பலபெயர்கள் எப்படி வந்தது ஏன் வந்தது என நமக்கு தெரியாது ஆனாலும் நாம் தினமும் அதை பயன்படுத்தி வருகிறோம் . அப்படி பட்ட சில பெயர்களின் காரணத்தை நாம் இன்று பாப்போம் .
கடிகாரம்:
"கடிகை' என்றால் "நாழிகை' என்று பொருள். நாழிகையை அளக்கும் கருவி ஆரமாக வந்தபோது ""கடிகாரம்'' என்ற சொல் தோன்றியிருக்கலாம்.
கெஜட்:
1566-ஆம் ஆண்டு இத்தாலிய அரசாங்கத்தின் மிக முக்கியமான செய்திகளைப் பெரிய பலகையில் எழுதி வெனிஸ் நகரத்தின் முக்கியமான வீதிகளில் குறிப்பிட்ட இடங்களில் வைத்தார்கள். அதைப் பார்த்துப் படிக்கும்போது மக்களிடமிருந்து கட்டணமாக ""கெஜட்டா'' என்னும் இத்தாலிய நாணயம் வசூலிக்கப்பட்டது. பின்னர்தான் அரசாங்கச் செய்திப் பத்திரிகைக்கு ""கெஜட்'' எனப் பெயர் வந்து அதுவே நிலைத்துவிட்டது.

பாண்டேஜ்:
பண்டைக்காலத்தில் எகிப்தில் பிணங்களைப் பாதுகாத்து வைப்பதற்காகப் பிணத்தின் தலை முதல் கால்வரை போர்த்தி வைக்கும் பழக்கத்திலிருந்துதான், இன்று மருத்துவ உலகில் பழக்கத்திலிருக்கும் "பாண்டேஜ்' முறை வந்தது.

ஏக்கர்:
நிலத்தின் அளவைக் குறிக்க ஏக்கர், ஏக்ரா என்று சொல்கிறோம். அந்தச் சொற்கள் வழக்குக்கு வந்த விதம் இப்படித்தானாம். ""யோக்'' என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பே ஏக்கர், ஏக்கரா என்பது. "யோக்' என்றால் "நுகம்' என்பது பொருள். நுகத்தில் கட்டிய மாட்டைக் கொண்டு விடியற்காலை முதல் இருட்டும்வரை ஓட்டக்கூடிய நில அளவிற்குத்தான் "ஏக்கர்' என்ற பெயர் ஏற்பட்டது.

இதையும் படிக்கலாமே ?
நல்ல தகவல்கள் நண்பரே தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteதமிழ் மணம் வாக்களிக்க முடியவில்லையே...