இன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , நாம் நல்ல பெயர் எடுக்கும் வகையிலும் குழந்தைகளை வளர்ப்பது என்பது இந்தியாவில் இருந்துஊழலை ஒழிப்பதற்கு சமம் . குழந்தைகளிடம் நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதுதான் இந்த பதிவின் சாராம்சம் .
1. குழந்தையை கண்டிப்பாக அடுத்த குழந்தையுடன் ஒப்பிடாதிர்கள் . குழந்தை உங்களை அடுத்த பெற்றோருடன் ஒப்பிட்டால் பொறுத்து கொள்விர்களா ?
2. குழந்தைகளுடன் பேச , விளையாட நேரம் ஒதுக்குங்கள் . டிவி சிரியல் முக்கியமல்ல , எத்தனை நாள் கழித்து பார்த்தாலும் சிரியல் புரியும் . பெற்றவர்கள் தன்னிடம் பேச வேண்டும் என என்னும் குழ்\குழந்தைகள் அதிகம் .
3. குழந்தைகள் சொல்வதை கேளுன்க்கள் . அது சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகாய இருந்தாலும் கேளுங்கள் . அப்போதுதான் குழந்தை நன்றாக பேச வரும் . கூச்சம் போகும் .
4. பாராட்டுங்கள் . அது சின்னதாக ஏதாவது நல்ல விஷயம் செய்தாலும் பாராட்டுங்கள் .
5. ஏதாவது தவறாக செய்தால் மென்மையாக கண்டியுங்கள் . அடித்துதான் ஒரு குழந்தையை நல்லவனாகக் முடியும் என்பது தவறு .
6. அடம்பிடிப்பதை கண்டியுங்கள் . அது கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து கெடுக்காதிர்கள் . ஏன் வாங்கி தரவில்லை என்பதை புரியவைக்க முயற்ச்சி செய்யுங்கள் .
7. பெண் குழந்தைகள் உடை விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள் . எத்தனை வயதானாலும் உங்களுக்கு அவள் குழந்தைதான் ஆனால் மற்றவர்கள் பார்வையில் ?
8. மற்றவர்களிடம் மரியாதையாக பேச கற்று கொடுங்கள் . முதலில் நாம் மரியாதையாக பேச வேண்டும் . நாம் மனைவியை வாடி என்றால் குழந்தையும் வாடி என்றுதான் சொல்லும் .
9. குழந்தை முன் சண்டை போடாதிர்கள் . அது அதன் மனதில் காயத்தை ஏற்படுத்தும் .
10. அடுத்த குழந்தையை பற்றி தவறான எண்ணம் நம் குழந்தை மனதில் புகுதாதிர்கள் .
11. அடுத்தவர்களுக்கு கொடுத்து உண்ணும் பழக்கத்தை கற்றுகொடுங்கள் . இன்றய நிலையில் நெறைய குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்கள் சொல்லும் தவறான வார்த்தை " யாருக்கும் கொடுக்காம நீ மட்டும் சாப்பிடு " என்பதுதான்
எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து உள்ளேன் . உங்கள் கருத்தை சொல்லுங்கள் .
மாடல் : R.S.சரண்
இது ஒரு மீள் பதிவு
படித்து விட்டிர்களா ?
இலவசமாக RE-CHARGE செய்ய புதிய இரண்டு அப்ளிகேஷன்கள்...
No comments:
Post a Comment