இனைய உலகின் முடிசூடாமன்னன் கூகுள். அது நமக்கு பல வசதிகளை தருகிறது. அதில் சில விஷயங்கள் சும்மா நம்மை மகிழ்விக்க செய்யுமாறு வடிவமைத்துள்ளது. அது போல சில விஷயங்களை இன்று பார்ப்போம்.
இவை அனைத்திற்க்கும் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் உலவியில்(Browser) www.google.com என டைப் செய்யவும். அதில் வரும் Search Text Box இல் உங்களுக்கு வேண்டியதை டைப் செய்து I’am Feeling Lucky என்ற பட்டனை கிளிக் செய்யவும். சிறிது நேரம் காத்திருந்து பாருங்கள் என்ன நடக்குதுனு.
- Google Gravity:
இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள அனைத்து ஏழுத்துகளும் கீழே விழுந்துவிடும்.
- Epic Google:
இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள அனைத்து ஏழுத்துகளும் உங்கள் திரையின் அளவுக்கு பெரிதாக மாறிகொண்டே வரும்.
- Google Sphere:
இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள அனைத்து ஏழுத்துகளும் Search Text Box ஐ சுற்றி சுற்றி வரும்.
- Google Hacker:
இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள தகவல்கள் யாரோ ஒருவரால் மற்றவர்கள் புரிந்து கொள்ளமுடியாதபடி மாற்றி அமைக்கபட்டதுபோல் மாறிவிடும்.
- Annoying Google:
கூகுள் என்ற வார்த்தைக்கு பதில் Annoying Google என வரும் இன்னும் சில மாற்றங்களும் வரும்.
- Google Loco:
இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள கூகுள் லோகோ(LOGO) ஜாலியாக நடனமாடும்.
No comments:
Post a Comment