று மொபைல். செல் இல்லாத மனிதன் அரைமனிதன் எனும் நிலை வந்துவிட்டது . அதிலும் சுமார்ட் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது . இன்னொரு பக்கம் மொபைல் திருட்டு போவது அல்லது தவற விடுவதும் அதிகமாகிறது .

இவ்வாறு திருட்டு / காணாமல் போன உங்கள் மொபைலை எளிதில் கண்டுபிடிக்க ஒரு அப்ளிகேஷன் உள்ளது . அதுதான் 360 SECURITY,





  • இதை GOOGLE PLAY STORE இல் அல்லது இங்கே கிளிக் செய்து தரவிரக்கிகொள்ளவும் .
  • இதை உங்கள் போனில் நிறுவிக்கொள்ளவும் .
  • அதில் உள்ள மெனுவில் ANTI-THEFT என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும் .
  • அதில் உங்கள் விருப்பமான கடவு சொல்லை (PASSWORD) அமைக்கவும் . இதுக்கு ANTI-THEFT CODE என பெயர்.
  • ENABLE ANTI-THEFT என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
  • உங்கள் மொபைல்லில் சிம் மாற்றபட்டால் எந்த எண்ணுக்கு SMS வரவேண்டும் என செட் செய்யவும் .( உங்கள் வீட்டு எண்ணை அல்லது நண்பர்கள் என்னை கொடுக்கவும் ).


அவ்வளவுதான் , இனி உங்கள் மொபைல் காணாமல் போய் யாராவது அதில் வேறு சிம் கார்ட் போட்டால் அந்த என்னில் இருந்து நீங்கள் செட் செய்த எண்ணிற்கு ஒரு SMS வரும் . இதன் மூலம் யார் உங்கள் போனை பயன்படுத்துகிறார்கள் என கண்டுபிடிக்கலாம் .




இதன் பயன்கள் :


·         நீங்கள் SMS மூலம் உங்கள் போனில் உள்ள தகவல்களை உடனே அழிக்கலாம் .
·         SMS மூலம் போனை லாக் செய்யலாம் .
·         GOOGLE MAP மூலம் போனின் இடத்தை கண்டுபிடிக்கலாம் .
·         போனில் அலாரத்தை உடனே செயல்படவைக்கலாம் . இதனால் எடுத்தவர்கள் அருகே இருந்தால் எளிதில் கண்டுபிடிக்கலாம் .
·         இதில் தேவையில்லாத கால் , SMS பிளாக் செய்யமுடியும் .
·         வைரஸ் எதிர்ப்பு புரகிராம் உள்ளடங்கியது .
·         தேவையில்லாத JUNK FILE, TEMP FILE ஆகியவற்றை அழிக்க வசதி உண்டு .
·         போனின் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது .



குறிப்பு : நீங்களே ஏதாவது காரணத்தால் சிம் மாற்ற வேண்டி இருந்தால் ANTI-THEFTDISABLE செய்துவிட்டு மாற்றவும் . இல்லை எனில் நீங்கள் போடும் சிம்மில் இருந்தும் SMS போகும் . SMS க்கு காசும் போகும் ..




No comments:

Post a Comment