Tuesday, 28 May 2013

TATA DOCOMO : "கஷ்ட"மர் கேர்






கடந்த முன்று வருடங்களுக்கு முன் TATA DOCOMO PREPAID SIM வாங்கினேன் . கால் கட்டணங்கள் வினாடிக்கு அரை பைசாவும் , SMS இலவசமாகவும் இருந்ததால் அதையே பயன்படுத்தினேன் . மற்ற நிருவனகளுடன் ஒப்பிடும் போது BOOSTER PACK மிகவும் கம்மி .( வோடபோன் இல் 225 ரூபாய் உள்ளது இதில் வெறும் 52 ரூபாய் தான் ). ஏதேனும் குறை என்றால் 198 க்கு அடித்தால் உடனே சரி செய்வார்கள் , தவறாக எடுத்த பணத்தை உடனே கொடுப்பார்கள் .

ஆனால் இப்பொழுது ???

நிகழ்ச்சி 1:

CALLER TUNE நான் கேட்காமல் வைத்து விட்டு 120 ரூபாய் எடுத்தார்கள் , புகார் செய்ததும் 30 திருப்பி கொடுத்தனர் . மீதி இரண்டு நாளில் கிடைக்கும் என்றனர் . இரண்டு நாள் கழித்து கேட்டதும் மீண்டும் அதே பதில் இன்னும் இன்ரண்டே நாள் என்று . மறுபடி கேட்ட பொழுது தவறாக எடுக்கபட்ட பணம் இரண்டு நாளில் திருப்பி கிடைக்காவிட்டால் அவ்வளவுதான் . திரும்ப அளிக்க எங்களுக்கு உரிமையில்லை என சொன்னார்கள் . அரை மணிநேரம் அவர்களுடன் வாதிட்டு பணத்தை திரும்ப பெற்றேன் .




நிகழ்ச்சி 2:

கடந்த மாதம் தினம் ஒரு ஜோக் என சொல்லி 10 ரூபாய் எடுத்தனர் . புகார் செய்த போது நீங்கள் SMS முலம் ACTIVATE செய்து உள்ளிர்கள் . இது உங்கள் தவறு என்றனர் . நான் SMS செய்யவில்லை என வாதடியபின் பணத்தை திருப்பி அளித்தனர் .
அடுத்தநாள் தினம் ஒரு ஆபர் என சொல்லி 30 ரூபாய் எடுத்தனர் . மீண்டும் புகார் செய்ய நீங்கள் GPRS பயன்படுத்தி உள்ளிர்கள் என சொன்னார்கள் . என் மொபில் பேசிக் மாடல் அதில் அந்த வசதி இல்லை என்றதும் சரி என சொல்லி 20 ரூபாய் திருப்பி தந்தார்கள் . மீதி 10 எங்கே என்றதுக்கு ஒருவருக்கு மாதத்திற்கு 30 மட்டுமே திருப்பி அளிக்க முடியும் என்றால்கள் .

இது என்ன கதை எடுப்பது எவ்வளவு வேண்டுமானாலும் ஆனால் கொடுப்பது முப்பதுதானாம் . ஒருவாரம் தொடர்ந்து வாதாடினேன் .
விளைவுகள் :

  1. முன்று வருடமாக இலவசமாக இருந்த SMS பைசாவாக மாற்ற பட்டது .
  2. கால் கட்டணம் 1.2 / S  என மாறியது ( BOOSTER போட்டும் )
  3. எந்த BOOSTER போட்டாலும் பணம் போகுமே தவிர அதன் பலன்கள் கிடைக்காது .

சில கேள்விகள் :

  1. எனக்கு ஒரு BOOSTER APLICABLE ஆகாது என்றால் எப்படி பணத்தை மட்டும் எடுத்து கொண்டு இது உங்களுக்கு கிடையாது என சொல்லலாம் ?
  2. ஒரு BOOSTER போடும் போது முன்பு உள்ள BOOSTER தானாகவே செயல் இழந்து விடும் . இதுதானே அனைத்து நிறுவனங்களின் நடைமுறை .
  3. வாடிக்கையாளரின் பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் எடுப்போம் ஆனால் மாதம் 30 மட்டுமே திருப்பு தருவோம் என்பது பகல் கொள்ளை அல்லவா ?
  4. தவறாக ACTIVATE செய்யபட்ட சர்வீசும் 24 ம்ணி நேரத்திர்க்குள் 155223 என்ற எண்ணின் மூலம் DEACTIVATE செய்யபட்டால் முழு பணமும் திருப்பி தரப்பட வேண்டும் என்பது TRAI விதிமுறை . அதை எப்படி மீறுகின்றனர் ?
  5. ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு ஒருதடவைதான் 198 சேவையை பயன்படுத்தலாமா ?( DOCOMO CUSTOMER TRY பண்ணிபாருங்க இரண்டால் தடவை முயற்சி செய்தால் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி பிஸியாக உள்ளார் என வரும் )
  6. வாடிக்களையாலரை கேட்காமல் எப்படி SMS மூலம் ஒரு சேவையை அவர்களே ACTIVATE செய்யலாம் . SMS படிக்க தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் ?

என்ன தீர்வு ?

நண்பர்களே இதுக்கு என்ன தீர்வு ? இதை முடிந்த அளவு FACEBOOK இல் SHARE  செய்யுங்கள் . உங்கள் கருத்தையும் சொல்லுங்கள் . இதுபோல உங்களுக்கு எதாவது நேர்ந்துள்ளதா ?






3 comments:

  1. டோகோமோ - கொள்ளை இல்லாமல் இருந்தது... பல மாதங்களாக இவர்களும் ஆரம்பித்து விட்டார்கள்... அதுவும் இல்லாமல் திடீரென்று பேசிக் கொண்டிருக்கும் போதே அடிக்கடி 'கட்' ஆகும்...!

    ReplyDelete
  2. உங்கள் மீது இறைவனின் சாம்தியும் சமாதானமும் நிலவுவதாக சகோ...

    டொகொமோ தற்போது மிகவும் மோசமாகிவிட்டது முற்றிலும் உண்மை. சில வாரங்களுக்கு முன்பு SMS pack 16 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தேன். Activate செய்யப்பட்டது என்று தகவலும் வந்தது. ஆனால் SMS அனுப்பினால் காசு எடுத்துக்கொண்டது. ரிபோர்ட் செய்ததற்கு அது இதுவென்று என்னனென்ன காரணமோ சொன்னார்கள். பிறகு கஸ்டமர் கேரையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு செட் செய்துவிட்டார்கள்.

    இது வேலைக்கு ஆகாது என்று "cheated by tata docomo" என்று தலைப்பிட்டு trai-க்கு ஒரு கருத்தும், http://www.consumercourt.in/ என்ற இணையத்தில் ஒரு புகாரையும், இப்படியாக நடவடிக்கை எடுத்திருக்கின்ரேன் என்று விளக்கி, வழக்கும் தொடுக்க போகின்றேன் என்று கூறி listen@tatadocomo.com என்ற முகவரிக்கு மெயில் தட்டிவிட்டேன். அடுத்த நாளே கால் செய்து compensation கொடுத்தார்கள்.

    ஆனால் பாமர மக்கள் என்ன செய்வார்கள்? முடிந்தவரை இந்த திருட்டை, திருட்டு பயல்களை அம்பலப்படுத்த வேண்டும். Trai-க்கு இவர்கள் குறித்த புகார்களை குவிக்க வேண்டும்.

    விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி..

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete