Monday, 31 August 2015

ஆண்ட்ராய்ட் போனின் மெம்மரியை அதிகரிக்க 5 வழிகள்






           ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் பெரிய சவால் அதன் நினைவகம்தான்(Memory). பல போன்களில் குறைவான நினைவகமே உள்ளது. இப்போது பெரும்பாலான போன்களில் 1 GB RAM உள்ளது. SD CARD இல்லாமல் தனியாகவும் போனிலேயே மெம்மரி உள்ளது. 

     இந்த அனைத்து மெம்மரிகளையும்  எப்படி சரியாக பராமரிப்பது. தேவையில்லாத கழிவுகளை மெம்மரியில் இருந்து நீக்குவது எப்படி என்றுதான் இன்று பார்க்க போகிறோம்.



1. தேவையில்லாத அப்ளிகேஷனை நீக்குதல் 

        இலவசமாக கிடைக்குதேன்னு கண்ட கண்ட அப்ளிகேஷனையும் இன்ஸ்டால் செய்ய கூடாது. அப்படி செய்தால் தேவையில்லாமல் மெம்மரி வீணாகும். அப்படி தேவையில்லாத அப்ளிகேஷனை அன்-இன்ஸ்டால் செய்தால் மெமரி அதிகரிக்கும்.

வழி  :  Settings -> Applications manager 

2. Cache மெமரியை அழித்தல் 

நாம் அடிகடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் மற்றும் இணைய பயன்பாட்டால் போனில் கேஷ் மெம்மரி அதிகரிக்கும். இது போனின் வேகத்தை வெகுவாக குறைக்கும். எனவே அடிகடி இதை அழிக்கவேண்டும். இதை அழிக்க பல அப்ளிகேஷன்கள் உண்டு. அதையும் பயன்படுத்தலாம்.

வழி : Settings >Applications manager இல் அப்ளிகேஷனை தெரிவு செய்து அழிக்கலாம்.

3. போட்டோ , வீடியோகளை ONLINE BACKUP எடுத்தல்.

      நாம் எடுக்கும் அனைத்து போட்டோ மற்றும் வீடியோகளை நமது கூகிள்  அக்கொண்டில் நேரடியாக ஏறுவது போல அமைக்கலாம். இதனால் நமது போட்டோகள் பத்திரமாகவும், கணினியில் எளிதில் பார்க்கும் வண்ணமும் இருக்கும். இதுக்கு நெட் கனைஷன் அவசியம் தேவை.

4. தேவையில்லாத கோப்புகளை அழித்தல் .

         தேவையில்லாத போட்டோ , வீடியோ, கோப்புகள் போன்றவற்றை உடனடியாக அழிக்க வேண்டும். போனை குப்பை தொட்டிபோல வைத்துகொல்லாமல் பேங்க் லாக்கர் போல வைத்துகொள்ள வேண்டும்.


5. கோப்புகள் மற்றும் அப்ளிகேஷன்களை SD CARD க்கு மாற்றுதல்.

       நாம் இன்ஸ்டால் செய்யும் அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் போன் மெமரியிலே பதியும். எனவே அப்ளிகேஷன்களை SD CARD க்கு மாற்றவேண்டும். நாம் எடுக்கும் போட்டோ, வீடியோ போன்றவை நேரடியாக SD CARD இல் பதியுமாறு மாற்றவேண்டும். இப்படி மாற்ற பல அப்ளிகேஷன்கள் கிடைகிறது. நாமும் சாதரணமாகவே மாற்றமுடியும்.




இதையும் படிக்கலாமே :

உங்கள் smart phone மூலம் டிவி, ரேடியோவை இயக்குவது எப்படி ?





No comments:

Post a Comment